உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறையில் நடத்தப்படும்.


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இனவாத சக்திகளுக்கு இடமில்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறையில் நடத்தப்படும். இதில் எவ்வித மாற்றங்களையும் நாம் செய்ய மாட்டோம் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய முறையில் அரசாங்கம் நடத்தவிருப்பதாக சில அரசியல் கட்சிகளும், இனவாத சக்திகளும் கூறிவருகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும். யார் என்ன கூறினாலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறையில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதற்கான காரணம் எல்லை நிர்ணயத்தில் உள்ள சிக்கல் நிலையாகும். இதனை முழுமையாகவும், சரியாகவும் மேற்கொள்ளாமல் எங்களால் தேர்தல் நடத்த முடியாது. அவ்வாறு தேர்தல் நடத்துவதாக இருந்தால் நாம் ஆட்சி மாற்றம் நடந்தவுடன் தேர்தலை நடத்தி இருப்போம் என அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெகு விரைவில் நடாத்த நடவடிக்கை எடுக்குமாறும், எல்லை நிர்ணய பிரச்சினைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தீர்க்குமாறும் ஜனாதிபதி தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, எல்லை நிர்ணயம் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெற்றதன் பின்னர் அது குறித்த அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்படும். இதன் பின்னர்
தேர்தல் வட்டார முறையில் எதிர் வரும் ஜுலை மாதமளவில் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்