சிங்களப் பெண்ணான நான் ஒரு முஸ்லிம் வாலிபரை திருமணம் முடித்திருப்பது

அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் புதல்வன் யோசித்த ராஜபக்ஷ மற்றும் படுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசீம் தாஜுடீன் ஆகியோரின் முன்னாள் காதலி என்று அறியப்பட்டுள்ள யசாரா அபேநாயக்க, இது தொடர்பாக தனது பேஸ்புக் ஊடாக ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
நான் ஒருவிடயம் குறித்து உங்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அதாவது முழு இலங்கையும் என் வாழ்க்கை மற்றும் அதில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.
சிங்களப் பெண்ணான நான் ஒரு முஸ்லிம் வாலிபரை திருமணம் முடித்திருப்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் நான் சிங்களப் பெண்ணாக இருந்தாலும் சிங்களக் கிறித்தவர். இஸ்லாம் மார்க்கமும், கிறித்தவமும் அடிப்படையில் ஒன்று என்பதாலும்,
யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் மதசுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதாலும் நாங்கள் இருவரும் திருமணம் முடித்துள்ளோம். நான் தொடர்ந்தும் கிறித்தவ மதத்தைப் பின்பற்றும் சிங்களப் பெண்ணாகவே இருப்பேன்.
yasara wedding (1)
எனது கணவர் முஸ்லிமாக இருந்தாலும் அவரது தலைமையில்தான் இலங்கை றக்பி அணி ஆசியாவின் மூன்றாவது அணியாக முன்னேறியுள்ளது.
என் கணவர் நாட்டுக்குத் தேடித்தந்த பெருமையை எந்தவொரு சிங்களவரும் பெற்றுக் கொடுக்கவில்லை.
தவிரவும் சிங்களவர்கள் ஏன் இவ்வளவு இனவாதமாக நடந்து கொள்கின்றார்கள் என்று எனக்குக் கவலையாக உள்ளது.
எனவே எங்களைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, வாழ்க்கையில் ஒருபோதும் நீங்கள் சந்தித்திராத, சந்திக்க முடியாத என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்கள் குடும்பங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்.
என்னை என் பாட்டில் வாழ விடுங்கள் என்று யசாரா தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இதுநாள்வரை தன்னை யசாரா அபேநாயக்க என்று அடையாளப்படுத்தியிருந்த அவர் திருமணத்தின் பின்னர் தன்னை யசாரா மரிஜா என்று அடையாளப்படுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்