ஆனந்த தேரருடன் கொழும்பில் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் யார்?(இப்னு மலீக்)

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆனந்த தேரருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்குமிடையிலான விவாதம் இன்று நாடுபூராகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமுக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் என்பனவற்றிலெல்லாம் அந்த விவாதம் குறித்த எதிரும் புதிருமான கருத்துக்களே மேலோங்கி வருகின்றன.

வில்பத்து விவகாரம் கடந்த சுமார் மூன்று வருடங்களாக நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது.
ஜனாதிபதி , அமைச்சர்கள் மற்றும் சிங்கள மக்கள் ரிசாத் பதியுதீன் கூறுவது போன்று வில்பத்து வனப்பகுதிக்குள் ஒரு அங்குல காணியையேனும் முஸ்லிம்கள் அடாத்தாக பிடிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பும் இந்த விடயத்திலிருந்து அவர்களை திசை திருப்பும் வகையில் ஒரு சில சிங்கள இனவாதக் குழுக்குள் அவ்வப்போது ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு முயற்சித்தும் வருகின்றனர்.

பொது பலசேனா தொடங்கி இன்று ஆனந்த தேரர் வரை வில்பத்து விடயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு தகுந்த பதிலை வழங்கி இனவாதிகளின் கருத்து சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோதப் போக்கை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் ரிசாத் பதியுதீனும் இவ்வாறான விவாதங்களில் பங்கு கொண்டு அவர்களின் கருத்தை பரவவிடாமல் தடுத்தும் வருகின்றார்.

வில்பத்து விவகாரத்தின் ஊடாக ரிசாத் பதியுதீனின் அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும், ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் தலைவராக ரிசாத் பதியுதீன் மாறி விடக் கூடாது என்ற புலம் பெயர்ந்த ஒரு சிலரின் அஜந்தாவுக்கு அடிபணிந்தே இந்த திட்டமிட்ட இனவாதக் கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

புலம்பெயர்ந்த அந்த இனவாதிகளின் அஜந்தாக்களுக்கு முஸ்லிம் சமுகத்தில் உள்ள ஓர் இரு அரசியல் வாதிகளும் துணை போயிருக்கும் சம்பவம் தான் இந்த ஆணந்த தேரரின் விவாதத்திற்கு பின்னால் உள்ள இரகசிய விடயமாக உள்ளது.

ஆனந்த தேரருடன் விவாதம் மேற்கொள்ள ரிசாத் பதியுதீன் தயார் என அறிவித்த மறு கணமே ரிசாதை அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் அந்த ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளும், போலி முறைப்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து ஆனந்த தேரரை சந்தித்து உரையாடியுள்ளமை தற்போது அம்பலத்திற் வந்துள்;ளது.

கொழும்பில் உள்ள மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் மேசொன்ன தரப்பு ஆனந்த தேரரை சந்தித்து தொடச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தற்போது அறியவருகின்றது.
விவாதத்திற்கு தயார் என அறிவித்த மறு நாள் அந்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் ஆனந்த தேரருக்குமிடையிலான சந்திப்பு முதற்கட்டமாக இடம்பெற்றுள்ளது.

ஹிரு தொலைக்காட்சி விவாதத்தின்போது ரிசாத் பதியுதீனை எவ்வழியிலேனும் தோற்கடித்து - முஸ்லிம் சமுகத்தில் ரிசாதுக்கு இருக்கும் நன்மதிப்பை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற பொதுவான தீர்மானம் எடுக்கப்பட்டே ஆனந்த தேரர் விவாதத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் மூடிய அறைக்குள் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது - ரிசாதுக்கு எதிராக ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்ட முறைப்பாட்டு ஆவனங்களுடன் புனித சிங்கள மொழி பெயர்;ப்பு குர்ஆனும் கையளிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து விடயத்தில் முஸ்லிம்கள் காடுகளை பிடிக்கின்றார்கள் என்பது திரிவுபடுத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என்பதினால் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக அந்த விடயத்தில் குற்றங்களை முன்வைக்க முடியாது.

எனினும் விவாதத்தின் இறுதியில் குறித்த போலி முறைப்பாட்டு ஆவனங்களை சமர்ப்பித்து விவாதித்து இறுதியில் குர்ஆனை முன்வைத்து ரிசாதிடம் சத்தியம் வாங்கி தோற்கடிக்க வேண்டும் என்பதே இவர்களுக்கிடையிலான இரண்டாவது சந்திப்பினதும் தொலைபேசி உரையாடல்களினதும் இறுதித் தீர்மானமாக அமைந்திருந்ததாக அறிய வருகின்றது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் வாதியே இந்த ஆவணங்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்துள்ளார் என்பது தற்போது கசிந்துள்ளது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அரசியல் வாதியுடன் வன்னியைச் சேர்ந்த இருவரும் கிழக்கைச் சேர்ந்த ஒருவரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்த தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வில்பத்து விவகாரத்தில் ரிசாத் மீது குற்றம் சுமத்த முடியாது. அதனால் அவரது நற்பெயருக்கு கழங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இறுதித் தருணத்தில் போலிக் குற்சாட்டை முன்வைத்து குர்ஆனில் சத்தியம் செய்யுமாறு ஆனந்த தேரரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குர்ஆனில் சத்தியம் செய்ய ரிசாத் பதியுதீன் முன்வருவாரா என அப்போது ஆனந்த தேரர் அந்த முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் வினவிய போது ' ஆம்.... நிச்சயம் அவர் குர்ஆன் என்றால் அச்சப்படுபவர.; அதனால் அவர் நிச்சயமாக குர்ஆனில் சத்தியம் செய்ய மாட்டார்.' என அவர்கள் ஆனந்த தேரருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இங்கு ரிசாத் பதியுதீன் குர்ஆன் மீது சத்தியம் செய்யாதது ஏனெனில், அல்லாஹ்வைத் தவிர வேறு எதன் மீதும் சத்தியம் செய்வதை இஸ்லாம் வெறுப்பதும் கண்டிப்பதனாலாகும். இந்த விடயத்தை உலமாக்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த பின்னணியில் தான் வில்பத்து விவகாரத்தில் ரிசாத் மீது குற்றம் சுமத்த தன்னிடம் எந்தவொரு உண்மையான ஆதாரமும் இல்லாத சூழ்நிலையில் , அதனை நன்கு உணர்ந்ததன் பின்பாடு தான் வேறு வழியின்றி குர்ஆனில் சத்தியம் செய்யுமாறு ஆனந்த தேரர்  வேண்டிநின்றார்.

ஹிரு தொலைக்காட்சி விவாதத்தின் நோக்கம் வில்பத்து காட்டில் முஸ்லிம்கள் காணி பிடிக்கின்றார்கள், ரிசாதும் அம்மக்களும் குடு வியாபாரம் செய்கின்றார்கள் , தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவைகள் இவைகள் என்பதை நிரூபிப்பதுதான் .

ஆனால் இந்த மூன்று விடயங்களையும் ஆந்த தேரர் பெரிதாக அலட்டிக்கொண்டதாகவே விளங்கவில்லை. வில்பத்து வனத்தை எவ்வாறு ஆனந்த தேரர் புனித பூமி என்று கூறுகின்றாரோ அதேபோன்ற பல புனித பூமிகள் அழிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் நீங்களோ அல்லது சூழலியலாளர்களோ பேசுவதில்லை என ரிசாத் பதியுதீன் பல பத்திரிகை அறிக்கைகளை சுட்டிக் காட்டி ஆதார பூர்வமாக முன்வைத்த பிற்பாடு தான் கதிகலங்கிப் போன ஆனந்த தேரர் இறுதியாக குர்ஆனை தூக்கும் முடிவுக்கு வந்ததும் எமக்கு நேரடியாக அவதானிக்க முடிந்த நிகழ்வாகும்.

வில்பத்து விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியிடம் ஆனந்த தேரர் சமர்ப்பித்திருந்த அறிக்கைகள் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் தான் என்பதும் தற்போது  இந்த விவாதத்தில் அவர் கொண்டு வந்திருந்ததும் அதே முஸ்லிம் கறுப்பாடுகளால் சோடிக்கப்பட்ட ஆவணங்கள் தான் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் கறுப்பாடுகளான மேற்சொன்ன அந்த நபர்களால் அப்பாவி வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது திட்டமிட்ட அடிப்படையில் இன்னும் இன்னும் பின்னோக்கியே செல்லும் என்பதை உணர்ந்துமே மேற்சொன்ன முஸ்லிம் கறுப்பாடுகள் இந்த சதித்திட்டத்தில் இறங்கியுள்ளார்கள் என்பதும் புலனாகின்றது.

ரிசாதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த மேற்சொன்ன அரசியல் வாதிகளே ஆனந்த தேரரின் வடிவில் இந்த விவாதத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

மாறாக ஆனந்த தேரர் என்பவர் இங்கு வெறும் பொம்மை மாத்திரமே.
முஸ்லிம் கறுப்பாடுகளான மேசொன்ன நால்வர், ஹிரு ஊடகவியலாளர்கள் மூவர் மற்றும் ஆனந்த தேரர் என எட்டு இனவாதிகளுடனும்  இக்குழுவின் அடிவருடிகளான ஏனைய சமுகத் துரோகிகளுடனும் ரிசாத் பதியுதீன் புரிந்த விவாதம் முஸ்லிம் சமுகத்தால் என்றுமே காலத்தால் அழியாத தலைமைத்துவ ஆளுமையை; பறை சாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்