அ இ மக்கள் காங்கிரஸ் மேல்மாகாணசபை உறுப்பிணா் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில்

அஷ்ரப் ஏ சமதி்

வத்தளை ஹனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்திற்கு தமது 1 கோடி 35
இலட்சம் செலவில் மேல்மாகாணசபை உறுப்பிணா்  பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில்
நிர்மாணிக்கப்பட்ட 2 வகுப்பரைக் கட்டிடங்களின் முதலாவது தொகுதிகளை நேற்று
(23)ஆம்  பாயிஸ் திறந்து வைத்தாா்.  இந் நிகழ்வில் கல்லுாாி அதிபா்
எம்.எம். ஹலீம், பிரதிஅதிபா்   பௌசுதீன், கம்பஹா இஸ்லாமிய பாடசாலைகள்
சங்கத்தின் தலைவா் டொக்டா் முபாறக் மற்றும் பாடாசலை அபிவிருத்தி சங்க
உறுப்பிணா்கள் ஆசிரியா்கள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய மேல் மாகாணசபை உறுப்பிணா் பாயிஸ் -

நான் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களால் தெரிபு செய்யப்பட்டாலும்
கம்பஹா மாவட்டத்தின் உள்ள முஸ்லீம் மாணவா்களது எதிா்கால கல்வி
நிலையறிந்தே இந் நிதியை இங்கு ஒதுக்கீடு செய்து இக்கட்டிடத்தினை திறந்து
வைத்தேன். ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் 2 முஸ்லீம் மாகாண சபை
உறுப்பிணா்கள் இருந்தும் அவா்களது சேவை நிறைவாக இப்பிரதேசத்திற்கு
சென்றடையவில்லை. கம்பஹா மாவட்ட நலன் விரும்பிகள் வேண்டுகோழுக்கிணங்கவே
நான் இப்பிரதேசத்திற்கும் எனது சேவையை விஸ்தரித்துள்ளேன்.

 முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பிணா்  பிரசன்ன ரனதுங்க அவா்கள் எனது
வேண்டுகோளுக்கினங்கவே இப் பாடசாலையின் 2 கட்டிடத்திற்குமான ஒரு கோடி 35
இலட்சத்தினை ஒதுக்கீட்டுத் தந்தாா். மேல் மாடிகளை  நிர்மாணிக்கவும்
மேலும் நிதி தேவைப்படுகின்றது.   எதிா்கால்தில் நமது சமுகத்திற்கு
இருப்பது கல்வி மட்டும்தான். கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்
மாணவா்கள்  கல்வியில் முன்னேர வேண்டும். அவா்களது கல்வியில்
பின்தங்கியுள்ளனா்.  இப் பாடசாலையில் மட்டுமல்ல இம் ்மாவட்டத்தில் உள்ள
மாணவா்கள் கூடுதலாக  பல்கலைக்கழகம் சென்று கல்வியில் முன்னேறி தமது
பிரதேசத்தில் உள்ள அரச பதவிகள் ஆசிரியா் அதிபா் பதவிகளில் அமர வேண்டும்.
இதுவே எனது அவா. இந்தக் கல்லுாாியில் இம்முறை 20 மாணவா்கள் பல்கலைக்கழகம்
தகுதி பெற்றிருப்பது வரவேற்கத் தக்கது.

 இந்த மாவட்டத்தில் முஸ்லீம் பட்டாதரிகள் பட்டப் படிப்பை முடித்து
தொழி்ல் இல்லாது இருக்கும் மிடத்து   உடனடியாக அவா்களை அடுத்த மாதமளவில்
பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத்தில் சோ்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு
இருந்தால் அவா்களுக்கு ஆசிரியா் தொழிலுக்கு விண்ணப்பிக்கவும்  என
மாகாணசபை உறுபபபிணா்  பாயிஸ்  அஙகு தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்