தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நபிகளாரின் அணுகுமுறை


kabir-hashim-720x480
அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பல்லின சமூகங்கள் வாழுகின்ற இலங்கை போன்ற ஒரு தேசத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும். பல கோத்திரத்தாரும் பிற மத சமூகத்தவர்களும் வாழ்ந்த மதீனாவின் பூமியிலே ஓரிறைக்கோட்பாடு எனும் மூலமந்திரத்தின் அடிப்படையின் மீது ஸ்திரமான சமூகக் கட்டுமானத்தையும் நேர்மையான அரசு ஒன்றினையும் நிறுவிய வெற்றிகரமான தீர்க்கதரிசியாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
தேசிய மீலாத் தின நிகழ்வை முன்னிட்டு எங்கள் தேசம் இணைய தளத்திற்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே  மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலுக்கான ஆன்மீகம் என்றில்லாமல் ஆன்மிக அடிப்படையில் அரசியலை நிர்மாணம் செய்த ஏக சாதனை உலக வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பிடித்திருக்கிறது. வணிகம், ராஜதந்திரம், போரியல், அரசியல் போன்ற மிகவும் சிக்கலான துறைகளில் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் தனது நுணுக்கமான பார்வைகளின் மூலம் புதிய மரபுகளையும் சித்தாந்தங்களையும் தோற்றுவித்த ஒரு முன்னுதாரன புருஷராகவே நபிகளாரை பார்க்க வேண்டிய இருக்கிறது.
இன்றைய இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு விடைகாண இறுதி இறைதூதரின் அணுகுமுறைகள் சாலப் பொருத்தமானதே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த பாலைவன நாடோடி அரபிகளை பாராளும் கீர்த்தி மிக்க அரசர்களாக மாற்றிய வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரராக அவர் திகழ்ந்தார். உலகில் தோன்றிய அனைத்து ஆட்சியாளர்களையும் விட நேர்மையாளராக பூமியில் உதித்த தீர்க்கதரிசிகள், மெய்ஞானிகள் அனைவரையும் விட வெற்றிகரமானவராகவும் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் சாதித்துக் காட்டினார்கள்.
பல யுத்தங்களில் தளபதியாகப் நின்று  இராணுவத்தை வழிநடாத்தி யுத்த தர்மத்தையும் யுத்தக்கைதிகளை கையாளும் வழிமுறைகளையும் கூறி ஐ.நா.வின் சாசனத்திற்கே வித்திட்ட பெருமை அவருக்கே உரித்தானது. இன்று இலங்கை யுத்தக்கைதிகள் தொடர்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் அவர்களின் வழிமுறைகளை ஆய்வு செய்து பிரயோகிப்பது இலங்கையின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்மி மௌலானா

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்