Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

மு.கா எம்.பி ஹபீஸ் அ.இ.ம.காவுடன் இணைவு ??



N
 பூமுதீன் மலீக் -
முகா தேசியப்பட்டியல் எம்பியும் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான டொக்டர் ஹபீஸ் அ.இ.ம.கா வில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

ஹபீஸ் எம்பிக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைத்துவ சபைக்குமிடையில் குறித்த இணைவு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஹபீஸூக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைகளுக்குமான முதற்தடவையான சந்திப்பு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்ற சிற்றுண்டி அறையில் இடம்பெற்றுள்ளது.

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அசைமச்சருமான ரிசாத் பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர்அலி ஆகியோர் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் உரையாடிக்கொண்டிருந்த வேளை - முகா எம்பி ஹபீஸூம் வருகை தந்திருந்தார்.

இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த டொக்டர் ஹபீஸ் மிகவும் சோர்ந்த நிலையில் அப்போது காணப்பட்டார்.

'என்ன டொக்டர்? மிகவும் சோர்ந்த நிலையில் இருக்கின்றீர்கள் என ரிசாதும் அமீரலியும் அப்போது வினவினர்.

அந்த நேரம் தான் முதற்தடவையாக கட்சிக்குள் தனக்கு ஏற்பட்டுள்ள உளக்குமுறல்களை அள்ளிக்கொட்டினார் டொக்டர் ஹபீஸ்.

'நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களைக் கௌரவப்படுத்த வேண்டி பொறுப்பு எமக்கு உள்ளது. என இருவரும் அந்த நேரம் ஆறுதல் வார்த்தைகளை டொக்டர் ஹபீஸூக்கு கூறினர்.

இது டொக்டர் ஹபீஸூக்கு மேலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு இவர்கள் மூவரும் உரையாடிக் கொண்டிருப்பதை அவதானித்த முகா எம்பிக்களில் ஒருவர் உடனே பாராளுமன்றத்திலிருந்த அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து ஏதோ முணு முணுத்துள்ளார்.

அந்த எம்பி ' தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் ஏதோ நிச்சயமாக கூறுவார் என புரிந்து கொண்ட டொக்டர் ஹபீஸ் உடனே அவ்விடத்தலிருந்து வெளியேறி நேராக தலைவர் ஹக்கீமைச் சந்தித்தார்.

'தம்பி, ரிசாதுடனும் அமீரலியுடனும் நான் சினேகபூர்வமாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், அவர்களது கட்சியில் இணையுமாறு என்னை வேண்டினார்கள். அவ்வளவு தான் நடந்தது. என்றால் டொக்டர் ஹபீஸ்.

இவ்வாறு டொக்டர் ஹபீஸ் கூறிய போது ஆ.... அப்படியா....? என அமைச்சர் ஹக்கீம் வெளிப்படையாக கேட்டாலும்கூட - அமைச்சர் ஹக்கீமின் உள் மனதில் ஹபீஸ் தொடர்பில் சந்தேகம் ஒன்று தோன்றியது.

இவ்வாறான சம்பவத்தின் பின்னணியில் தான் அ.இ.ம.காவுடன் இணைவது தொடர்பில் அடுத்தடுத்து பேச்சு நடத்தும் எண்ணமும் டொக்டர் ஹபீஸூக்கு ஏற்பட்டுள்ளது.

அ.இ.ம.காவுடன் டொக்டர் ஹபீஸ் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் படி, தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் பாராளுமன்ற அங்கத்தவராக இருப்பதென்றும் கூடியவிரைவில் பிரதியமைச்சுப் பதவியொன்றை பெறுதல் என்றும் அச்சந்திப்பின் போது கொள்கையளவில்; இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணத்தின் கொழும்பு , களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களுக்குமான பொறுப்பாளராக டொக்டர் ஹபீஸை நியமிக்கலாம் என்ற கொள்கையளவான தீர்மானமுளம் அதன் போது எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் நம்பகரமாக தெரியவருகின்றது.

முகா தேசியப்பட்டியல் எம்பியாக டொக்டர் ஹபீஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த பதவியானது அவருக்கு தற்காலிகமானதே என முகா அறிவித்துள்ளது. 

அந்த வகையில் ஹபீஸ் தனது எம்பிப் பதவியை இராஜிநாமா செய்யும் பட்சத்தில் முன்னர் எம்பியாக இருந்தவர் என்ற ரீதியில் அவருக்கு மிகப்பெறுமதிமிக்க உயர் பதவி ஒன்றை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொடுக்க வேண்டும். 

ஆனால் இதற்கு மாற்றமாக தனது ஊடகச் செயலாளர் பதவியை மீண்டும் பொறுப்பெடுத்துக் கொள்ளுமாறும் கட்சிப் பத்திரிகையான 'மரம்' என்ற சஞ்சிகைக்கு பொறுப்பாசிரியராக இருக்குமாறும் ஹபீஸை வேண்டும் எண்ணமே அமைச்சர் ஹக்கீமிடம் தற்போது காணப்படுகின்றது.

அமைச்சர் ஹக்கீமின் இந்த எண்ணப்பாட்டில் டொக்டர் ஹபீஸ் மிகவும் மன வேதனையடைந்துள்ளார். இதனை ஒரு கௌரவ பிரச்சினையாகவும் பார்க்க அவர் எத்தணித்துள்ளார்.

முகாவின் வளர்ச்சிக்காகவும் தனது சகோதரரான அமைச்சர் ஹக்கீமின் தலைமையை உறுதிப்படுத்துவதற்காகவும் பெரும் பங்காற்றிருக்கின்றேன்.

அப்படிப்பட்ட நான் தொடர்ந்து ஐந்து வருடங்கள் எம்பியாக இருப்பதற்கு தகுதியுள்ளவன். எக்காரணம் கொண்டும் இராஜிநாமா செய்ய மாட்டேன் என டொக்டர் ஹபீஸ் தனது குடும்ப உறவுகளுடன் உறுதியாக கூறியிருப்பதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.

டொக்டர் ஹபீஸின் இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த முதலாம் திகதி புதுவருட சிறப்பு நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் டொக்டர் ஹபீஸூம் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் சிலர் டொக்டர் ஹபீஸை அணுகி, 'வில்பத்து விவகாரத்தில் தலைவர் ஹக்கீம் ஏன் மௌனம் காக்கின்றார்?, ரிசாத் பதியுதீன் அதற்கு எதிராக போக்கொடி தூக்கிக் கொண்டிருந்த வேளை உங்கள் சகோதரர் தனது பேரப்பிள்ளையுடன் விளையாடும் புகைப்படத்தை அதே தினம் தனது பேஸ்புக்கில் பதிவிடுகின்றார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என டொக்டர் ஹபீஸை நோக்கி வினவினர்?

அது தானப்பா எனக்கும் புரியவில்லை? தொடர்ச்சியாக மௌனமே காத்துவருகின்றார். ரிசாதின் அரசியல் வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்து செல்கின்றது என்று கூறி பெருமூச்சு விட்டவராக அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றுள்ளார் டொக்டர் ஹபீஸ்.

டொக்டர் ஹபீஸ் குறித்த இந்த சம்பவமும் டொக்டர் ஹபீஸ் - மிக விரைவில் அ.இ.ம.காவுடன் இணைந்து கொள்ளலாம் என்ற தகவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் ஊடகத் துறையினர் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய