அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு பூராவும் ஐந்து இலட்சம் வீடமைப்பு


(அஷ்ரப் ஏ சமத்)
அமைச்சர் சஜித் பிரேமதாசா
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினது; அமைச்சினாலும்   வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும்  இணைந்து மத்திய தர வகுப்பினருக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு பூராவும்  ஐந்து இலட்சம் வீடமைப்பு திட்டத்தினை; ; முன்எடுக்க உள்ளோம்.
என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று(14) செத்சிறிபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்க்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் அங்கு தெரிவித்தாவது -
பிரதம மந்திரியின்  தலைமையில் ஐந்து இலட்சம் வீடமைப்பு திட்டத்தினை நாம் கால வரையறைக்குட்பட்டு இலக்கினை நோக்கிச் செல்வதற்கு தெளிவான ஒரு வழிமுறை ஒன்றினை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.
வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து பல்வேறு அமைச்சுக்களுடன் வீடமைப்புத்திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளன.   வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை  மீள் குடியே;ற்ற அமைச்சு, மகளிர்களுக்கான வீடமைப்பை  மகளிர் வீடமைப்பும், மலையக வீடமைப்புத்திட்டத்தினை - பெருந்தோட்ட மலையக அமைச்சும், மீனவர் வீடமைப்பினை, மீன்பிடி கடற்றொலில் அமைச்சு, சமுர்த்தி பயணாலிகளுக்கான வீடமைப்புக்களை, சமுர்த்தி அமைச்சும், வனஜீவராசி அமைச்சுடன் இணைந்து யானைகளால் அழிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்தல் போன்ற பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை 2016ல் ஆரம்பிககப் பட உள்ளன.
அந்த வகையில் இந்த நாட்டில் வீடற்ற ஏழை எளிய மக்களின் 50,000 குடும்பங்களுக்கு ஒரு வீட்டிற்கான உரிமையினைப் பெற்றுக் கொடுக்கும் “செமட்ட செவண” 50,000 வீடுகள் தேசிய திட்டம்; ஆரம்பித்து வைக்கப்பட்டது.
100 நாட்களினுள் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதனை இலக்காக கொண்டு பணிகளை ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரையில் 39,000 புது வீடுகளும் விருத்தி செய்யப்பட்ட  6000 வீடுகளுடன் மொத்தமாக 35,000 வீடுகள் கொண்ட ஒரு வேலைத்திட்டம் இன்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள 15,000 வீடுகளும் 2016 ஆம் ஆண்டில் வீடமைப்பு திட்டத்தில் சேர்த்து ஒரு தேர்தல் தொகுதிக்கு 1000 வீடுகள் வீதம் நாடு பூராகவும் 160,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
செமட்ட செவண வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையில் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ள ஏனைய 15,000 வீடுகளும் 2016 ஆம் ஆண்டில் “விசிரிநிவாச” (பரவலான வீடமைப்பு) வேலைத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி 2016 செமட்ட செவண “விசிரிநிவாச” வேலைத்திட்டத்தின் ஆரம்ப 15இ000; வீடுகள் அதிகரித்துள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்கனவே ஆரம்ப திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக தேவைப்படும் காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக குடியிருப்பு தினத்தினை முன்ணிட்டு பூசப்படாத 25 ஆயிரம் வீடுகளுக்கு சீமெந்து பூசிக் கொடுப்பதற்காக 250 மில்லியன் ருபாவை செலவழித்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தோம்.
அந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.  விசேடமாக 500 வர்க்க அடி வீடுகள் கொண்ட ஏழை எளிய மக்களது வீடுகளில் சீமெந்து பூசப்படாத வீடுகளை அபிவிருத்தி செய்யும் இலக்கினைக் கொண்டு  உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வெறும் மாநடுகள், கருத்தரங்குகளை நடாதத்தாமல்  இந்த நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களது 25ஆயிரம் வீடுகளை சீமெந்தினால் பூசி அவர்களது வீட்டுப்பிரச்சினைக்கு ஒரு வழியமைத்துள்ளோம்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் சுண்ணாம்பு சாந்து பூசப்படாத 25,000 வீடுகளுக்கு சுண்ணாம்பு சாந்து பூசுவதற்காக மாவட்டம் தோரும் 1000 வீடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
2015 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சுண்ணாம்பு சாந்து பூசும் வேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.
2016 ஆம் ஆண்டினுள் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் படி மேலும் 75இ000 வீடுகளுக்கு சாந்து பூசும் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும்; உதாகம்மான வேலைத்திட்டத்திற்கு புத்துயிரூட்டி 2015 ஆம் ஆண்டில் 40 உதாகம்மான வேலைதிட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதனை டிசம்பர் 31ஆம் திகதியில் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். 2016 ஆம் ஆண்டில் நாட்டினுள் புதிதாக 200 உதாகம்மான கிராமங்களை உருவாக்கி கிராமத்திலிருந்து கிராமத்திற்கு நகரத்திலிருந்து நகரத்திற்கும் சென்று காணியற்ற கூட்டு குடும்பங்களுக்கு காணியின் உரிமையையும் தமக்கென ஒரு வீட்டினுள் வாழ்வதற்கான வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு எமது அமைச்சு இன்று சக்தி பெற்றுள்ளது.
வீடற்ற மக்களுக்கு ஒரு வீட்டினை கட்டிக் கொள்வதற்கு ஒரு அங்குள காணியேனும் காணப்படாத ஏழை எளிய குடும்பங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல் செய்யப்படுகிறது.
இதன் கீழ் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு ஒரு காணித்துண்டு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படுவதுடன் ஒரு வீட்டினை நிர்மாணித்துக் கொள்வதற்காக 4மூ வீத குறைந்த வட்டி வீதத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா கடன் தொகை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்படுகிறது. இதன்படி 500 சதுர அடி கொண்ட ஒரு வீடு பயனாளி குடும்பங்களின் உழைப்புடன் நிர்மாணிக்கப்படுகிறது.
காட்டு யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையிலான மோதல்களின் காரணமாக சேதமடையும் வீடுகளுக்கு சலுகைகள் வழங்குவதற்கும் நாம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இடர் முகாமைத்துவ அமைச்சினையும் இணைத்துக் கொண்டு பல்வேறு இயற்கை மற்றும் சூழல் காலநிலை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் ஒரு திட்டத்தினை எதிர்வரும் காலகட்டத்தினுள் அமுல் செய்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்