எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்திக்கவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரணிலும் பசிலும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைப்பது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதிலளித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், இரகசியமான முறையில் ரணிலை சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் நான் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள்அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளது திருமண வைபவத்தில் கண்டேன். அமைச்சர் ராஜித சேனாரட்வை சில தடவைகள் சந்தித்தேன் மற்றும் சிறையில் இருக்கும் போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்னை வந்து பார்வையிட்டார். இவர்களைத் தவிர ஆளும் கட்சியின் எவரையும் நான் சந்திக்கவில்லை. எவ்வாறெனினும் என்னைப