அகத்திமுறிப்பு அஸீமுக்கு சட்டத்தரணி ஹுனைஸ் பாறூகின் ஊடகப் பிரிவின் பதிலடி.

சாது மிரண்டால் காடு கொள்ளாது” ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் விடுத்த அகத்திமுறிப்பு அஸீமுக்கு சட்டத்தரணி ஹுனைஸ் பாறூகின் ஊடகப் பிரிவின் பதிலடி.

நியுவ் முல்லைத்தீவு உட்பட இன்னும் சில இணையத்தளத்தில் தன்னை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் என்று கூறிக் கொண்டு, முன்னால் பாராளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் விடுப்பதாக உண்மைக்குப் புறம்பான விடயங்களைத்  தனது தலைவர் றிஸாட் பதியுதீனின் பிழைகளை மூடி மறைப்பதற்காகச் சொல்லுகின்ற தம்பி அஸீம் அவர்களே!.

உங்களுக்கு இறைவன் உடல் ஆரோக்கியத்தையும், நல்ல எண்ணத்தையும்,  சமூக சிந்தனையும் கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் பிரார்தனை செய்கின்றோம். 

அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராக அறிக்கைகளை விடுவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ{னைஸ் பாறூக் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்?
பதில்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் என்ற பதவியை உங்களுக்கு யார் தந்தது? இது எப்போது உங்களுக்குக் கிடைத்தது? என்ற வினாவோடு, எமது பதிலுக்கு வருகிறோம். ஹுனைஸ் பாறூக் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய இணைப்பாளர், சுமார் 4½ வருடங்கள் கட்சியியோடும் கட்சித் தலைமையோடும் ஒன்றாக விசுவாசமாக செயற்பட்டவர். கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கூட,  கட்சி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெயர் பெறுவதற்கு கட்சிக்காகச் சொந்தப் பணம், நேரகாலத்தை ஒதுக்கி செயற்பட்டவர். நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட் தன்னையும் தனது குடும்பத்தையும் வளப்படுத்தியது போலவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்காக சொத்துக்களைச் சேர்த்தது போலவும் அல்லாது, (அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்- உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சொத்து விபரங்கள் அத்தனையும் வெளியிட நேரிடும்) இவர் தனக்கென எதையும் உழைக்காது தனது சமூகத்திற்காகவும், அக்கட்சிக்காகவுமே உழைத்தவர். கட்சித் தலைமைக்கும் கட்சியின் கொள்கைக்கும் மக்களின் அபிலாசைக்கும் சமூக நலனுக்கும் மாற்றமாகச் கட்சித் தலைவர் செயற்படும்போது அதனைச் இவர் சுட்டிக் காட்டாமல் யார் தம்பி சுட்டிக் காட்டுவது.
இன்னும் ஹுனைஸ் பாறூக் என்பவர் உங்களை போல பணத்திற்கும், உங்களது தலைவரைப் போல பதவிக்கும், சலுகைகளுக்கும் தலைஆட்டுபவர் அல்ல, 
நான் இறுதிவரை உங்களையும் பஷிலையும் விட்டுச் செல்லமாட்டேன் என்று கூறி மஹிந்த அரசாங்கத்திடம் கோடிகள் வாங்கியது யார்? ஹுனைஸ் பாறூக் அவர்களா? றிஸாட் பதியுதீனா?
கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த அரசாங்கத்திடம் டொலர்களில் கோடிக்கணக்கான பணம் பெற்றது யார்? ஹுனைஸ் பாறூக் அவர்களா? றிஸாட் பதியுதீனா?
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டபோது அச்சீருடையினை (கரை யை (ஓரத்தை) வெட்டியெடுக்க) அதை தொழிற்சாலைகளுக்கு வழங்கி கோடிக்கணக்கான கமிசன் பெற்றது யார்? ஹுனைஸ் பாறூக் அவர்களா? றிஸாட் பதியுதீனா?
உங்களுக்கு விசுவாசமாக இருப்பதாக மஹிந்த அரசாங்கத்திடம் கூறி “செறண்டிப்” எனும் வானொலி சேவையை பெற்று அதில் இன்றும் வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பது யார்? ஹுனைஸ் பாறூக் அவர்களா? றிஸாட் பதியுதீனா?
தேசிய அரசாங்கத்திடம் இணைந்த போது சமூகத்திற்காக எந்தவித கோரிக்கையையும் முன்வைக்காது தனது உழைப்பையும் வருமானத்தையும் கருத்திற் கொண்டு எனக்கு குறித்த கைத்தொழில் வர்த்தக அமைச்சையே தர வேண்டும் என்ற சுய நலத்துடன் ஒப்பந்தம் செய்தது யார்? ஹுனைஸ் பாறூக் அவர்களா? றிஸாட் பதியுதீனா?  
இப்படி பணத்திற்கும் பதவிக்கும் சோரம் போனது யார் என்பதற்கு அடுக்கடுக்காக சான்றுகளை வெளியிட முடியும். 
  ஹுனைஸ் பாறூக் அப்படிப் பட்டவராயிருந்திருந்தால் மஹிந்த அரசாங்கத்தை விட்டு முதலில் வெளியேறியிருக்க மாட்டார், வெளியேறியதுடன் மஹிந்த அரசாங்கத்திடமிருந்து வந்த கோடியையும், பதவியையும், சொத்தையும் வாங்கிவிட்டு இன்று சுகபோகம் அனுபவித்திருப்பார்   அவர் ஒரு சட்டத்தரணி, கலைத்துறைப் பட்டதாரி, அரசியல் துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். கொழும்பு சட்டக் கல்லூரியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். மேலும் அவர் அரசியல் துறையில் கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர். இதற்கு மேலாக இறையச்சம், நற்குணம், நற்பண்பு, பிறருக்கு உதவி செய்யும் நல்லெண்ணம் போன்ற பல குணங்களுக்குச் சொந்தக் காரர். இப்படிப்பட்ட இவர் ஒருவருக்கு அநியாயம் நடக்கும் போது குறிப்பாக வன்னி மக்களுக்கு அநியாயம் நடக்கும் போது வன்னி மக்கள் ஏமாற்றப்படும் போது வன்னி மக்களையும் அகதிகளையும் காட்டி ஒருவர் தன்னை வளப்படுத்த நினைக்கும் போது இதனைத் தட்டிக் கேட்காமல் இருப்பாரா?
ஹுனைஸ் பாறூக் எம்.பி செய்த ஈனச் செயலால்தான் அரசியலில் தோற்றார் என்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். 
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட் சுமதிபால உடன் தேர்தல் கேட்டபோது  தோற்றாரே! அது மட்டுமல்லாது அவர் முன்னின்று கேட்ட தேர்தல்கள் பலவற்றில் தோல்வியை சந்தித்தாரே! அப்போதெல்லாம் அவர் யாருக்கு ஈனச் செயல் செய்தார், தோற்பவர்கள் எல்லாம் ஈனச் செயல் செய்ததாக அர்த்தமில்லை. (அல்லாஹ்வை ஞாபகப் படுத்திக் கொள்ளவும்)
மேலும் ஹுனைஸ் பாறூக் பதவி மோகத்தால் கட்சி தாவியதாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
உங்கள் தலைவர் கட்சி மாறியதெல்லாம் என்ன மோகம் என்று கேட்கின்றோம். SLFP யிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ்,  முஸ்லிம் காங்கிரஸிலிருந்து, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,  அகில இலங்கை முஸ்லிம்  காங்கிரஸிலிருந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து, UNP யுடன் இணைந்து போட்டியிட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர் கட்சி மாறியது சமூகத்திற்காகவா?  இவரது பதவியையும், பணத்தையும்  பாதுகாக்கவே மாறினார் இது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட்டுடன் இருந்த அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லா தற்போது SLFP யில் சேர்ந்துள்ளார். அவர் பதவி மோகத்திலா சென்றார்,
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட்டுடன் இருந்த முன்னால் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத்  SLFP யில் உள்ளார். அவர் பதவி மோகத்திலா சென்றார்,
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட்டுடன் இருந்த முன்னால் பிரதியமைச்சர் நிஜாம்தீன் கட்சியை விட்டுச் சென்றார். அவர் பதவி மோகத்திலா சென்றார், 
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட்டுடன் இருந்த முன்னால் சுகாதார அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான சுபைர் தலைமைத்துவத்தை விட்டு விலகிச் சென்றாரே, அவர் பதவி மோகத்திலா சென்றார், 
இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் UNP கடசியின் தலைவர் ரனில் விக்ரம சிங்கவிடம் இருந்து பெற்ற 5கோடி ரூபாய் பணத்தை உங்கள் தலைவரும் அவரோடிருக்கின்ற பிரதியமைச்சரும் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட சன்டையை பார்த்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர், “இவ்வளவு காலமும் மக்களின் பெயரைக்கூறி அவ்வப்போது இருக்கின்ற தேசிய அரசியல் தலைமைகளிடம் தங்களின் பொக்கட்டுகளை நிரப்புகின்ற     அரசியலில் தலைமைகளோடா இதுவரை பயணித்திருக்கின்றேன்” என்று வெட்கி தலை குனிந்து தலைமைத்துவத்தை விட்டு பிரிந்துள்ளாரே இது உங்களுக்கு தெரியுமா? இதையா பதவி மோகம் என்கிறீர்கள்?
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட்டுடன் இருந்த மாகாண சபை உறுப்பினரும் பொறியிலாளருமான ஷிப்லி பாறூக் தலைமைத்துவத்தை விட்டுச் சென்றாரே இது பதவி மோகமா? 
முசலி பிரதேச சபை தலைவர் W.M.எஹியான் பாய் தலைமைத்துவத்தை விட்டுச் சென்றாரே இது பதவி மோகமா?
நீங்கள் தலைவராகச் சொல்லுகின்ற அமைச்சர் றிஸாட்டுடன் இருந்த உயர்பீட உறுப்பினர்களும் கட்சியின் தலைமைத்துவ உறுப்பினர்கள் ஒரு சிலரும் கட்சியை விட்டுச் சென்றார்களே இதெல்லாம் பதவி மோகமா?
இவற்றுக்கு மேலாக கட்சியை உருவாக்கி கட்சிகென ஒரு யாப்பினைக் கூட எழுதி தலைமைத்துவப் பதவியை வழங்கிய கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.S.ஹமீட் தலைவரின் நடவடிக்கைகளையும், செயற்பாடுகளையும் விரும்பாது விலகியுள்ளாரே! இதுவெல்லாம் பதவி மோகமா? அல்லது இவர்களுக்குப் பதவி ஆசையா? ஒருவர் அல்லது இருவர் தலைமைத்துவத்தை விட்டுப் பிரிந்து சென்றால் அது பிரிந்து சென்றவர்களின் குற்றம் எனலாம், ஆனால் இந்த கட்சியின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பிரிந்திருக்கின்றனர் என்நால் அதன் அர்த்தம் என்ன? 
தம்பி அஸீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பதை உருவாக்கி வளர்த்து கட்சிக்காகத் தங்களை அர்பணித்தவர்கள்தான் இவர்கள், இன்று தலைமைத்துவ செயற்பாட்டிற்கு எதிராக வெளியாகியுள்ளனர். இவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் எதையும் அறிக்கைவிடலாம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அல்லது உங்கள் தலைவர் எந்த பிழைகளையும் செய்யவில்லை என்பது அர்த்தமல்ல “சாது மிரண்டால் காடு கொள்ளாது” ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தன்மானம் உள்ளவர்கள், மறுமை மீது நம்பிக்கை உள்ளவர்கள், அரசியலில் பதவியை மாத்திரம் கருதி செயற்பட்டிருந்தால், அரசியலில் எதையும் பேசலாம். வாக்குமீறலாம், காட்டிக் கொடுக்கலாம், கழுத்தறுப்பு செய்யலாம், என்ற சித்தாந்தத்தை உங்கள் தலைவிரிலிருந்து பிரிந்து சென்றவர்கள் செய்திருப்பார்கள். அவர்களை சீண்டிப் பார்க்க முனையாதீர்கள்! அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற வகையில் வாய் பொத்தி மௌனிகளாகப் பொறுமை காத்திருக்கிறார்கள், உங்கள் தலைவரைப் பாதுகாக்க உங்கள் பெயரில் விடுக்கப்படுகின்ற அறிக்கைகள், வேண்டுகோள்கள் அவர்கள் செய்யாதவற்றைச் சொல்லி உங்கள் தலைவரின் குறைகளை மூடி மறைக்க நினைப்பது முழுப் பூசனிக்காயை சோத்தில் மறைப்பதற்குச் சமன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
ஹுனைஸ் நகரைப் பற்றியும், ஹுனைஸ் பாறூக் பாடசாலையைப் பற்றியும் சொன்னீர்கள்.
அவர் பிறந்த சொந்த மண், சொந்த ஊர், அந்த மக்கள் தங்களின் புதிய குடியேற்றத்திற்கு தனது ஊரைச் சேர்ந்த முசலியின் 1வது பாராளுமன்ற உறுப்பினர் பெயரை வைத்துள்ளனர் இதில் என்ன தப்பிருக்கிறது?
இப்படி என்றால் பண்டாரவெளி, வெளிமேல பாடசாலைக்கு எப்படி உங்கள் தலைவர் அவருடைய வாப்பாவின் பெயரை பதியுத்தீன் வித்தியாலயம் என்றும், புதுவெளிப் பாடசாலைக்கு அவருடைய மகளுடைய பெயரை றிம்ஸா வித்தியாலயம் என்பதையும் வைத்துள்ளாரே! மேலும் புத்தளத்திலுள்ள ஒவ்வொரு முகாமிலுள்ள பொது நோக்கு மண்டபத்திற்கும், பாலர் பாடசாலைக்கும், இதர பல கட்டிடங்களுக்கும் றிஸாட் பதியுதீன் என்று பெயர் வைத்துள்ளாரே, இவைகளெல்லாம் சரி, ஆனால் தனது ஊர் மக்கள் சேர்ந்து தங்கள் பாடசாலைக்கும் கிராமத்துக்கும் தனது ஊர் பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் வைப்பதுதான் பிழையா, இது எந்த விதத்தில் நியாயம்?
உங்கள் தலைவரிடம் உங்களுக்கு அன்பு, பற்று, கௌரவம், இருப்பதால் அவரை யாருக்கு ஒப்பாக்கியும் புகழ் பாடுங்கள் எங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லை, அற்காக சமூகத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்து கொண்டுள்ள அரசியல் தலைமைகளை விமர்சிப்பதை இதற்குப் பிறகாவது தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கின்ற அளவுக்கு உங்களுக்கு அரசியல் படிப்பும் போதாது, அரசியல் அனுபவமும் போதாது, அரசியல்வாதிகளுக்குப் போஸ்டர் ஒட்டுவதாலும், அவர்களைப் புகழ்பாடி பணம் வாங்குவதாலும் நீங்கள் அரசியல் மேதையாகிவிட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தம்பி அஸீம் அவர்களே! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 
தம்பி அஸீம் அவர்களே! ஒருவருடைய தகுதியைப் பற்றிக் கேட்பதற்கு முன் இதைக் கேட்பதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று உங்களது தகுதியைப் பரிசீலித்துக் கொள்ளுங்கள்!.
தம்பி அஸீம், அரசியல் ஆர்வலராக நீங்கள் இருந்தால் அரசியலைப் படியுங்கள், நீங்கள் ஒரு கட்சியை நேசிப்பவராக இருந்தால் அந்த கட்சி இஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து அதன் தலைவர், செயலாளர் உட்பட அன்று முதல் இன்றுவரை அதன் அங்கத்தவர்கள் அவர்களின் வரலாறுகளை முதலில் படியுங்கள். அதற்கு முன் மற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதைவிட்டுவிட்டு முதலில் உமக்கும் உமது தலைவருக்கும் வேண்டுகோள்களை விடுத்து அதனை நிறைவேற்றிய பின்னர் மற்றவரைப் பற்றிச் சிந்தியுங்கள்.
             அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நல்ல சிந்தனையை கொடுக்க வேண்டும்.
(ஊடகப் பிரிவு)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்