பாவம் ஹூனைஸ்'இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' என்ற பாடல் வரிதான் முன்னாள் எம்பி ஹூனைஸின் தற்போதைய நடவடிக்கையை பார்க்கும் போது முணுமுணுக்கத் தோன்றுகின்றது.
அசை;சர் ரிசாத் பதியுதீன் மூலம் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட ஹூனைஸ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

ரிசாதின் செல்லப்பிள்ளையாக ரிசாத் பதியுதீன் எடுத்த தீர்மானங்களுக்கு எல்லாம் ஒத்திசைவாக செயற்பட்டு அவர் எடுக்கும் முடிவுகளையெல்லாம் முதல் நபராக நின்று ஆதரவு அளித்த முன்னாள் எம்பி ஹூனைஸ், கடந்த பாராளுமன்றத்தின் இறுதிக் காலத்தில் ரிசாதுடன் முரண்பட்டு வெளியேறினார்.

முசலிப் பிரதேச மக்களின் மண்வளத்தில் கைவைக்க முற்பட்ட போது ரிசாத் அதனை தடுக்க முற்பட்ட வேளையில் தான் முரண்பாடு முற்றி, ரிசாதை விட்டு வெளியேறினார் என்பது வன்னி மக்கள் அறிந்த பழைய கதை.

ரிசாதை அன்று முதல் விமர்சிக்க தொடங்கிய ஹூனைஸ் இந்த நிமிடம் வரை அந்த விமர்சனத்திலிருந்து ஓய்வு பெறவேயில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரிசாதை தோற்கடிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க முனைந்த, முனைந் து கொண்டிருக்கின்ற இனவாதிகளுடனும் மதவாதிகளுடனும் இணைந்து ரிசாதுக்கு எதிராக களத்தில் குதித்தது மட்டுமன்றி சதி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

சதிகாரனுக்கெல்லாம் சதிகாரனான இறைவன் ரிசாதை வெல்ல வைத்து ஹூனைஸை தோற்கடித்தார். அதுமாத்திரமன்றி ஹூனைஸால் தேர்தல் வேட்பாளராக உள்வாங்கப்பட்ட தொழிலதிபர் மஸ்தானை மறுபக்கம் வெற்றி பெறச் செய்தும் ஹூனைஸின் சதியை மேலும் இறைவன் முடிறியடித்தான்.
எனினும் ரிசாதின் வெற்றியை விட மஸ்தானின் வெற்றி ஹூனைஸை பெரிதும் பாதித்தது. ஐந்து வருடம் எம்பியாக இருந்த தனக்கு வெறும் மூவாயிரம் வாக்குகளே கிடைத்த அதேவேளை, தனது சிபாரிசால் உள்வாங்கப்பட்ட மஸ்தான், எம்பி ஆனமையே ஹூனைஸூக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பாகும்.

இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் மஸ்தானை விமர்சிக்க முடியாமல் ரிசாதை இன்றுவரை விமர்சிப்பதற்கு காரணமாகும். ரிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சை மீண்டும் கேட்டுப்பெறாதது தவறான செயற்பாடு என இன்று விமர்சிக்க முற்பட்டுள்ளார்.

ஆனால் அன்று ரிசாதுடன் செல்லப்பிள்ளையாக இருந்தபோது ரிசாத் பதியுதீன் தற்போதுள்ள தொழில் வாணிப அமைச்சையே வைத்திருந்தார். அப்போது அவருக்கு எதிராக கிளர்ந்தெழாத ஹூனைஸ் இப்போது கொதித்தெழுந்து சவால் விடுவது வன்னி மாவட்ட மக்களை பொறுத்தவரை நகைப்புரியாதாகவே பார்க்கப்படுகின்றது.

மீள் குடீயேற்ற அமைச்சு என்பது ரிசாத் பதியுதீன் பதவி வகித்த காலத்தின் போதுதான் பலமும் வளமும் மிக்கதாக காணப்பட்டது. இப்போது அதில் ஒன்றுமில்லை என்று அன்று கூறிய   ஹூனைஸ் இன்று அதற்கு மாற்றமாக கருத்து தெரிவிப்பதை இட்டு வன்னி முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுமே ஹூனைஸை ஏளனமாக நோக்குகின்றனர்.
முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக மகிந்த ஆட்சிபுரிந்த அட்டூளியங்கள் இன்றும் எம்மை விட்டு அகலவில்லை. பள்ளிகள் உடைக்கப்பட்டன. குர்ஆன் மிதிக்கப்பட்டது. விம்பரில்; பன்றி இறைச்சி குவிக்கப்பட்டது. இவை எல்லாம் பொறுக்க முடியாமல் முஸ்லிம்கள் மகிந்த ஆட்சியை தோற்கடித்து எங்களை இந்த நாட்டில் நிம்மதியாக வாழவையுங்கள் என்று அன்று முஸ்லிம் அமைச்சர்களிடமும் எம்பிக்களிடமும் மன்றாடி நின்றனர்.

அந்த மன்றாட்டத்தின் அடிப்படையில்தான் ஹூனைஸ் மகிந்தவை விட்டு வெளியேறினார். ஆனால் அவரது வெளியேறல் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாராதூரமாக வெளியேறலாக நோக்கப்படவில்லை. காரணம் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்குத்தான். இதன்பிற்பாடு முஸ்லிம் சமுகம் மேலும் ஆக்ரோச நிலைக்கு வந்து முஸ்லிம் தலைமைகளை கடுமையாக வேண்டியதன் பேரில் தான் சமுகத்தை காக்கவேண்டும் என்ற ஒரே ஒரு இலக்குடன் ரிசாத் பதியுதீன் தலைமையிலான குழு மகிந்தவை விட்டு வெளியேறியது.

முஸ்லிம் சமுகத்திற்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் மகிந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதே. சமுகத்தின் அந்த இலக்கைத் தான் முஸ்லிம்களின் தேசியத் தலைமையான ரிசாதும் அன்றும் செய்தார்.

இந்த காலக் கட்டத்திற்குள் வேறு ஒப்பந்தங்கள் செய்திருந்தாலும் வன்னி முஸ்லிம்களோ பொதுவாக நாட்டு முஸ்லிம்களோ அதனை அங்கிகரித்திருக்கப்போவதில்லை. அம்மக்களுக்கு தேவைப்பட்டதெல்லாம். நிம்மதி , சந்தோசமான வாழ்வு, ஆட்சி மாற்றம் மட்டுமே.
 
ஆனால் இன்று முன்னாள் எம்பி ஹூனைஸ் எந்தவித அடிப்பைடயும் இல்லாமல் தான் தோன்றித் தனமாக ரிசாத் ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்று கூற முற்படுவது அன்று அவர் மகிந்தவை விட்டு வெளியேறிய விடயம் இன்று ஒரு சந்தேகத்தை தோற்வித்துள்ளது.

அவரது வெளியேறல் என்பது ஒரு தூய்மையான நோக்கில் இடம்பெறவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அதுமட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம் தலைமைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுகின்ற வேளை ஹூனைஸ் மாத்திரம் மகிந்தவின் அதே வெற்றிலையில் தான் போட்டியிட்டார்.

ஹூனைஸ் தற்போதும் கூட சுதந்திரக் கட்சி அங்கத்தவராகவே இருக்கின்றார். அவரின் நண்பரான மஸ்தான் எம்பி சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளார். அப்படியானால் ரிசாத் மீள்குடியேற்ற அமைச்சை பெற்றுக் காட்டட்டும் என்று சவால் விடுப்பதை விடுத்து ஏன் அந்த அமைச்சை மஸ்தான் பெற்றுக் கொள்வதற்கு அவர் கட்சி சார்ந்த ஜனாதிபதி மைத்திரியிடம் அழுத்தம் கொடுக்க முற்படவில்லை?

 ஆகக் குறைந்தது மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஹிஸ்புல்லாவை நியமித்த போது கூட அதனை தடுத்து மஸ்தானுக்கு பெற்றுக் கொடுத்திருக்கக் கூடாது என்ற நியாயமான கேள்வியை வடக்கு முஸ்லிம்கள் ஹூனைஸை நோக்கி எழுப்புகின்றனர்.
வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் மீது உண்மையான அக்கறையுள்ள ஒருவராக ஹூனைஸ் இருந்திருப்பாரே ஆனால் நிச்சயமாக மஸ்தானுக்காவது பெற்றுக்கொடுக்க அவர் முயற்சி எடுத்திருப்பார். ஆனால் அவரது நோக்கம் அதுவல்ல. மஸ்தான் வெற்றி பெற்றது அவருக்கு பெரிய ஒரு இழப்பு. அப்படி இருக்கும் போது இதையும் எப்படி பெற்றுக்கொடுப்பார் என்பது வன்னியின் சிறுபிள்ளைக்கும் தெரிந்த பேருண்மை.

ஹூனைஸ் இன்று ரிசாதுக்கு எதிராக விடுக்கும் சவால்களெல்லாம் அவரது சொந்த உணர்வின் மூலம் ஏற்பட்ட கருத்துக்கள் அல்ல. மாறாக தத்தமது சொந்த ஊர்களிலேயே ஆகக்குறைந்தது நூறு வாக்குகளையேனும் பெற்றுக் கொள்ள முடியாத வங்குரோத்து நிலையில் இருக்கும் ஓரிருவரின் பின்புலக் கருத்துக்களாகவே  அவை காணப்படுகின்றன.

எனவே வன்னி மாவட்ட முஸ்லிம்கள் மீது உண்மையான பாசமும் அக்கறையும் ஹூனைஸூக்கு இருக்குமாக இருந்தால் ஒரு சில அடிவருடிகளின் கருத்துக்களுக்கு பின்னால் செல்லாமல் வடக்கு முஸ்லி;களின் மீள்குடியேற்றத்திற்காக கடுமையாக உழகை;கும் ரிசாத் பதியுதீனின் முயற்சிக்கு உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் எதிர்பார்ப்பும் வேண்டுகோளுமாகும்.

அப்துல் பாரி 
முன்னாள் நகர சபை உறுப்பினர்
வவுனியா

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்