பிராபகரன், தேசியப்பட்டியலில் மசூர் மொளலனாவின் பெயரை அனுமதித்திருந்தாா்.

அஷ்ரப்  ஏ சமத்

நேற்று(18) கொழும்பில் முஸ்லீம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த   மர்சூர் மொளலான நினைவுப் பேச்சில்   தமிழ் அரசுக் கட்சித் தலைவா் பாராளுமன்ற உறுப்பிணா் மாவை சேனாதீராஜா ஆக்ரேசமானதும் உணா்ச்சி பூர்வமாகவும் தமிழ் முஸ்லீம் ஒற்றுமை, அரசியல் சுயநிர்ணய உரிமை பற்றி பேச்சு.

மாவை சேனாதிராஜா - தனது உரையில் 

விடுதலைப்புலிகளின் தலைவா் பிராபகரன் உயிருடன் இருக்கும்போது  பாராளுமன்றத் தோ்தலில் தமிழ்த் தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் மசூர் மொளலனாவின் பெயரை அனுமதித்திருந்தாா். ஆனால் மெலானா முஸ்லீம் காங்கிரசில் ஒரு பதவி வகித்தாதால் அந்த  தேசியப்பட்டியல் சட்டத்தரணி இமாமுக்கு வழங்கப்பட்டது.

முஸ்லீம்களுக்கு தனியான ஒரு அரசியல் சுய நிர்ணய கட்சி பற்றி அப்போது மறைந்த உங்களது தலைவரும் எங்களது தலைவருமான அமரா் அஸ்ரப் அவா்கள் ஒரு இரவு முழுவதும் தமிழ் அரசுக் கட்சித் தலைவா் அமிா்தலிங்கத்தோடு பேசினாா். அதனை ஏற்றுக் கொண்டு அமிா்தலிங்கம் முஸ்லீம்களுக்கு தனியான ஒரு கட்சியும் உங்களது சுய நிர்ணய உரிமைக்காக முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பிக்கும்படி அனுமதி வழங்கி ஆசிர்வதித்தாா்.

நான் இளைஞனாக இருந்த காலத்தில்  யாழ்ப்பாணத்தில்  தந்தை செல்வாவுடன்   அமிா்தலிங்கம், செனட்டா் மசூர் மொளலான, ராசதுறை, ஆகியோா்கள் பேச வருகின்றாா்கள் என அறிந்தால் அந்த இடத்தில் நேரத்தோடு சென்று அந்த உரைகளை கேட்டுள்ளேன். பாரிய மக்கள் வெள்ளம் அங்கு கூடிவிடும்.
தமிழ் முஸ்லீம் ஒற்றுமையில் மசுர் மொலானா பாரிய பங்கு வகித்தாா்.

மறைந்த தலைவா் அஸ்ரபும் எமது பாசரையில் வழந்தவா் அவா் அமைச்சராக இருந்த அந்த வீட்டில் சிவா, அமிா், சம்பந்தன், மற்றும் எமது தலைவா்கள் நடு நிசியிலும் இருந்து தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள், தீா்வுகள், முஸ்லீம் அலகு பற்றி அஸ்ரபுடன்  பேசி இருக்கின்றோம். தீா்வுகளை வரைந்திருக்கின்றோம். 
இந்த விடயத்தில் மறைந்த தலைவா் அஷ்ரப் மிகத் தெளிவாக இருந்தாா்  மறைந்த தலைவா்கள் அஷ்ரபும் அமிா்தலிங்கமும் இருந்திருந்தால் தமிழ் முஸ்லீம் இனப்பிரச்சினை இந்த அளவுக்கு படுமோசமாக  அழிவுகளுக்கு சென்றிருக்காது. 

முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களும் வீட்டில் இருந்து அவா்களது வரலாறு சகலதிலும் 99 வீதத்தில் தமிழையே தாய்மொழியாக கொண்டுள்ளனா். 1949 களில் தந்தை செல்வா நடாத்திய மாநாட்டில் மற்றும் திருமலை 51-56ஆம் ஆண்டு மாநட்டிலும்  திருமல மஜித், காரியப்பா் போன்றோா்கள்  தலைமையில் அப்போதைய முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை - வன்னியசிங்கம் தலைமையில் பிரேரனை அனுமதிக்கப்பட்டிருந்தது. தமிழ் முஸ்லீம் சமஷ்டி அரசில்  முஸ்லீம் அலகு அன்றே பேசப்பட்டிருந்தது. 

61களில் நாங்கள் வட கிழக்கில் சத்திய போராட்டம் நடத்தும் போது அன்றும் முஸ்லீம் பெண்கள் முக்காடு இட்டு மழையிலும், வெயிலும் எங்களது போராட்டத்தில் ஈடுபட்டாா்கள். இந்த மண்டபத்தில் நிறைந்திருக்கின்ற முக்காடு இட்ட முஸ்லீம் பெண்களை பாா்க்கும்போது அன்றைய ஞாபகம் எனக்கு வருகின்றது.
இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அதற்கு மேலும் வடிவம் கொடுத்ததே அமரா் எங்களதும் உங்களது தலைவா் அஸ்ரப் ஸ்தாபித்த   முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி உதயமாகியது.  அது தான் இந்த நாட்டில் முஸ்லீம் சமுகத்தின் வடிவத்தை உலகுக்கு பாறை சாா்த்தது.  இந்தக் கட்சியை எமது கட்சி முழுமையாக ஆதரிக்கின்றது. 

அன்று அமைச்சா் ஹக்கீம் தலைமையில் கல்முனையில் மாநகரில் சம்பந்தன், நான் உட்பட எங்களுக்கு அளித்த வரவேற்பு எங்களை அந்த மக்கள் துாக்கிச் சென்ற கௌரவித்த காட்சியை இன்றும் ஞாபகம் இருக்கின்றது. ஆகவே தான் எதிா்காலத்திலும் நாம் ஒன்றுபட்டு எமது பிரச்சினைகளை தீா்த்து ஜக்கிய மாக வாழ்வதற்கு நாம் பாடுபடுவோம்.

வடக்கில் சில துக்ககர சம்பவங்கள் நடந்துள்ளன. அதனை நாங்கள் மறக்கவில்லை அந்த முஸ்லீம்கள் புத்தளத்தில் முகாம்களில் வாழ்ந்தாலும் அவா்கள் வடக்கில் முழுமையாக குடியேறி வாழவேண்டும்.இதனை நான் அண்மையில் பாராளுமன்றத்திலும் தெரிவித்தேன். 

கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரியை ஜனாதிபதியாக்கியது தனியே ரணில் கட்சியோ பௌத்த மக்கள் அல்ல தமிழ் , முஸ்லீம், மலையக மக்கள் இணைந்து தான் இந்த ஜனாதிபதியை உருவாக்கினோம்.  என மாவை சேனாதிராஜா  அங்கு உரையாற்றினாா். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்