இந்திய மண்ணில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு


ஜனவரி மாதம் 16ம் 17ம் திகதி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 

பாண்டிச்சேரி   மாநகரம் விழாக்கோலம் பூணுகிறது

இலங்கையிலிருந்து  அமைச்சர்  இராதா, மாவை, சிறிதரன், சரவணபவன்,. செந்தில்வேலவர்  கலந்துகொள்வர்.
 
கடந்த பல வருடங்களாக,  உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து வெற்றிகரமாகசெயற்பட்டு வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பல சர்வதேச மாநாடுகளையும்கருத்தரங்குகளையும்  கடந்த காலங்களில் நடத்தியுள்ளது. இன, மத வேறுபாடு  இல்லாதகோட்பாடுகளை தனது தாராகமந்திரமாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டையம் தமிழ் மொழியையும்பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் எமது இயக்கத்திற்கு உலகெங்கும் வாழும் பலகல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்இ கலை இலக்கியவாதிகள்,  நிறுவனங்களில் நிர்வாகப்பதவிகளை வகித்து வரும் செயற்பாட்டடாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த நிபுணத்துவம்கொண்டவர்கள் என அனைத்து தரப்பினர்களினதும் ஆதரவூம் ஆசியும் உள்ளது.
 
இவ்வாறான ஒரு தமிழ் மொழி சார்ந்த சர்வதேச அமைப்பு நடத்தவுள்ள  இரண்டு நாள் மாநாடு இந்தியாவின் தமிழ் மணம் கமழும்  யூனியன் பிரதேசமான புதுவையில் பாண்டிச்சேரி மாநகரில்ஜனவரி மாதம் 16ம் 17ம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்   நடைபெறவுள்ளது. இந்தமாபெரும் மாநாட்டை அங்கு நடத்துவதற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்தியக்கிளையின் மூத்த உறுப்பினர்களாக விளங்கும் திருமதி மாலதி ராஜவேலு (தலைவர்), முனைவர் பஞ்.இராமலிங்கம் (செயலாளர், மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவருமாக தீவிரமாக உழைத்துவருகின்றார்கள். மேலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க புதுவை அரசாங்கமும் அதன்முதலமைச்சரும் ஆக்கபூர்வமான ஆதரவையும் வழங்கியிருப்பதும்,  பல மத்திய மற்றும் மாநிலஅமைச்சர்களும் அவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருப்பதும் உலகத் தமிழ் பண்பாட்டுஇயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் பங்களிப்பு என்றே கருதவேண்டியுள்ளது.
 
மேலும் மேற்படி மாநாட்டில் இலங்கையிலிருந்தும் பல பிரமுகர்களும் தமிழ் அறிஞர்களும்  வருகைதரவிருப்பது மகிழ்ச்சிதரும் விடயமாகும். எமது தாயகத்தில் அரச  பயங்கரவாதத்தின்தாக்கத்திலிருந்து  இன்னும் மீள முடியாமல் தவிக்கும் எமது மக்களின்; புண்களுக்கு  சிறிதேனும்தைலத்தை தடவும் ஒரு முயற்சியாகவும் இந்த மாநாடு அமைய வேண்டும் என்ற நோக்கோடுஇம்மகாநாட்டில் இலங்கையிலிருந்து விசேட அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்றஉறுப்பினர் சிவஞானம்  சிறிதரன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம்சரவணபவன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர்கலந்து கொள்வர்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த இரண்டு  நாள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை புலம்பெயர்நாடுகளில் சிறப்பாகச் செய்து வரும் குழுவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர்கனடா வாழ் திரு வி. சு. துரைராஜாவும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம்ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் முக்கிய பொறுப்புக்களை ஏற்று செயற்பட்டு வருகின்றார்கள். இவர்கள்  இருவருக்கும்  ஒத்தாசையாக இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை  பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என்.  லோகேந்திரலிங்கமும்  செயற்பட்டு வருகின்றார்.
 
இந்த  புத்தாண்டாம் 2016 ல் எமது உலகத் தமிழ் பண்பாட்டு  இயக்கத்திற்கு  ஒரு ஆரோக்கியமானஆரம்பமாக இந்திய மண்ணின் புதுவை மாநிலத்தில் உள்ள பாண்டிச்சேரி தலைநகரில்நடைபெறவூள்ள  இரண்டுநாள் மாநாடுஇ இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும்ஒரு செயற்பாடாக அமைகின்றது உலகில் தமிழ் மொழியினதும் தமிழ்ப் பண்பாட்டினதும் காவல்தெய்வங்களாக உள்ள இந்திய தேசமும் தமிழ்நாடு என்னும் எமது தாய்த்
தம்ழகமும் அமைந்துள்ள இந்திய மண்ணில் தமிழ் மொழியின் நறுமணம் கமழும் பாண்டிச்சேரியில்,எமது இயக்கத்தின் அகிலத்து அங்கத்தவர்களும் அறிஞர்களும் கூடிப் பேசி, ஆராய்ந்து நல்லதிட்டங்களை அறிமுகம் செய்யக் கிடைத்த  இந்த அரிய சந்தர்ப்பம் எம்மை சற்று உயரத்திற்குஅழைத்துச் செல்லும் ஒரு ஊக்கியாக அமையும் என்றே அனைத்து தரப்பினரும்  எதிர்பார்க்கின்றார்கள்
 
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் 17ம் திகதிகளில் பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ள  கருத்தரங்குகலையரங்கு மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பேரவை மாநாடு ஆகியவையும்  மற்றுமசந்திப்புக்களும், தொடர்பான விபரங்களுக்கு imtc1974@yahoo.com /  raja@cfsginc.companchramalingam@gmail.com  மின்னஞ்சல் முகவரிகளோடு  தொடர்பு கொள்ளலாம்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்