இலஞ்சமாக பெற்ற சரத் பொன்சேக்கா

50 மில்லியனுடன் 2 ஜீப் வண்டிகளை, இலஞ்சமாக பெற்ற சரத் பொன்சேக்கா - ஆதாரங்கள் பகிரங்மானது

சரத் பொன்சேகா தற்பொழுது எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும், முன்னதாக அவருக்கு 50 மில்லியன் அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஜீப் வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவன்கார்ட் நிறுவனத்தின் தொழில் இழந்தவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கமல் கமகே இதனைத் தெரிவித்துள்ளார். 

எவன்கார்ட் நிறுவன தொழில் இழந்தவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (04) கொழும்பில் இடம்பெற்றது. 

இதன்போது தொழிலை இழந்த அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நியாயம் கிடைக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

எவன்கார்ட் சம்பந்தமாக சரியான தகவல்கள் எதுவும் தெரியாமல் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், அந்த நிறுவனத்தில் வேலைபார்த்த 6754 பேர் இதுவரை தொழிலை இழந்துள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். 

சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட உதவியாளரான ஓய்வு பெற்ற கேணல் கபில ரத்னாயக்க, எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணி பல உதவிகளைப் பெற்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

அவருக்கு எவன்கார்ட் நிறுவனம் மூலமாக மாதாந்தம் 15 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

சரத்பொன்சேகாவின் அலுவலக வாடகை போன்றவைகளையும் எவன்கார்ட் நிறுவனம் மூலம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறு சரத்பொன்சேகா எவன்கார்ட் நிறுவனத்துடன் மேற்கொண்டுவந்த தொலைபேசி உரையாடல் மற்றும் குறுந்தகல்களின் பிரதிகளும் இதன்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்