Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

சவூதியில் பணிப்பெண் கல்லெறிந்து கொல்லப்படும் விவகாரம் பற்றி


sfgdfhgh
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
சவூதி அரேபியாவில் அமுலில் உள்ள சட்டங்களுக்கு கட்டுப்படுவதென்ற இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் அங்கு செல்கின்றார்கள், இது உலகறிந்த உண்மையாகும்.
அங்கு அமுலில் உள்ள கொலைக்கு கொலை என்ற சட்டம் பல இலட்சக் கணக்கான பிறநாட்டுத் தொழிலாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பை வழங்குகின்றதோ அதே போன்று தான் விபச்சாரத்திற்கான குற்றவியல் சட்டங்களும் நோக்கப் படல் வேண்டும்.
எனவே சவூதி அரேபிய சட்டங்கள் தமக்கு ஏற்புடையதல்ல காட்டுமிராண்டித் தனமானது எனது இலங்கை அரசு அல்லது பாராளுமன்றம் கருதுமாயின் உடனடியாகவே இலங்கையர் அங்கு தொழிலுக்கு செல்வதனை இரத்து செய்தல் வேண்டும்.
சவூதியில் உள்ள ஷரீஆ விற்பன்னர்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை அமுலாக்கம் செய்வதில் கடைப்பிடிக்கின்ற நடைமுறைகள், அங்குள்ள குற்றவியல் சட்டங்கள், நீதித்துறை குறித்த விமர்சனங்களை ஆய்வு செய்வதில் இப்பொழுது எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொள்லுதல் இருக்கின்றதா என கேட்டால் இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
அல்-குர்ஆனில் இல்லாவிட்டாலும் ஷரீஆவின் அடிப்படை மூலாதாரமான சுன்னஹ்வில் அதற்கான ஆதாரம் இருக்கின்றது.
இஸ்லாமிய சமூக கட்டமைப்பில் “குடும்ப நிறுவனம்” என்ற அலகை கட்டிக் காப்பதற்கும் ஒருவரின் வம்ச மற்றும் சந்ததியினை கட்டிக் காப்பதிலும் இஸ்லாம் அதிக கரிசனை செலுத்துகின்றது.
அத்தோடு விபச்சாரம் என்ற குற்றச் செயலுக்கான தண்டனையை விதிப்பதற்கு முன்னர் வயது வந்தவர்கள் இல்லர பந்தத்தில் இணைகின்ற ஏற்பாட்டைஇஸ்லாம் வலியுறுத்தி உள்ளது.
விபச்சாரம், அல்லது பாலியல் துஷ்பிரயோகம் இடம் பெறுவதனை தடுக்கின்ற பல்வேறு வழிமுறைகளை இஸ்லாம் வலியுறுத்தியுமுள்ளது, உதாரணமாக மஹ்ரம் ஆன உறவுமுறை துணை இல்லாமல் வீட்டைவிட்டு ஒரு பெண் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மாத்திரமன்றி ஆண்களும் தமது நடை உடை பாவனைகளில் எவ்வாறு நடந்து கொள்ளல் வேண்டும், அவர்களை ஆண்கள் எவ்வாறு வாழ வைக்க வேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் கண்டிப்பான கட்டளைகளை போட்ட பின்னரே தண்டனைகளை விதித்துள்ளது.
இஸ்லாமிய ஷரீஆவை, அதன் அடிப்படை இலக்குகள் மற்றும் குற்றவியல் சட்டங்களை மற்றும் தேசங்களுக்கிடையிலான உறவுகள் குறித்த இஸ்லாமிய சட்டங்களை கற்றவன் என்ற வகையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மேற்படி தீர்ப்பை பின்வரும் அடிப்படைகளில் ஷரீஆ நீதிமன்றம் மீள் பரிசீலனை செய்தல் வேண்டும்:
குறிப்பிட்ட பெண் மஹ்ரம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய காரணிகள் எவை..?
இஸ்லாமிய ஷரீஆ அமுலில் உள்ள தேசத்திற்குள் மஹ்ரம் இல்லாமல் அவர் எவ்வாறு உட்புகுந்தார்?
திருமணமாகியும் பல வருடங்களாக தனது சக்தியிற்கு அப்பாற் பட்ட காரணங்களுக்காக அல்லது தன் மீது இழைக்கப்பட்டுள்ள குடும்ப மற்றும் சமூக அநீதிகளின் காரணமாக கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கு தனது பாலியியல் தேவைகள் நீண்ட காலம் மறுக்கப்பட்ட நிலையில் எவ்வாறான தண்டனை வழங்குவது?
மனிதனின் இயல்பூக்கங்களுக்கு மதிப்பளித்து குற்றங்கள் இடம் பெறுவதற்கான சகல வாயில்களையும் மூடிய பின்னரே இஸ்லாம் கடினமான குற்றவியல் சட்டங்களை விதித்துள்ளது.
திருமண வயதில் திருமணமாகாத, திருமணமாகியும் துணைகள் அருகில் இல்லாத பல இலட்சக் கணக்கான தொழிலாளர்களை உள்வாங்க முன் இந்த முஸ்லிம் நாடுகள் மஹ்ரம் விடயத்தில் கண்டிப்பான சட்டங்களை விதித்திருக்க வேண்டும்.
கண்மணி ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூட அக்கால சூழ்நிலையில் பல காரணிகள் குறித்தும் ஆராய்ந்து இருக்கின்றார்கள். இந்த அடிப்படைகளில் தண்டனை மீள்பரிசீலனை செய்யப்பட்டு அந்த மாது இலங்கைக்கு திருப்பி அனுப்பபடல் வேண்டும் என்பதே எனது  அபிப்பிராயமாகும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய