ஜனாதிபதி மைத்திரியின் மருமகனின் கார் - விலை 14 கோடி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் ஒருவர் உலகில் மிகவும் பெறுமதியான வாகனங்களில் ஒன்றான Maybach ரக கார்கள் இரண்டை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த ரக கார் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை ரூபா பெறுமதியில் 14 கோடிக்கும் மேல் எனவும் கூறப்படுகிறது.

இந்த ரக வாகனங்கள் சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 300 கிலோ மீற்றர் தூரத்தை சென்றடைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ச ஆட்சியில் அவரது புதல்வர்கள் நடந்து கொண்ட விதம், அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து, அதற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் அதிகாரத்தை கோரிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில்,

ராஜபக்ச புதல்வர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், தற்போதைய ஜனாதிபதியின் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட தொடங்கியுள்ளமைம அரசியல் துறையில் பேசப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்