தமிழக அரசின் உதவிகளை, புறக்கணித்த தமிழ்நாடு தவ்ஹீத்


தமிழக அரசின் உதவிகளை புறக்கணித்து விட்டதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான முழு விவரம் பின்வருமாறு....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிவாரண பணிகளை கண்ட தமிழக அமைச்சர்கள், உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கேளுங்கள் என்றார்கள்.

இவர்களிடம் பணத்தை பெற்றுவிட்டால் நமக்கு நிர்பந்தங்கள் ஏற்படலாம் என்பதால் மக்கள் தாராளமாக உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி மறுத்து விட்டோம்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க எவ்வளவு உணவுப் பொட்டலமும் தருவதற்கு முன் வந்தார்கள். 

உணவின் தரம் எங்களுக்கு திருப்தி அளிக்காததால் நாங்கள் சமைத்து விநியோகம் செய்து கொள்கிறோம் எனக்கூறி அதையும் மறுத்துவிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமைத்தே வழங்கி வருகிறோம்.

இவ்வளவு உதவிகளையும் மக்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமாகவே நடந்து வருகிறது.

மக்கள் கொடுத்த பணத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம், முகநூல் பக்கம், உணர்வு வார இதழ் ஆகியவற்றில் முழு கணக்குகளையும் வெளியிடுவோம் என்று பக்கீர் முஹம்மது அல்தாபி அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்