டாக்டர் ஹஸ்மியா முனாஸிக், அகில இலங்கை சமாதான நீதவானாக
மினுவாங்கொடை - கல்லொழுவை, ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் வசித்து வரும் டாக்டர் ஹஸ்மியா முனாஸிக், அகில இலங்கை சமாதான நீதவானாக, மினுவாங்கொடை மாவட்ட நீதவான் மன்றின் நீதவான் டி.ஏ.ருவன் பத்திரன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கல்முனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் உதுமா லெப்பை – ஆசிரியை நிஸ்ரினா தம்பதிகளின் புதல்வியும், மருதமுனையைச் சேர்ந்த மொஹமட் ஹனீபா - ஜுவைரியா உம்மா தம்பதிகளின் மருமகளும், டாக்டர் எம்.எச்.எம்.முனாஸிக்கின் மனைவியுமான டாக்டர் ஹஸ்மியா, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியுமாவார். இக் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுத் தேர்ந்த இவர், ரஷ்யா மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்றில் தனது மேற்படிப்பினையும் முடித்துக் கொண்டுள்ளார்,

மினுவாங்கொடை கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பதிவாளராகவும் பதவி வகித்து வரும் இவர், வைத்தியத்துறையில் பெண் டாக்டராக இருந்து கொண்டு, சமாதான நீதவானாக சமூகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

                             ( ஐ. ஏ. காதிர் கான் )
                           - மினுவாங்கொடை நிருபர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்