பொங்கியெழுந்த றிசாத், அடங்கினார் மங்கள


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்தாய்வின் போது, பக்தாத்தில் உள்ள இலங்கைதூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொங்கியெழுந்துள்ள அமைச்சர் றிசாத் அதற்கு பலமான எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

 இதுகுறித்து ஆராய்ந்ததில்  கிடைத்த மேலதிக தகவல்கள் வருமாறு,

பயங்கரவாத புலிகளை அழிப்பதில் முஸ்லிம் நாடுகள் வழங்கிய மாபெரும் பங்களிப்பை இதன்போது ஞாபகமூட்டிய றிசாத், தேயிலை ஏற்றுமதியில் ஈராக் முக்கிய நாடென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மாவீரர் சதாம் ஹசைன் இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகளையும் குறிப்பிட்டுச் சொன்ன அமைச்சர் றிசாத், அப்படியென்றால் இலங்கையில் இஸ்ரேல்தூதரகத்தையா திறக்கப்போகிறீர்கள: என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பக்தாத்திலுள்ள இலங்கைத் தூரகத்தை ஒருபோதும் மூடலாகாது எனவும் வலியுறுத்தி, தனது எதிர்ப்பையும் மீறி பக்தாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்படுவதற்கு அமைச்சுரவை அனுமதி வழங்குமாயின்,  குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் றிசாத் பதியுதீனின் எதிர்ப்புடன்தான் பக்தாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளடங்க வேண்டும் என வாதிட்டு  அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் முஸ்லிம் விரோதப் போக்கை இந்நாட்டு முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் கண்டு கொள்வார்கள் என ஆத்திரமாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர்களான ராஜித்த சேனாரத்தினா, தலதா அத்துக்கோரள, அநுர பிரியதர்சன யாப்பா, பைசர் முஸ்தபா ஆகியோரும் றிசாத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்து அவருடன் இணைந்துள்ளனர்.

பக்தாத்தில் உள்ள இலங்கைத் துதரகம் மூடப்பட வேண்டுமென அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பித்த மங்கள சமரவீரவுக்கு ஆதரவாக, அமைச்சர் நவீன் திசாநாயக்கா உள்ளிட்ட சிலரும் வாதிட்டுள்ளனர்.

 றிசாத் எழுப்பிய எதிர்ப்பினால் அமைச்சரவை இரண்டாவதை உணர்ந்த மைத்திரிபால சிறிசேனா, ரணில் ஆகியோர் உடனடியாக தலையிட்டு பக்தாத்தில் உள்ள இலங்கைத் துதரகத்தை தற்போதைக்கு மூடுவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அறியவருகிறது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்