ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்று முதலாவது ஆண்டு பூர்த்தி

Ashraff.A. Samad

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக
பதவியேற்று  முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்ணிட்டு எதிர்வரும் 8ஆம் 9ஆம்
திகதிகளில் ஜனாதிபதி அலுவலகம், பிரதம மந்திரி, மற்றும் ஊடக அமைச்சும்
இணைந்து பல்வேறு தேசிய நிகழ்வுகளை; நடாத்த ஏற்பர்டுகள் செய்துள்ளன. என
ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க தெரிவித்தார்.
நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டிலேயே
அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் -
எதிர்வரும் 8ஆம் திகதி  மு.ப 07.00 மணிக்கு களுத்துறை போதிராஜயனன்
விகாரையிலும், 10 30 மணிக்கு கோட்டே நாக விகாரையிலும் பௌத்த மத
நிகழ்வுகள்  11.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பொது மக்கள் தொடர்பு
நேரடியாக மக்கள் ஜனாதிபதியை தொடர்பு கொள்ளக்கூடிய அலுவலகம் திறந்து
வைக்கப்படும்.
பி.பகல் 02.00-05.00 மணிக்கு மைத்திரி ஆட்சியில் ஒரு வருட நிகழ்வுகள்
எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய வைபவம் பண்டார நாயக்க ஞாபகார்த்த
சர்வதேச மண்டபத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் ஜனாதிபதி
மைத்திரிபாலசிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்  மகாத்மா
காந்தியின் பேரனும் முன்னாள் இலங்கையின். தென்ஆபிரிக்கா, இந்தியா
பிராந்திய ஆளுனராக கடமையாற்றிய  இந்திய உயர் ஸ்தாணிகர் கோபால் கிருஸ்னா
காந்தி ஆகியோர்கள்; விசேட உரை நிகழ்த்துவார்கள்.
இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பௌத்தமத பிங்கம நிகழ்வுகளும்
நடைபெற உள்ளன.
ஜனவரி 09ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில்   அன்னதானம் வழங்கும் நிகழ்வும்
மு.பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பினை
ஸ்தாபித்தல் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உரையாற்றுதல்.
அத்துடன் பி.பகல் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாச்சார
நிகழ்வுகளும் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.
அத்துடன் நாடுபூராவும் மாவட்ட செயலாளர் மட்டத்தில் மத நிகழ்வுகள்
நடாத்தப்படும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்