முத்து சிலாத்துறையை மீட்க 700 தபால் அட்டைகள் ஜனாதிபதிக்கு...!!!


சிலாவத்துறை முஸ்லிம்கள்
ஜனாதிபதிக்கு, அழுத்தம்கொடுக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்..!!!
மன்னார் - சிலாவத்துறையின் பிரதான
குடியிருப்புப் பகுதியிலிருந்து கடற்படையினரை அகற்றி அங்கு மக்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துமாறு கோரி சிலாவத்துறை மக்கள் போஸ்ட் கார்ட்
மூலம் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனாவைக் கோரும் ஜனநாயக ரீதியான போராட்டத்தை 2016.01.18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கின்றனர்.
சிலாவத்துறை மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளால்
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 2009 ஆம் ஆண்டு யுத்தம்
முடிவடைந்ததும் படிப்படியாக மீள்குடியேறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சிலாவத்துறையைச் சேர்ந்த சுமார் 700 குடும்பங்களும் மீள்குடியேற முடியாத வகையில் கடற்படையினர் மக்களின் சொந்தக் காணிகளில் முகாம் அமைத்து
நிலைகொண்டுள்ளனர்.
எனவே கடற்படையினரை அங்கிருந்து அகற்றி சிலாவத்துறை மக்களின்
மீள்குடியேற்றத்திற்கு உதவிடுமாறு கோரி நாட்டின் பல பாகங்களிலும் வாழும் சிலாவத்துறையைச் சேர்ந்த சுமார் 700 குடும்பங்கள் போஸ்ட் கார்ட் மூலம் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றனர்.
சிலாவத்துறை மக்கள்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்