தெற்காசிய நாடுகளின் மகளிா் அமைப்பின் மாநாடு

அஸ்ரப் ஏ சமத்


தெற்காசிய நாடுகளின் மகளிா் அமைப்பின் மனித உரிமைப்பிரிவின் பிரநிதிகளின் ஊடகவியலாளா் மாநாடு இன்று(21) கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இணைத்தலைவி கலாநிதி நிமல்கா தலைமையில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் ஆப்கனிஸ்தான், மாலைதீவு, பாக்கிஸ்தான், இந்தியா, நேபால் வங்களதேஸ் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த மகளிா் பிரநிதிகள் கலந்து கொண்டு தத்தமது நாடுகளில் வாழ்கின்ற பெண்களை விட இலங்கையில் வடக்கு கிழக்கு புத்தளம் வாழ்கின்ற பெண்களின் நிலை பற்றி ஆராய்ந்து தத்தது  கண்டன அறிவிப்பையும்  செய்தனா்.

கடந்த 2 நாட்கள் புத்தளம், திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா. யாழ்ப்பாணம் மற்றும் சாம்புர் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள பெண்கள் எங்களது கைகளை கால்களை தொட்டு அழுதும் புலம்பும் சோகக் கதைகள் கேட்டு கண்னீா் மல்கிநோம்.

அரசாங்கத்தின் காணமல் போனோா் விளக்க மளிக்கும் இடத்திற்கும் சென்று அங்கு வருகை தந்த  தாய்மாா்கள்  தனது கனவன் எங்கே, தந்தை எங்கே, மகன் எங்கே எனக் கேட்டு அழுகின்றனா்.  அனேகமான பெண்கள் வறுமையில்  வீடு வாசல் இன்றி மிகவும் அல்லல் படுகின்றனா். அதே போன்று புத்தளத்திலும் முஸ்லீம்  பெண்கள் இன்னமும் தற்காலிகமாக வாழ்கின்ற பெண்களை கண்டு அவா்களது கதைகளை கேட்டறிந்தோம்.  

இந்த நாட்டில்  பெண்களுக்கு அரசியல் அதிகாரம் உரிமைகள்  இல்லை. அவா்களது பிரச்சினைகள் பேசப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன.  

காலநிதி நிமல்கா  உரையாற்றுகையில் -

நாங்கள் இம்முறை கொழும்பில் கூடினோம். மற்றும் கிளிநொச்சி,சாம்புர் சென்று பாா்க்க  கூடிய அளவுக்கு ஒரு அமைதியான சூழ்நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

 கடந்த ராஜபக்ச  ஆட்சியில்  நாங்கள் இப்படி கொழும்பில கூடி கதைக்கின்றோம் என்றால் சி.ஜ.டி யினா் இந்த ஹோ்ட்டலை சுற்றி வலைத்திருப்பாா்கள். ஆனால் ்இந்த அரசில் அவ்வாறு இடம்பெற வில்லை.
இதனை யிட்டு கடந்த 3 நாட்களும் நாம் கலந்து ஆலோசித்த பிரேரணைகள் அந்த நாட்டு பிரதமா். ஜனதிபதிக்கும் ்அனுப்பி வைப்போம் எனவும்  தெற்காசிய மனித உரிமை பென்கள் அமைப்பினா் தெரிவித்தனா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்