ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசன் மாதாந்த கூட்டம் 17.12-2015

மாதாந்த கூட்டம் 17.12-2015
ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசன் மாதாந்த கூட்டம் 17.12-2015 மாலை 4.30க்கு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தை ஆரம்பித்து வைத்த செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் அண்மையில் மரணமடைந்த பௌன்டேசன் தலைவரின் மரணம் பற்றிய தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன் புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்யும்படி சபையோரை வேண்டிக்கொண்டார்.  அதன் படி புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நவ்சாத் முஹிடீன் அவர்களை டொக்டர் நாஸிம் பிரேரிக்க அதனை காமிலா யூசுப் ஆமோதித்தார்.
அதனை தொடர்ந்து புதிய தலைமையை ஏற்றுக்கொண்ட நவ்சாத் முஹிடீன் தனது கண்ணி தலைமையுரையில் முன்னாள் தலைவர் சட்டத்தரணி கவ்சுல் அமீனின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். அவரின் இழப்பு அவரது குடும்பத்துக்கு பாரிய இழப்பாக இருக்கலாம். அதை விட எமது மீடியா பவுன்டேசனுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் மிகவும் வேலைப்பழுவுள்ள ஒருவராக இருந்தும் எமது இந்த அமைப்பை தலைமை தாங்கி நடத்த முன்வந்தமை மிகப்பெரிய விடயமாகும். அதுவும் எமது அமைப்பின் ஆரம்பத்திலேயே அவர் எமக்கு கைகொடுத்ததை இலகுவாக கருத முடியாது. அவரது திடீர் இழப்பு எமது அமைப்புக்கு சோதனையாக இருந்த போதும் அதனை வெல்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
அவரது தலைமைப்பதவிக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாத போதும் என்னாலான பணியை செய்ய முயற்சிப்பேன் என கூறினார்.
அதை தொடர்ந்து மறைந்த தலைவருக்காக பிரார்த்தனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து மீடியா பௌன்டேசனின் ஊடகவியலாளர்களுக்கான செமினார் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்த வருடம் ஜனவரிக்குப்பின் நடத்துவது என்றும் இது சம்பந்தமாக இதற்கு ஜெர்மன் தூதுவராலயத்தினால் அணுசரனை வழங்கவுள்ளதாக முன்னாள் தலைவருக்கு அறிவித்துள்ளதால் அது பற்றிய விபரங்களை அவரது குடும்பத்திடம் கேட்டு தெரிந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் புதிய தபால் தலைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு அதற்குரிய பொறுப்பு செயலாளரிடம் வழங்கப்பட்டது. அமைப்பின் பதிய முகவரியாக 21, சீமென்ஸ் வீதி, கொழும்பு 10 என்பதை பாவிப்பதற்கு சபை ஏகமனதாக அனுமதி வழங்கியது.
அமைப்புக்கான வங்கிக்கணக்கு திறப்பது பற்றி பேசப்பட்டதுடன் இதற்குரிய பொறுப்பு றிஸ்வியிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீல், ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் மாலை 5.30 அளவில் சலவாத்துடன் நிறைவு பெற்றது.

…………………………
செயலாளர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்