மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும்.

)

இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மக்களை இணை வைப்பிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்ததோடு அவர்களை முஸ்லிம்களாக்கி அதன் பின்னர் இஸ்லாத்தை பூரணமாக கற்றுக்கொடுத்து ஆட்சியதிகாரத்தையும் நிலை நாட்டினார்கள். இந்த வகையில் நபி சுலைமான், நபி தாவுத், நபி யுசுப்  இறுதி நபி முஹம்மத் என பல நபிமார் ஆட்சியாளர்களாகவும், மன்னர்களாகவும் மந்திரிமார்களாகவும், ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார்கள். 
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் மீண்டும் மீண்டும்; அவர்களுக்கு தஃவா என்ற அழைப்புப்பணியை செய்து கொண்டிருக்கவில்லை. தஃவா என்பதே முஸ்லிமல்லாத மக்களுக்குத்தான். முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கவே முற்பட்டார்கள். சில வேளைகளில் அவர்களிடையே இணைவைப்பு நடந்த போதும் அதற்காக பொறுமை காத்ததுடன் அதிலிருந்து அவர்களை திருத்துவது மட்டுமே கடமை என இராது இணை வைப்பை சுட்டிக்காட்டுவதுடன் முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் அழைப்பதிலேயே தமது கவனத்தை அதிகம் செலுத்தினர். இதனை நபி மூசாவின் வரலாறு நமக்கு சொல்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் காளை மாட்டு வணக்கம் வந்த போது அவர்களுக்கு அறிவு புகட்டிய நபி மூசா தொடர்ந்து பிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் இஸ்லாத்தின் பால் அழைப்பதிலேயே கவனம் செலுத்தினார். 
இன்று இலங்கையில் உள்ள அனைத்து உலமாக்களும் முஸ்லிம்கள் மத்தியிலேயே சுற்றிச்சுற்றி பிரச்சாரம்  செய்கின்றனர். இது நபிமார் வழிமுறைக்கு மாற்றமானது.  அத்தோடு இஸ்லாம் என்பது ஆட்சியதிகாரத்தை கொண்டு வரும் மார்க்கம் என்பதை மறைத்து இஸ்லாத்தின் சில கிரியைகள் மட்டுமே இஸ்லாம் என காட்டிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 20 வயது முதல் இறக்கும் வரை இந்த மௌலவிமார் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர  இஸ்லாத்தை பிற மத சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்ல அஞ்சுகிறார்கள். கேட்டால் முதலில் முஸ்லிம்களை திருத்த வேண்டும் என நபி முறைக்கு மாற்றமாக சொல்கிறார்கள்.
நபி சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம் அவர்கள் இஸ்லாமிய அரசியல் கட்சியை (ஹிஸ்புள்ளாஹ் - அள்ளாஹ்வின் கட்சியை)ஆரம்பித்து அதன் கட்டமைப்பை மதீனாவில் கட்டி எழுப்பிய பின் அங்கு முனாபிக்குகளும் சிலர் இருந்தனர். களவு, விபச்சாரம் போன்ற செயல்களில் ஈடுபடும் மிகக் குறைந்த சிலரும் இருந்தனர். ஆனாலும்  முஸ்லிம்களை முதலில் திருத்தினால் போதும் என அவர்கள் இருக்கவில்லை. உலகம் அனைத்துக்கும் பிரச்சாரத்தை முன்னெடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தினர். 
ஆக நமது உலமாக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பத்து வீத பிரச்சாரத்தையும் 90 வீதம் முஸ்லிமல்லாத மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும்.
-கலாநிதி முபாறக் அப்துல் மஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்