31வது அரச கலாபூஷண விருது வழங்கள் வைபவம்

ஏ.எஸ்.எம்.ஜாவித்)   2015.12.15வருடாவருடம் அரசினால் கலை, கலாச்சார துறைகளில் உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அரசின் 31வது அரச கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வு நேற்று (15) மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் "ஸ்ரீலங்கா யூத்" மண்டபத்தில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவின் தலைமையில் இடம் பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களம், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றினைந்து நடாத்தும் இவ்விழாவில் இவ்வருடமும் மூவினத்தைச் சேர்ந்த சுமார் 301 கலைஞர்களுக்க கலாபூஷண விருதும் பொற்கிளியும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாந்து, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்பட அமைச்சினதும், திணைக்களங்களினதும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்