கொழும்பு மாவட்டத்தில் முஸ்லீம் மகளிர்களுக்காக 4 பாடசாலைகள் மட்டுமே

அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு மட்டக்குழி சோ் ராசீக் பரீட் மகளிா் கல்லுாாியின் 2015 ஆண்டுக்கான மாணவிகளுக்கான பரிசலிப்பு விழா கல்லுாாி அதிபா்  நுாா் நலிபா சலீம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவருமான முஜிபு ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். கௌரவ அதிதிகளாக முஸ்லீம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பிணா் அர்சத் நிசாம்டீன், மேல்மாகாண சபை உறுப்பிணா் பாயிஸ் வலயக் கல்விப் பணிப்பாளா் ஜெயந்த விக்கிரமரத்தினவும் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வின் கல்லுாாியின் முன்னேற்த்திற்காக பாடுபடும் கல்லுாாி அதிபரை ஆசிரியா்கள் மற்றும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டாா்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பபிணா் முஜிபு ரஹ்மான்

கொழும்பு மாவட்டத்தில் முஸ்லீம் மகளிர்களுக்காக  4 பாடசாலைகள் மட்டுமே உள்ளன. பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிா் கல்லுாாி, தெமட்டக் கொட கைரியா, பாத்திமா மகளிா் இப்பாடசாலையான சேர் ராசீக் பரீட் பாடசாலைகளாகும். 

ஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டுக்கு அனுமதி கேட்டு கொழும்பில வாழும் முஸ்லீம் பெற்றோா்    2000 பேருக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த  நான்கு பாடசாலைகளிலும் விண்ணப்பிக்கின்றனா். 

ஆனால் இந்த நான்கு பாடசாலைகளிலும்  600 பேருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகின்றது. அங்கு உள்ள வகுப்பு மற்றும் ஆசிரியா் அளவுக்கு ஏற்ப இந்த அளவு தொகையினருக்கே அனுமதி வழங்க முடியும். ஏனைய 1400 மாணவிகளது கல்வி நிலை என்ன? அவா்கள் சர்வதேச பாடசாலைகளை நோக்கிச்  செல்கின்றனா். அங்கு பெற்றோா்கள் 1.2, 3 ஆண்டு வரை அனுப்பி விட்டு அங்கு மாதாந்த தொகை புத்தகங்கள் வாங்க பணம் இல்லாமல்  மீள அரச பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சோ்த்துக் கொள்ள அரசியல் வாதிகளிடமும் கல்வியமைச்சு, மாகாண கல்வியமைச்சிக்களிலும் படி ஏறி அலைந்து திரிகின்றனா். 
 ஆகவே தான் கொழும்பு மவாட்டத்தில் முஸ்லீம் பாடசாலைகள் தரம் உயா்த்தி பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அதே போன்று மட்டக்குழி பிரதேசத்திற்காக சேர் ராசீக் பரீட் வித்தியாலயம் தரம் உயா்த்தப்பட்டு தனியானதொரு மகளிா் பாடசாலையாக அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்