திருமலை மாவட்ட மக்களுக்கு 02வது அதிகாரத்தை வழங்கினார் ரிசாத்ஏ.எச்.எம்.பூமுதின்

இலங்கை கைத்தொழில் வடிமைப்பு சபையின் தலைவராக திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் திடீர் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் வாணிப அமைச்சின் கீழ் செயற்படும் இச்சபைக்கான நியமனத்தினை கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா தேசியத் தலைவருமான ரிசாத் பதியுதீன் அமைச்சில் வைத்து நேற்று முன்தினம் வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாவட்ட முகாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திடீர் தௌபீக் கடந்த பொதுத்தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் ரிசாத் பதியுதீனின் தலைமையை ஏற்று அ.இ.ம.காவில் இணைந்து கொண்டார்.

பொதுத்தேர்தல் வேட்புமனுவின் பின்னர் திடீர் தௌபீக்கின் ஏற்படாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் மூதூரில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிசாத் பதியுதீன் பொதுத் தேர்தலின் பிற்பாடு அதிகாரமிக்க பதவியொன்றினை திடீர் தௌபீக் மூலமாக மூதூருக்கு அதிகாரத்தை பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதியளித்திருந்தார்.

அதன் படி பொதுத்தேர்தலின் முடிவானது திருகோணமலை மாவட்ட முழு முஸ்லிம்களுக்கு அதிகாரப்பலம் பொருந்தியதாக அ.இ.ம.கா மூலமான எம்பி ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பிற்பாடு தற்போது இரண்டாம் கட்ட அதிகாரப் பலமாக திடீர் தௌபீக்கிற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு ரிசாத் பதியுதீன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி சத்தியத் தேசியத் தலைவர் என்ற உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார் என திருமலை மாவட்ட மக்கள் கூறி நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்