Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

கொழும்பு மாநகர சபை அதன் சிறப்புமிகு 150 ஆவது ஆண்டு

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு மாநகர சபை அதன் சிறப்புமிகு 150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட்டமும் சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  நடைபெறும்.  

உலகின் பல பாகங்களைச் சோ்ந்த மேயா்கள் மற்றும் பிரநிதிகள் பங்கு பெறுகின்றனா்.  இம்மாநாடு ”எதிா்கால நகரங்கள்” எனும் தலைப்பில் இடம்பெறும். இதன் ஆரம்ப நிகழ்வில்  சபாநாயகா் கரு ஜயசூரிய,  அவா்கள் தலைமை தாங்குவாா். இதன் போது மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி  அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறப்புரை ஆற்றுவாா்.  இலங்கை மத்திய வங்கி ஆளுநா் அர்ஜூன் மகேந்திரன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளுவாா். என சபாநாயகா்  கரு ஜயசுரிய தெரிவித்தாா். 


கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி இன்று(1) ஆம் திகதி கொழும்பு மேயா் ஹவுஸில் ஊடக மாநாடு நடைபெற்றது. இம் மாநட்டில் சபாநாயகா் கரு ஜயசூரிய  மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேசப்பிரிய, கொழும்பு மாநகர மேயா் ஏ.ஜே.எம் முசம்மில் ஆகியோா் கருத்து தெரிவித்தனா் 

இக் கொண்டாடட்ங்கள்  பற்றி மேயா் முசம்மில் கருத்து தெரிவிக்கையில் -

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பழைமை வாய்ந்த மாநகர சபைகளின் ஒன்றான கொழும்பு மாநகர சபை, கொழும்பு வாழ் மக்களுக்கு உயா்தர நவநாகரிக வசதிகளை வழங்குவதில் முன்னணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.  
இறுதிக் கொண்டாட்டங்கள் 14ஆம் திகதி கொழும்பு மாநகர வளாகத்தில் நிகழும். பல்லினத்துவ பிரதிபலிக்கும் வண்னமயமான கலாச்சார நிகழ்வு அமையும். இக்காலாச்சார நிகழ்வின்போது மேயா்களாகவிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயா்கள் மற்றும் மதிப்புமிக்க அரச பதவிகளை வகிக்கும் மாநரக சபை அங்கத்தவா்கள் ஆகியோா் கொளரவிக்கப்படுவா்.

 150 ஆண்டுகள்   நிறைவையொட்டி 500 ருபா நாணயம் இலங்கை மத்திய வங்கியினால் அன்றைய தினம்  வெளியிடப்படும்.  அத்துடன் நினைவு தபால்  முத்திரை ஒன்றும் வெளியீட்டு வைக்கப்படும்.  கொழும்பு மேயரா்களாக பதவி வகித்த முன்னாள் பிரதமா் ,ஜனாதிபதி அமைச்சா்கள் சபாநயாகா் அமைச்சா்கள் அவா்களது குடும்பங்களை அழைத்து நினைவு விருது வழங்கப்படும்.  அல்லது மேயராக பதவிவகித்தவா்கள்  உயிருடன் இருப்பின் அவா்களது சேவைகை்காகவும்  நினைவுச் சின்னம் வழங்கப்படும். 

கொழும்பு மேயராக 1937  தொடக்கம் பதவி வகித்த  24 மேயா்கள் வாழ்பவா்கள் மற்றும் மறைந்தவா்கள் யாவரும் கொளரவிக்கப்பட் உள்ளனா். பதவி வகித்த  சரவணமுத்து,  சொக்மன், ஏ.ஈ குணசிங்க,  ஜேர்ஜ் டி சில்வா,  ஆர்.டி. மெல், குமாரன் ரத்னம், செல்லமுத்து, சீ.டி கிரேரோ, டி. ருத்ரா,  என்.எம். பெரேரா,  வீ.ஏ சுகதாச,  எம்.எச். மொஹமத்,  வின்சன்ட் பெரேரா, ஜாபீா். ஏ. காதா், ஏ.எச்.எம். பௌசி, பீ.சிறிசேனா குரே,  ஹூசைன் மொஹமட்,  ரட்னசிரி ராஜபக்ச,  கே. கணேசலிங்கம்,  தேசபந்து கரு ஜயசூரிய,  ஓமா் காமில்,  பிரசன்ன குணவா்த்தன, உவைஸ் மொஹமட் ்இம்தியாஸ்  இதனை விட  முன்னாள் பிரதமா்  எஸ்.டப்பிளியு பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர்.ஜெயவாத்தன,  ஆர்.பிரேமதாச,  ஆகியோா்கள் 1937 காலப்பகுதிக் முன்னா் மேயர்களாக கடமையாற்றியுள்ளனா். ஆளுனா் ஜனாதிபதியாக பதவி வகித்த வில்லியம் கோபல்லாவ,  கொழும்பு மாநகர உறுப்பிணா்களாக பதவி வகித்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சா்கள் நிமல் சிறிபால டி சில்வா,  அலவி மௌலானா, விமல் வீரவன்ச ,வாசுதேவ நாணயக்கார,  மனோ கணேசன், மிலிந்த மொரகொட, , கீதாஞ்சன குணவா்த்தன,  சனில் ஹந்துநத்தி ஆகியோறும் கௌரவிக்கப்பட உள்ளனா்.    

கொழும்பு மாநரக  சபையில் உறுப்பிணராக வந்து அரசியல் பல்கலைக்கழகம் போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமாராகவும் இந்த மாநகர சபை உருவாக்கியுள்ளது. 
இதுவரை உலக நாடுகளின் 20 மேயா்கள் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா். என  மேயா் முசம்மில் தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய