கல்முனை மாநகரமும், உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும் நுால் வெளியிடப்பட்டது

அஸ்ரப் ஏ சமத்கல்முனை மாநகர சபை உறுப்பிணா் ஏ.எம். பரக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரமும், உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும் என்ற நுால் இன்று (21) கொழும்பு 2 ல் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வு தலைவா் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. நுாலின் முதற் பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். நுால் பற்றி  மன்சூர் . ஏ காதா், தமிழ் மிரா் பத்திரிகை ஆசிரியா் ஏ. மதன், முஸ்டீன், அஸ்ரப் சிகாப்தீன், கல்முனை மேயா் நிசாம் காரியப்பா் மற்றும் கல்முனை எதிா்க்டசித் தலைவர் ஆகியோறும் நுால் பற்றியும் உரையாற்றினாா்கள். 

இந் நுால் கவிதை, அல்லது சிறுகதைப் புத்தகமல்ல, முஸ்லீம் கங்கிரஸ்  கட்சி குழு அமைத்து எழுத வேண்டிய நுாலை ஒரு தனிமனிதனான பரக்கத்துல்லாஹ் கல்முனை மாநகரம் பற்றிய பல தஸ்தவோஜ-களை எல்லாம் சோ்த்து இந்த கட்சிக்காக கல்முனை மநாகரம் பற்றி நுாலொன்றை எழுதியுள்ளாா். கல்முனையும் முஸ்லீம் காங்கிரசும் பரக்கத்துல்லாவைப் பாராட்ட வேண்டும் இதுவரை முஸ்லீம் காங்கிரசில் உள்ள உறுப்பிணா்கள் அமைப்புக்கள்  இது போன்ற ஒரு  வரலாற்று நுால்களை எழுதவில்லை யெனவும் .  என சிரேஸ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான அஸ்ரப் சிகாப்தீன் அங்கு தெரிவித்தாா்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்