BREAKING NEWS

கல்முனை புதிய நகரத் திட்டத்திற்கு எத்தடை வரினும் அத்தடைகள் தகர்த்தெறிந்து முன்னேறுவோம்.- வை.எல்.எஸ்.ஹமீட்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்
மறைந்த தலைவர் கனவு கண்ட புதிய கல்முனைநகரம், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில்விக்ரமசிங்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டு மீண்டும்2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவினால் அவ்வாக்குறுதி புதுப்பிக்கப்பட்டு,இன்று அது செயலுருப் பெறுவதற்கானமுன்னெடுப்புக்கள் நடைபெறுகின்ற நிலையில், தமிழ்தரப்பினர் குறிப்பாக ரெலோ அமைப்பு தலைவர்செல்வம் அடைக்கலநாதன், தமிழர் மகா சபைபோன்ற அமைப்புக்கள் இணைந்து இதற்கு எதிராகஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருப்பதும் அதனைபாரதுரமாக எதிர்ப்பதும் ஆச்சரியப்பட்க் கூடிய ஒருவிடயமல்ல. வட கிழக்கின் மொத்த முஸ்லிம்சமூதாயம் தொடர்பாக தமிழ் தரப்பினரின்மனோநிலையை எடுத்துக் காட்டுகின்ற மற்றொருநிகழ்வு மட்டுமே இதுவாகும்.
அன்று மறைந்த தலைவர் இந்த புதிய நகரத்திட்டத்தைக் கொண்டுவந்த பொழுதும் இதனைஎதிர்த்தார்கள். இங்கு அவர்கள் மூன்று பிரதானவிடயங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஒன்றுஉத்தேச புதிய நகரத்திற்காக சுவீகரிக்கப்பட இருக்கும் காணிகளில் கணிசமான அளவு காணிகள் தமிழர்களுக்கு உரியதாகும். இரண்டாவது,கல்முனையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். எனவே புதிய நகரத் திட்டம் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றத்தைஏற்படுத்தும். 3 வது கல்முனை ஒரு வியாபார கேந்திரநிலையமாக மாறும் என்பனவாகும்.
முதலாவது காணி தொடர்பான விடயத்தைபொறுத்தவரையில் கல்முனை புதிய நகரத்திற்காகமறைந்த தலைவரின் காலத்திலிருந்து பெறுவதற்குஉத்தேசிக்கப்பட்ட காணிகள் கடந்த பலஆண்டுகளாக நெற்செய்கை பண்ணப்படுவதில்லை. எதுவித பிரயோசனமுமற்று தரிசாக கிடக்கின்றகாணிகளை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசுபெற்றுக் கொள்வதென்பது ஒரு நியாயமானவிடயமாகும். உரிமையாளர்கள் அந்தக்காணிகளுக்குரிய நியாயமான நஷ்டஈட்டைக்கோரலாம். அதில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அதுதொடர்பாக தங்களது எதிர்ப்பைக் காட்டலாம். மாறாக இந்தக் காணிகள் எங்களுக்குச்சொந்தமானது, இதனால் எங்களுக்கும்பிரயோசனமில்லை. பொதுத்தேவைகளுக்குபிரயோசனப் படுத்துவதற்கு அரசையும் அனுமதிக்கமாட்டோம், என்பது வரட்டு வாதமாகும். இரண்டாவதுகல்முனையில் தமிழர்களின் இன விகிதாசாரத்தில் மாற்றம் வரும் என்பதாகும். புதிய நகரம்இனிமேல்தான் உருவாக்கப்பட இருக்கின்றது. எனவே இதுவரையில் உருவாகாத அந்த நகரத்தில்தமிழாகளின் விகிதாசாரமும் பூச்சியமாகும். முஸ்லிம்களின் வகிதாசாரமும் பூச்சியமாகும். எனவேபூச்சியமான விகிதாசாரத்தில் எவ்வாறு விகிதாசாரமாற்றம் ஏற்படும். இன்னும் கூறப்போனால் உருவாகஇருக்கின்ற புதிய நகரத்திற்காக அடையாளம் காணப்பட்ட எல்லைக்குள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் கல்முனைக்குடியில்இருந்து ஏற்கனவே சுனாமியின் பின்னர் குடியேறியபல நுறு முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன. அந்தவகையில் பார்த்தால் புதிய நகரத்தில் தமிழர்களின்பிரசன்னம் பூச்சியமாக இருக்கின்ற வேளை குடியேறியமுஸ்லிம் குடும்பங்கள் 100 வீதம் என்று கூற வேண்டும். எனவே அங்கும் தமிழர்களின் விகிதாசார மாற்றம்என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தமிழ்தரப்பினர் விகிதாசார மாற்றம் என்று கூறுவதுகல்முனை நகரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமான கல்முனைக்குடி என்று அடையாளம் காணப்படுகின்ற பகுதியை கழித்து வருகின்ற எஞ்சிய பகுதிக்கு எதிரேஇருக்கின்ற காணிகள் மூடப்பட்டு அங்கு முஸ்லிம்கள்குடியேற்றப்படுவார்களேயானால் தங்களுடையவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படும் என்பதாகும், மறுவார்த்தையில் கூறுவதானால் குறித்த கல்முனையின் எஞ்சிய பகுதிக்கு நேரே ஒரு நகரம்உருவாக்கப்பட்டால் அந்த நகரத்தில்குடியேற்றப்படுகின்றவர்களும் தற்போது மக்கள் வாழும்குறித்த கல்முனை பகுதியின் கிழக்குப் பக்கத்தில்வாழுகின்ற மக்களின் எண்ணிக்கையோடுகூட்டப்பட்டு விகிதாசாரம் புதிதாககணக்கிலிடப்பட்டால் தங்களது விகிதாசாரத்தில்பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த வாதம்முன்வைக்கப்படுகின்றது. இதற்கான முதலாவது பதில்நகரமே புதிதாக உருவாக இருக்கின்ற பொழுது அதில்குடியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கையையும் பழையநகரத்தில் வாழுகின்றவர்களின் எண்ணிக்கையையும்கட்டாயம் கூட்டப்பட வேண்டும், என்கின்ற விதிகள்ஏதாவது இருக்கின்றதா ? ஏன் அதற்கு புதிய பெயரைவைத்து அதனை ஒரு புதிய நகராகவே பார்க்கமுடியாதா என்பதாகும். இரண்டாவது பதில்கல்முனையின் தென் பகுதி எல்லை கல்முனைமஹ்மூத் பாலிகா மகா வித்தியாலய வீதி என்பதாகும்என்பதுதான் உண்மையாகும். ஏனெனில் கல்முனைபட்டின சபையாக இருந்தபொழுது கல்முனை 7 ஆம்வட்டாரத்து எல்லை மஹ்மூத் பாலிகா மகாவித்தியாலய வீதியாகும். எனவே கல்முனையில்பெரும்பான்மை சமூகம் தமிழ் தரப்பினர்கூறுவதுபோல் தமிழர்களல்ல. மாறாக முஸ்லிம்களாகும். எனவே அந்த கல்முனைப்பிரதேசத்திற்குள் வாழுகின்ற எந்த சமூகத்தைச்சேர்ந்தவர்கள் புதிய நகரத்தில் குடியேறினாலும்கல்முனையில் மொத்தக் குடிசன விகிதாசாரத்தில்மாற்றம் ஏற்படாது. வெளியிலிருந்து யாரையாவதுகொண்டு வந்து குடியேற்றினால்தான் அந்தவிகிதாசாரத்தில் தாக்கம் ஏற்படும். அவ்வாறானநோக்கம் அத்திட்டத்தில் இல்லை. அதற்கானஅவசியமுமில்லை.
ஆனால் கல்முனைக்குடியை கல்முனைநகரத்திலிருந்த வேறு பிரிக்கின்ற ஒரு பார்வை தமிழ்தரப்பினர்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்றது. ஆனால் கல்முனையில் ஒரு பாகமாக இருந்தகுடியிருப்புக்களைத் தான் கல்முனைக் குடியிருப்புஎன்று அன்று அழைத்தார்கள். அதனால்தான் கல்முனைக்குடியாக அடையாளப்படுத்தப்படுகின்ற அந்தப் பிரதேசம் முன்னாள் கல்முனை பட்டண சபையின் நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் வட்டாரங்களைக் கொணடிருந்தது. எனவே கல்முனை மாநகரின் பிரிக்க முடியாத இந்த நான்கு வட்டாரங்களையும் கல்முனை மாநகரத்திற்கு சொந்தமானவையல்ல என்று தங்கள் வசதிக்காக தமிழ் தரப்புக்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக அது யதார்த்தமாகி விடாது. சட்ட ரீதியாக கல்முனையின் அங்கமாக இருக்கின்ற பகுதிகள் என்றுமே கல்முனைதான். என்பதை சம்மந்தப்பட்டவர்கள்புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கல்முனையின் பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் என்கின்ற உண்மையை செயற்கைக் காரணங்களைக் கொண்டு மாற்றிவிட முடியாது. என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மறுபுறத்தில் கல்முனைக்குடி கல்முனையுடன்தொடர்பற்ற வேறு ஒரு பிரதேசமாக இருந்திருந்தால்கல்முனைக்குடி என்ற வார்த்தையில் கல்முனை என்ற பதம் முன் இணைப்பாக வந்திருக்காது. மாறாக வேறுஒரு பெயர் வந்திருக்கும். ஆனால் கல்முனை என்றசொல்லுடன் குடி என்ற சொல்லை இணைத்ததனால்அது கல்முனையில் இருந்து வேறுபட்ட ஊர் என்றுஅவர்கள் வாதிடுவார்களானால் யாருமே வாழாத தரிசுநிலத்தை புதிய நகரமாக்குகின்றபொழுது அதற்குகல்முனையுடன் புதிய நகரம் என்று பெயரிட்டால்கல்முனை என்ற சொல்லுடன் இன்னும் ஒரு சொல்இணைக்கப்படுவதனால் அது இன்றிருக்கின்றகல்முனையில் இருந்து வேறு படுத்திப் பார்க்கப்படவேண்டும். மாறாக புதிய நகரம் என்ற சொல் புதியஉருவாக்கத்தைத் தான் காட்டுகின்றதே தவிரகல்முனை என்ற பதத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுமானால்அதே வாதம் கல்முனையின் ஒரு பகுதியில்குடியிருப்புக்கள் இருந்ததனால் “குடி” என்ற சொல்இணைக்கப்பட்டிருக்கின்றது. எனவே அது கல்முனைஎன்ற பதத்தில் தாக்கம் செலுத்தாது தன்னை வேறாகஅடையாளம் காட்டுவதற்கு என்ற வாதத்தையும்ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதேநேரம் புதிய நகரத்திற்கு கல்முனையுடன் சம்மந்தமில்லாத ஒரு புதிய பெயைரைச் சூட்டினால் புதிய நகரம் கல்முனையுடன் சம்மந்தப்பட்டது அல்ல என்று தமிழ் தரப்பினர் ஏற்றுக் கொள்வார்களா ? என்பதை தமிழ் தரப்பினர் சிந்திக்க வேண்டும். எனவே தமிழ் தரப்பினர் வரட்டு வாதங்களை கைவிட வேண்டும். முன்னாள் கல்முனை பட்டின சபையில் சகலவிதமான சட்ட ரீதியான பதிவுகள் இருந்தும் குடி என்ற ஒரு சொல் இணைக்கப்பட்டதற்காக பெரும்பான்மை முஸ்லிம்களை வேறுபிரித்து கல்முனையில் தாங்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நிறுவ முற்படுகின்ற வரட்டு வாதத்தை கைவிட வேண்டும்.
இவை எல்லாம் ஒரு புறமிருக்க தமிழர்கள் இன்று கல்முனை என்ற பதத்திற்குள்அடையாளப்படுத்துகின்ற பிரதேசத்தில் தமிழர்கள்அதிகம் வாழுகின்றார்கள் எனவே அதற்கு நேரேஏற்படுத்தப்படுகின்ற குடியிருப்புக்கள் தங்களின்விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாதுஎன்ற வாத்த்தை அப்படியே எடுத்துக் கொண்டாலும்கல்முனையில் சின்னத்தம்பி வீதிவரை முஸ்லிம்களேபெரும்பான்மையாக வாழுகின்றார்கள். புதியநகரத்திற்காக பெறப்பட உத்தேசிக்கப்படுகின்ற காணிகளின் பெரும்பகுதி இந்த சின்னத்தம்பி வீதியின்எல்லைக் கோட்டுக்குள்ளேயே உள்வாங்கப்படுகின்றதுஎன்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றிற்கு அப்பால் எழுப்பப்பட வேண்டிய அடுத்தகேள்வி முஸ்லிம் குடியிருப்புக்கள்ஏற்படுத்தப்படுவதனால் தமிழர்களின் விகிதாசாரம்பாதிக்கப்படும் எனபதற்கு இவர்கள் தாங்கள்குறித்துரைக்கின்ற அந்தக் காணிகள்தான்குடியிரப்புக்குப் பயன்படுத்தப்படும் என்று இவர்களுக்குயார் கூறியது ? குடியிரப்புக்கள் ஏற்படுத்தப்படுவதாகஇருந்தால் கல்முனைக்குடியாக அடையாளம்காட்டப்படுகின்ற எல்லைக்கு நேரே இருக்கின்றகாணிகளில்தான் அது இடம்பெறக்கூடியவாய்ப்புக்கள் அதிகமாகும். ஏனெனில் தமிழ் தரப்பினர்குறிப்பிடுகின்ற காணிகள் கல்முனையின் பிரதானவர்த்தக பிரதேசத்தை அண்மியதாகும். எனவே அந்தக்காணிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசநிறுவனங்கள் அமைவதற்குத்தான் வாய்புக்கள்அதிகமாகும். மறைந்த தலைவரின் காலத்தில்அவ்வாறுதான் தாங்கள் அதனை திட்டமிட்டோம். இன்று அதிகாரத்தில் இருப்பவர்களும் பெரும்பாலும்அதைத்தான் பின்பற்றுவார்கள் என்றுநினைக்கின்றேன். எனவே குறித்த காணிகளில்குடியேற்றம் செய்வதற்கே வாய்ப்பில்லை என்கின்றபொழுது விகிதாசார மாற்றம் பற்றி தமிழ் தரப்பினர்முன்வைக்கும் வாதங்கள் எடுபடக் கூடியவையா ? குறித்த காணிகளில் குடியேற்றம் இடம்பெறும் என்றுஒரு வாத்த்திற்கு வைத்துக் கொண்டாலும் தமிழர்கள்அவ்வாறு குடியேற்றம் நடைபெறுகின்றபொழுதுதங்களுக்கு நியாயமான பங்கு தரப்பட வேண்டும்என்று வாதிடலாமே தவிர புதிய நகரமே உருவாகக்கூடாது என்று போராடுவது எந்த விதத்தில்நியாயமானது ? இது வெறுமனே முஸ்லிம்கள் மீதுதமிழ் தரப்பினர் கொண்டிருக்கின்றகாழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இல்லாமல் வேறுஎதுவாக இருக்கலாம்.
அவர்களது மூன்றாவது காரணம் கல்முனையை ஒருவியாபார கேந்திர நிலையமாகமாற்றப்போகின்றார்கள் என்பதாகும். அதுஉண்மையான காரணமாகும். கல்முனையை ஒருவர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதில் என்னதவறு இருக்கின்றது. வட கிழக்கில் மிகத் தொன்மைவாய்ந்த பிரபலமான வர்த்தக நகரம்தான் கல்முனை. அவ்வாறான ஒரு நகரத்தை மேலும் அபிவிருத்திசெய்து மிகச் சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாகமாற்ற முற்படுவது வர வேற்கப்பட வேண்டிய விடயமா? அல்லது எதிர்க்கப்பட வேண்டிய விடயமா ?
இலங்கையில் மட்டுமல்ல உலத்திலேயே தாங்கள்வாழுகின்ற ஒரு நகரம் ஒரு சிறந்த வர்த்தக மையமாக மாற்றப்படுவதை எதிர்க்கின்ற ஒரு சம்பவம் கல்முனையில்தான் முதல் தடவையாகஅரங்கேற்றப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன்.
இது தமிழ் தரப்பினர் முஸ்லிம்கள் மீதுகொண்டிருக்கின்ற, தொடர்ச்சியாக காட்டி வருகின்ற இனக்குரோத்த்தின் மற்றுமொரு வெளிப்பாடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மொத்த சிறுபான்மைக்கும் எதிரான பொதுபல சேனாவை தமிழ் தரப்பினர்கொண்டுவந்து முஸ்லிம்களுக்கு எதிராக இனக்குரோத அசிங்கம் அரங்கேறியதும் இந்தக்கல்முனையில்தான். இந்தக் கல்முனைத்தொகுதியையே ஆண்ட ஒரு முது பெரும்அரசியல்வாதி எம்.எஸ். காரியப்பரின் பெயரைச்சூட்டுகின்ற ஒரு நிகழ்விற்குக் கூட அடாவடித்தனமாக எதிர்ப்புக் காட்டிய இனக்குரோதம் இடம்பெற்றதும் கல்முனையில்தான்.
கல்முனை தரவைக்கோயில் வீதியில் ஒரு காலத்தில்ஒரு சில தமிழ் குடும்பங்கள் இருந்தார்கள் என்பதுஉண்மை. ஆனால் இன்று 100 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற அவ்வீதிக்கு புதிய பெயர் வைப்பதை பண்டைய வரலாற்றைக் கூறி எதிர்ப்பதும் இதே கல்முனையில்தான். அதே நேரம் தரவைக்கோயில் பிரதான வீதியின் எதிர்ப்பக்கத்தில் இருக்கின்றதேதவிர குறித்த பாதையில் இல்லை. என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். மறுபுறத்தில் இலங்கையில் அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமய நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்ற இரண்டு பள்ளிவாயல்களுள் ஒன்றான “கடற்கரைப்பள்ளிவாசல்” குறித்த வீதியில்அமைந்திருக்கின்றது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டும்.
அதேநேரம் அன்று இந்திய அமைதி காக்கும் படை கல்முனையில் நிலை கொண்டபொழுது முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. அந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதே இனவாதிகள் முஸ்லிம்களைப்பற்றி இல்லாது பொல்லாததெல்லாம்கூறி முஸ்லிம்கள் பற்றிய ஒரு தவறானகண்ணோட்டத்தை இந்திய அமைதிப்படை மத்தியில் ஏற்படுத்தி இருந்தார்கள். அதன் காரணமாக அன்றைய தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது பலவிதமான இனவாதச் செயல்களை கட்டவிழ்ப்பதற்கு இந்தியப் படையினரும் துணைபோய்க்கொண்டிருந்தாகள். 1989 பொதுத் தோதலில்மறைந்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஏற்பாட்டினால் முஸ்லிம் பிரஜைகள் குழு உருவாக்கப்பட்டு இந்திய அமைதிப்படையினருடன்ஒரு சுமூக உறவை ஏற்படுத்துவதற்கான களம்அப்போது ஏற்படுத்தப்பட்டது. அப்பிரஜைகள் குழுவின் செயலாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தொடர்பாக அமைதிப்படையினருக்கு மத்தியில் இந்த இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை பலத்த முயற்சிகளுக்கு மத்தியில் நாங்கள் மாற்றினோம் அல்-ஹம்துலில்லாஹ். அதன் பின்னரே இந்திய அமைதிப்படையினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சுமுக உறவு ஏற்பட்டது.
முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் நடை முறையில் முஸ்லிம்களுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என்பதை தொடர்ச்சியாக காட்டி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் அன்று ஒரு நாள் அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடி வேம்பு பிரதேச சபை பிரிந்ததும், அதன் பின்னர் நிந்தவூரிலிருந்து 5000 இற்கும் குறைவான வாக்குகள் கொண்ட தமிழ் கிராமமான காரைதீவுக்கு தனியாக ஒரு பிரதேச சபையையும், ஒரு பிரதேச செயலகத்தையும் பெற்றுக் கொண்டதும், சனத் தொகையை கூட்டிக் காட்டுவதற்காக சுமார்2000 வாக்க்கள் கொண்ட மாளிகைக்காடு என்ற முஸ்லிம் கிராமத்தையும், சுமார் 1000 வாக்குகள் கொண்ட மாவடிப்பள்ளி என்ற முஸ்லிம் கிராமத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்டதும்,
அது போதாது என்று தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டிய கல்முனையை இரண்டாகப் பிரித்து தமிழர்களுக்கென உப பிரதேச செயலகத்தை ஏற்படுத்தி இருப்பதும் அப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக கூறு போடப்பட வேண்டும் என்று இன்றுவரை போராடுவதுமாகும். இவற்றிற்கு காரணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எந்தவொரு ஆள்புல எல்லைக்குமான பொதுவான அரச நிருவாகத்தை அல்லது அரசியல் நிருவாகத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவ்வாறான பிரதேசங்களில் அனைத்தும் தமக்கு தனியாக பிரித்துத் தரப்பட வேண்டும் என்று அவர்களது நிலைப்பாடாகும்.
எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று ஒருபக்கம் கூறிக்கொண்டு, முஸ்லிம்களுடன் ஒருபோதும் ஒற்றுமையாக வாழ நாங்கள் தயாரில்லை என்கின்ற தமிழ் இனவாதம் நாங்கள் எல்லோரும் பேசுகின்ற சிங்கள பேரினவாதத்தை விட மிகவும் ஆபத்தானது; என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில்தான் சம்மாந்துறை சொறிக் கல்முனையில் தாக்கப்பட்ட பள்ளிவாசல் விடயத்தை உற்று நோக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட பாதிப்பு சிறியதா ? பெரியதா ? என்பது இங்கு முக்கியமில்லை. அதற்குப்பின்னால் செயற்பட்ட சக்திகள் எவை ? காரணம் என்ன ? என்பவைதான் முக்கியம். அம்பாரை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டமாகும். அதேநேரம் இப்பள்ளிவாசல் சம்மாந்துறை சொறிக் கல்முனையில் அமைந்திருக்கின்றது. இது தமிழர்கள் சற்று செறிவான கிராம்மாகும். அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் இப்பளிளிவாசலை சிங்களப் பேரினவாதம் தாக்கியிருக்க முடியாது. ஏனெனில் அது அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமல்ல. அவ்வாறாயின் இதைச் செய்தவர்கள் யார் ? காரணமென்ன ? இது இன்னுமொரு இனவாதமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை சிந்திப்பதற்கு நேரம் தேவையில்லை. அதேநேரம் காரைதீவிற்கு எதிரேயுள்ள சாய்ந்தமருது பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியில் அமையப் பெற்றிருக்கின்ற ஒரு “சியாரம்” இன்று அழிக்கப்பட்டிருக்கின்றது. பள்ளிவாசலுக்குச்சொந்தமான வயல் காணியை அண்டியதாக உள்ள இடத்தில் அது இருந்தும் அதனைப் பராமரிப்பதற்கு இதே இனவாதிகளால் அந்த பள்ளிவாசலுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது.
இதேபோன்றுதான் வடபுலத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தடைக்கற்கள்போடப்படுகின்றன. அதேநேரம் குறிப்பாகமட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச்சொந்தமான 10,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட அன்று புலிகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகள்இன்றும் மீளளிக்கப்படாமல் இருக்கின்றன. கடந்தகாலங்களில் அரசினால் அல்லது அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளின் மீட்புக்காக தமிழ் தலைவர்கள் போராடுகின்றார்கள். அது நல்ல விடயம். நாமும் அதற்கு எமது ஆதரவைத்தெரிவிக்கின்றோம். ஆனால் அதே தமிழ் தலைமைகள் தமிழ் தரப்பினர் முஸ்லிம்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகளை விடுவிப்பதற்கு ஏன்முயற்சிக்கின்றார்களில்லை. மாறாக வடக்கிலிருந்துஒரு கட்சியின் தலைவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கல்முனைக்கு வந்து கல்முனை நகரம் அபிவிருத்திசெய்யப்படக் கூடாது என்று ஆர்ப்பாட்டம்செய்கின்றார். எனவே இங்கு தமிழ் பேரினவாதம்சரியான கோணத்தில் பார்க்கப்பட வேண்டிஇருக்கின்றது.
இந்நாட்டில் முஸ்லிம்கள் இரு தலைக் கொள்ளி எறும்புகளாக சிங்களப் பேரினவாதத்தினாலும், தமிழ்பேரினவாதத்தினாலும் நசுக்கப்படுவதை முஸ்லிம்தலைமைகளும், முஸ்லிம் சமூகமும் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். இதில் சிங்களபேரினவாதிகளின் தாக்கம் வட கிழக்கிற்குவெளியேதான் பெரும்பாலும் அதன் வீரியத்தைகாட்டுகின்றது. காட்டவும் முடியும். அதேநேரம் வடகிழக்கு தமிழ் பேரினவாதம் முஸ்லிம்களை கவ்விப்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது அரசியல் தலைமைகளும் சமூக ஆர்வலர்களும்சிங்களப் பேரினவாத்த்திற்காக உரத்துக் குரல்கொடுக்கின்றோம். அதேநேரம் வட கிழக்கில் நம்மை நசுக்குகின்ற இன்னும் ஒரு பேரினவாத்த்தையும் அதன்பரிமாணத்தையும் சரியாக அடையாளம் காணத்தவறிக் கொண்டிருக்கின்றோம். இந்தப்பின்னணியில்தான் எதிர்கால அரசியல் தீர்வுகளும் பார்க்கப்பட வேண்டிய கட்டாயத் தேவைஇருக்கின்றது. இதனை நமது அரசியல்தலைமைகளும் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமை என்ற வெற்றுச் சொல்லைப் பயன்படுத்தி நம்மை நாமே இழந்துவிடக் கூடாது. இதயத்தின்அடித்தளத்திலிருந்து வருகின்ற ஒற்றுமை என்பதுவேறு, நுணி நாக்கிலிருந்து பிறக்கின்ற ஒற்றுமை என்கின்ற வெற்று வார்த்தை வேறு, எனவே அரசியல்தீர்வு ஒன்று காண இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் அவசரமாக விழித்துக் கொள்ளவேண்டும். அதேநேரம் மறைந்த தலைவர் கனவு கண்டகல்முனையின் நீண்டகாலத் தேவையான புதிய நகரத்திட்டத்திற்கு எத்தடைகள் வரினும் அத்தடைகளைதகர்த்தெறிந்து அதனை செயலுருவம் கொடுப்பதற்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணையவேண்டும். ஒற்றுமைப்பட்ட ஒரு சமூதாயத்தின்பயணத்தை உடைத்தெறியும் சக்தி இந்தஇனவாதிகளுக்கு இல்லை. என்பதை புரியவைக்கவேண்டும்; என்றும் குறிப்பிட்ட அவர் எவ்வாறு சிங்கள பேரினவாதம் என்பது மொத்த சிங்கள மக்களையும் குறிக்கவில்லையோ அதேபோல் தமிழ் பேரினவாதம் என்பது முழு தமிழ் சமூகத்தையும் குறிக்கவில்லை. எனபதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அதேநேரம் இனவாதிகள் சிறிய தொகையினராக இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் மொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது; என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனந்த தேரருடன் கொழும்பில் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் யார்?(இப்னு மலீக்)

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆனந்த தேரருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்குமிடையிலான விவாதம் இன்று நாடுபூராகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமுக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் என்பனவற்றிலெல்லாம் அந்த விவாதம் குறித்த எதிரும் புதிருமான கருத்துக்களே மேலோங்கி வருகின்றன.

வில்பத்து விவகாரம் கடந்த சுமார் மூன்று வருடங்களாக நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது.
ஜனாதிபதி , அமைச்சர்கள் மற்றும் சிங்கள மக்கள் ரிசாத் பதியுதீன் கூறுவது போன்று வில்பத்து வனப்பகுதிக்குள் ஒரு அங்குல காணியையேனும் முஸ்லிம்கள் அடாத்தாக பிடிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பும் இந்த விடயத்திலிருந்து அவர்களை திசை திருப்பும் வகையில் ஒரு சில சிங்கள இனவாதக் குழுக்குள் அவ்வப்போது ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு முயற்சித்தும் வருகின்றனர்.

பொது பலசேனா தொடங்கி இன்று ஆனந்த தேரர் வரை வில்பத்து விடயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு தகுந்த பதிலை வழங்கி இனவாதிகளின் கருத்து சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோதப் போக்கை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் ரிசாத் பதியுதீனும் இவ்வாறான விவாதங்களில் பங்கு கொண்டு அவர்களின் கருத்தை பரவவிடாமல் தடுத்தும் வருகின்றார்.

வில்பத்து விவகாரத்தின் ஊடாக ரிசாத் பதியுதீனின் அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும், ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் தலைவராக ரிசாத் பதியுதீன் மாறி விடக் கூடாது என்ற புலம் பெயர்ந்த ஒரு சிலரின் அஜந்தாவுக்கு அடிபணிந்தே இந்த திட்டமிட்ட இனவாதக் கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

புலம்பெயர்ந்த அந்த இனவாதிகளின் அஜந்தாக்களுக்கு முஸ்லிம் சமுகத்தில் உள்ள ஓர் இரு அரசியல் வாதிகளும் துணை போயிருக்கும் சம்பவம் தான் இந்த ஆணந்த தேரரின் விவாதத்திற்கு பின்னால் உள்ள இரகசிய விடயமாக உள்ளது.

ஆனந்த தேரருடன் விவாதம் மேற்கொள்ள ரிசாத் பதியுதீன் தயார் என அறிவித்த மறு கணமே ரிசாதை அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் அந்த ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளும், போலி முறைப்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து ஆனந்த தேரரை சந்தித்து உரையாடியுள்ளமை தற்போது அம்பலத்திற் வந்துள்;ளது.

கொழும்பில் உள்ள மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் மேசொன்ன தரப்பு ஆனந்த தேரரை சந்தித்து தொடச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தற்போது அறியவருகின்றது.
விவாதத்திற்கு தயார் என அறிவித்த மறு நாள் அந்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் ஆனந்த தேரருக்குமிடையிலான சந்திப்பு முதற்கட்டமாக இடம்பெற்றுள்ளது.

ஹிரு தொலைக்காட்சி விவாதத்தின்போது ரிசாத் பதியுதீனை எவ்வழியிலேனும் தோற்கடித்து - முஸ்லிம் சமுகத்தில் ரிசாதுக்கு இருக்கும் நன்மதிப்பை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற பொதுவான தீர்மானம் எடுக்கப்பட்டே ஆனந்த தேரர் விவாதத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் மூடிய அறைக்குள் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது - ரிசாதுக்கு எதிராக ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்ட முறைப்பாட்டு ஆவனங்களுடன் புனித சிங்கள மொழி பெயர்;ப்பு குர்ஆனும் கையளிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து விடயத்தில் முஸ்லிம்கள் காடுகளை பிடிக்கின்றார்கள் என்பது திரிவுபடுத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என்பதினால் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக அந்த விடயத்தில் குற்றங்களை முன்வைக்க முடியாது.

எனினும் விவாதத்தின் இறுதியில் குறித்த போலி முறைப்பாட்டு ஆவனங்களை சமர்ப்பித்து விவாதித்து இறுதியில் குர்ஆனை முன்வைத்து ரிசாதிடம் சத்தியம் வாங்கி தோற்கடிக்க வேண்டும் என்பதே இவர்களுக்கிடையிலான இரண்டாவது சந்திப்பினதும் தொலைபேசி உரையாடல்களினதும் இறுதித் தீர்மானமாக அமைந்திருந்ததாக அறிய வருகின்றது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் வாதியே இந்த ஆவணங்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்துள்ளார் என்பது தற்போது கசிந்துள்ளது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அரசியல் வாதியுடன் வன்னியைச் சேர்ந்த இருவரும் கிழக்கைச் சேர்ந்த ஒருவரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்த தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வில்பத்து விவகாரத்தில் ரிசாத் மீது குற்றம் சுமத்த முடியாது. அதனால் அவரது நற்பெயருக்கு கழங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இறுதித் தருணத்தில் போலிக் குற்சாட்டை முன்வைத்து குர்ஆனில் சத்தியம் செய்யுமாறு ஆனந்த தேரரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குர்ஆனில் சத்தியம் செய்ய ரிசாத் பதியுதீன் முன்வருவாரா என அப்போது ஆனந்த தேரர் அந்த முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் வினவிய போது ' ஆம்.... நிச்சயம் அவர் குர்ஆன் என்றால் அச்சப்படுபவர.; அதனால் அவர் நிச்சயமாக குர்ஆனில் சத்தியம் செய்ய மாட்டார்.' என அவர்கள் ஆனந்த தேரருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இங்கு ரிசாத் பதியுதீன் குர்ஆன் மீது சத்தியம் செய்யாதது ஏனெனில், அல்லாஹ்வைத் தவிர வேறு எதன் மீதும் சத்தியம் செய்வதை இஸ்லாம் வெறுப்பதும் கண்டிப்பதனாலாகும். இந்த விடயத்தை உலமாக்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த பின்னணியில் தான் வில்பத்து விவகாரத்தில் ரிசாத் மீது குற்றம் சுமத்த தன்னிடம் எந்தவொரு உண்மையான ஆதாரமும் இல்லாத சூழ்நிலையில் , அதனை நன்கு உணர்ந்ததன் பின்பாடு தான் வேறு வழியின்றி குர்ஆனில் சத்தியம் செய்யுமாறு ஆனந்த தேரர்  வேண்டிநின்றார்.

ஹிரு தொலைக்காட்சி விவாதத்தின் நோக்கம் வில்பத்து காட்டில் முஸ்லிம்கள் காணி பிடிக்கின்றார்கள், ரிசாதும் அம்மக்களும் குடு வியாபாரம் செய்கின்றார்கள் , தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவைகள் இவைகள் என்பதை நிரூபிப்பதுதான் .

ஆனால் இந்த மூன்று விடயங்களையும் ஆந்த தேரர் பெரிதாக அலட்டிக்கொண்டதாகவே விளங்கவில்லை. வில்பத்து வனத்தை எவ்வாறு ஆனந்த தேரர் புனித பூமி என்று கூறுகின்றாரோ அதேபோன்ற பல புனித பூமிகள் அழிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் நீங்களோ அல்லது சூழலியலாளர்களோ பேசுவதில்லை என ரிசாத் பதியுதீன் பல பத்திரிகை அறிக்கைகளை சுட்டிக் காட்டி ஆதார பூர்வமாக முன்வைத்த பிற்பாடு தான் கதிகலங்கிப் போன ஆனந்த தேரர் இறுதியாக குர்ஆனை தூக்கும் முடிவுக்கு வந்ததும் எமக்கு நேரடியாக அவதானிக்க முடிந்த நிகழ்வாகும்.

வில்பத்து விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியிடம் ஆனந்த தேரர் சமர்ப்பித்திருந்த அறிக்கைகள் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் தான் என்பதும் தற்போது  இந்த விவாதத்தில் அவர் கொண்டு வந்திருந்ததும் அதே முஸ்லிம் கறுப்பாடுகளால் சோடிக்கப்பட்ட ஆவணங்கள் தான் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் கறுப்பாடுகளான மேற்சொன்ன அந்த நபர்களால் அப்பாவி வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது திட்டமிட்ட அடிப்படையில் இன்னும் இன்னும் பின்னோக்கியே செல்லும் என்பதை உணர்ந்துமே மேற்சொன்ன முஸ்லிம் கறுப்பாடுகள் இந்த சதித்திட்டத்தில் இறங்கியுள்ளார்கள் என்பதும் புலனாகின்றது.

ரிசாதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த மேற்சொன்ன அரசியல் வாதிகளே ஆனந்த தேரரின் வடிவில் இந்த விவாதத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

மாறாக ஆனந்த தேரர் என்பவர் இங்கு வெறும் பொம்மை மாத்திரமே.
முஸ்லிம் கறுப்பாடுகளான மேசொன்ன நால்வர், ஹிரு ஊடகவியலாளர்கள் மூவர் மற்றும் ஆனந்த தேரர் என எட்டு இனவாதிகளுடனும்  இக்குழுவின் அடிவருடிகளான ஏனைய சமுகத் துரோகிகளுடனும் ரிசாத் பதியுதீன் புரிந்த விவாதம் முஸ்லிம் சமுகத்தால் என்றுமே காலத்தால் அழியாத தலைமைத்துவ ஆளுமையை; பறை சாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

கல்முனை மாநகர சபையில் மீலாதுன் நபி வைபவம்!

(செயிட் ஆஷிப்)கல்முனை மாநகர சபை நிர்வாகம் ஒழுங்கு செய்திருந்த மீலாதுன் நபி சிறப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், எதிர்க் கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நளீம் எம்.பதுர்தீன் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அல்குர்ஆன் பராயணம், துஆப் பிரார்த்தனை மற்றும் மார்க்க சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மத ரீதியான அசம்பாவிதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - ஹக்கீம்???


இன மத ரீதியான எந்தவித பிரச்சினைகளுமின்றி புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு மக்களுடைய பெரும்பாலான தேவைகள் நிறை

இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

2010, 2011, மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொருநாளும் எங்காவது எந்த மூலையிலாவது மத ரீதியான பிரச்சினைகள்,  தாக்குதல்களும் அசம்பாவிதங்களும் ஏற்படுகின்ற ஒரு மோசமான சூழலை அனைவரும் எதிர்கொண்டிருந்தனர்.  அவ்வாறான சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களை நாம் ஒதுக்கி விட்டு புதியதொரு அரசியல் கலாசாரத்தினை உருவாக்கியுள்ளோம்.

வெளிப்படைத் தன்மையுள்ளதொரு அரசியல் கலாசாரத்தினை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வெளிப்படையான அரசியல் கலாசாரத்தின் மூலம் நாட்டில் இடம்பெற்ற மத ரீதியான அசம்பாவிதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அது மட்டுமன்றி சர்வதேசத்துக்கு முன் சென்று ஒவ்வொரு வருடமும் குற்றவாளிகள் போல் குற்றவாளி கூண்டில் நிற்கும் தேசியமாய் இருந்த நாங்கள் இன்று தைரியமாக அந்த சர்வதேச சமூகத்துக்கு முன்னால் நிலைத்து நிற்கும் ஜனநாயக பாரம்பரியத்துடன் உள்ளோம்.

இனங்களுக்கிடையிலே சமத்துவம் சகோதரத்துவம் இணக்கப்பாடு உருவாகின்றதொரு புதிய அரசியல் கலாசாரத்தினை உருவாக்குகின்ற தகைமை இந்த ஆட்சியாளர்களுக்கு உள்ளது என்று பிரதானமான வல்லரசுகள் மற்றும் இந்நாட்டுக்கு வருகை தருகின்ற மிக முக்கியமான ராஜதந்திரிகள் எமது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராட்டுச் சொல்லுகின்றதொரு புதிய யுகத்தை நாங்கள் உருவாக்க கூடியதாக அமைந்துள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய தகவல் அறியும் சட்டம் அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் பாராளுமன்றத்தினூடாக அமுல் படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஊடகவியலாளர்கள் அனைவரும் எவரிடத்திலிருந்தும் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

எந்த ஆட்சியாளர்களும் ஊடகவியலாளர்களிடமிருந்து எந்த தகவலையும் மறைக்க முடியாது. இதன் மூலம் ஊழல் கலாசாரம் கொண்ட சமூகத்தினை முழுமையாக களைந்தெடுக்க முடியும்.

அத்துடன் புதிய யாப்பு திருத்தம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளோம். புதிய தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தவுள்ளோம். எல்லா சமூகங்களும் சமமான பிரதிநிதித்துவத்தினை பாராளுமன்றத்திலும் தெரிவு செய்யப்பட்ட சபைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

இவற்றினை குழப்புவதற்கு சில சதி முயற்சிகள் திரைமறைவிலே மேற்கொள்ளப்படுகின்ற போதும் அவற்றினையெல்லாம் முறியடித்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட அனைத்து கட்சிகளும் இணைந்த இந்த தேசிய அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேற்றப்பட்ட அரசியல் கலாசாரத்தில், தற்போது ஒரு வருடத்தினை நெருங்கியுள்ளோம் என நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் கரப்பந்தாட்ட மைதானம்

செயிட் ஆஷிப்)


இளைஞர் சேவைகள் மன்றத்தின் “சிரம சக்தி” திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் கரப்பந்தாட்ட மைதானம் மற்றும் கடின பந்து கிரிக்கட் பயிற்சி கூடம் என்பவற்றை அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத்தினால் அண்மையில் அடிக்கல் நடப்பட்டு, நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் நிர்மாணப் பணிகள் தற்போது அவரது நேரடிக் கண்காணிப்பில் பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவற்றை விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக  கூடிய விரைவில் கையளிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத் தெரிவித்தார்.

பிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின்கல்விக்குரிய அன்பளிப்புக்கள்


பிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் மாதாந்த கூட்டம் கல்முனையில் நடைபெற்ற போது பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்குரிய அன்பளிப்புக்கள் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் வழங்கப்படுவதையும் அருகே சமகால தலைவர் அக்பர் ஹாஜி, செயலாளர் ஹாரூன் மௌலவியையும் காணலாம். 

யஹ்யாகான் பௌண்டேஷனால் பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகள்யஹ்யாகான் பௌண்டேஷனால் (யஹ்யா கான் சமூக நலன்புரி சேவைகள் மன்றம்) இன்று (26) சாய்ந்தமருவில் பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 
இந்தப் பிரதேசத்தில் வாழும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் மின்சார, குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக யஹ்யாகான் பௌண்டேஷனின் ஸ்தாபக தலைவரான ஏ.பி. யஹியா கானினால்  உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 அத்துடன் சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த 5 ஆம் அண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி ஒருவருக்கு நிதி உதவியையும் அவர் வழங்கி வைத்தார்.
இதேவேளை, யஹ்யாகான் பௌண்டேஷன் ஊடான இந்த சமூக நலன்புரித் திட்டத்தை எதிர்காலத்தில் தாம்  அம்பாறை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விஸ்தரிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
 அடுத்த 2016 ஆம் அண்டு இந்த திட்டத்தை பரவலாக்கும் வகையிலான கருத்திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன. வருமானம் குறைந்த மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கி தீர்வு காண வேண்டுமென்ற இலட்சியத்துடனேயே தான் இந்த சமூக நல பணியை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் யஹ்யாகான் பௌண்டேஷனின் (யஹ்யாகான் சமூக நலன்புரி சேவைகள் மன்றம்) உபதலைவர் அஸ்மி காரியப்பர், அல்ஜலால் பாடசாலை அதிபர் எம்.எஸ். நபார், ஆசிரியர் எம்.சி.எம் .மாஹிர், அல்ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர் மன்சூர், இப்ராகீம் ஆசிரியர் மற்றும் எம்.எம். முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ம‌ஸ்ஜித் ர‌வ்லா ப‌ள்ளிவாச‌ல் உடைக்க‌ப்ப‌ட்ட‌மை இன‌வாத‌ம் ஒழிய‌வில்லை என்ப‌தையே காட்டுகிற‌து.

ச‌ம்மாந்துறை சொறிக்க‌ல்முனை ம‌ஸ்ஜித் ர‌வ்லா ப‌ள்ளிவாச‌ல் உடைக்க‌ப்ப‌ட்ட‌மை ந‌ல்லாட்சியை கேள்விக்குட்ப‌டுத்தியிருப்ப‌துட‌ன் குற்ற‌வாளிக‌ளை க‌ண்டு பிடிக்க‌ அர‌சாங்க‌ம் உட‌னடி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ தொலை ந‌க‌லில் குறிப்பிட்டுள்ளார். அவ‌ர் அதில் மேலும் தெரிவித்திருப்ப‌தாவ‌து,
க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சில் ப‌ல‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌மை கார‌ண‌மாக‌வே ம‌ஹிந்த‌ அர‌சை முஸ்லிம்க‌ள்வெறுத்த‌ன‌ர். அதே நிலை இன்றைய‌ அர‌சிலும் தொட‌ர்வ‌து ந‌ல்லாட்சியிலும் இன‌வாத‌ம் ஒழிய‌வில்லை என்ப‌தையே காட்டுகிற‌து. அதுவும் அர‌சின் பிர‌தான‌ அமைச்ச‌ரும் முஸ்லிம் காங்கிர‌சின் த‌லைவ‌ருமான‌ அமைச்ச‌ர் ஹ‌க்கீம் அம்பாரை மாவ‌ட்ட‌த்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த‌ நிலையிலேயே இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை 2002ம் ஆண்டு ஹ‌க்கீம் இருக்கும் போதே மூதூர் தாக்க‌ப்ப‌ட்ட‌மையை ஞ‌ப‌க‌ப்ப‌டுத்துகிற‌து.
அப்போது போன்றே இப்போதும் உடைக்க‌ப்ப‌ட்ட‌ மேற்ப‌டி ப‌ள்ளிவாய‌லை சுற்றுலா ப‌ய‌ணி போல் பார்த்துவிட்டு சென்றுள்ளாரே த‌விர‌ இதுவ‌ரை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ தெரிய‌வில்லை.
ஆக்வே 45 வ‌ருட‌ வ‌ர‌லாறு கொண்ட‌ இந்த‌ ப‌ள்ளிவாய‌ல் இடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌மை மிக‌வும் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌துட‌ன் இது விட‌ய‌த்தில் அர‌சு உட‌ன‌டியாக‌ தொட‌ர்பு கொண்டு இதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை கைது செய்வ‌துட‌ன் அர‌ச‌ உத‌வியில் மீள் க‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வ‌லியுறுத்துகிற‌து.

முஸ்லிமாக நடித்து, 7 வருடங்களாக உளவு பார்த்தவர்


சார்.. நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..

'நீ இந்துவா?' 

'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.

'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும் 

'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்

'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.

'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.

'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'

'ஆம் நான் இந்துதான்'

'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'

'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'

'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?' 

'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'

'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.

'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார். 

அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

------------------------------------------------

ஒரு இந்திய ஐபிஎஸ் அதிகாரி தனது அனுபவங்களை பகிர்ந்ததைத்தான் காணொளியாக நாம் பார்தோம். ஹிந்தி தெரியாதவர்களுக்காக இதனை மொழி பெயர்த்தேன். 

பாகிஸ்தானில் தினமும் அரங்கேறி வரும் குண்டு வெடிப்புகளின் சூத்திதாரிகள் யார் என்பது இப்போது விளங்கியிருக்கும். ஷியா மசூதியில் குண்டு வெடிப்பதும் அடுத்த வெள்ளிக் கிழமை அதற்கு பதிலடியாக சன்னி முஸ்லிம்களின் பள்ளியில் குண்டு வெடிப்பதும் தொடர்கதையாக இருந்ததை படித்திருப்போம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் 100, 150 என்று முஸ்லிம்கள் இறப்பதற்கு முக்கிய காரணம் யார் என்தை நாம் விளங்கியிருப்போம். 'ஒரு மனிதனைக் கொன்றவன் ஒட்டு மொத்த மனிதனையும் கொன்றவனாவான்' என்று குர்ஆன் கூறியிருக்க ஒரு உண்மையான இஸ்லாமியன் இவ்வாறான கொலை பாதக செயல்களில் ஈடுபடுவானா என்பதை நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். 

மாறு வேஷத்திலிருக்கும் அந்த சூஃபி ஞானியைப் போல் எத்தனை பேர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உலா வருகிறார்களோ அதனை அந்த இறைவனே அறிவான்.

இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’ 

(அல்-குர்ஆன் 3:54)

நமது இந்திய நாட்டின் மீது வெறுப்போடு செயல்படும் பாகிஸ்தானிய அரசும் அதன் ராணுவமும்தான் நமக்கு எதிரிகள். அந்த நாட்டு சாதாரண குடி மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். நமது நாட்டில் இந்து பெருங்குடி மக்களையும் இந்துத்வாவாதிகளையும் எவ்வாறு நாம் தரம் பிரித்து பார்க்கிறோமோ அதே அடிப்படையையே இங்கும் நாம் கையாள வேண்டும்.

இஸ்லாமியர்களை கருவறுத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சிக்கார்கள் என்றுமே வெற்றியடைய போவதில்லை. அதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.

சுவனப் பிரியன்

காசி கிடைத்தது: ஆனால் றிசானாவின் தாயார் பெற்றுக்கொள்ளவில்லை - ஹிஸ்புல்லாஹ் மறுப்பு


முஹம்மட் ஹம்சா கலீல்-

றிசானா நபீகின் மரணம் நடந்த அந்த நாட்களில், அந்த குடும்பத்துக்கு வழங்குவதற்காக சவுதி அரசாங்கமோ வேறு எந்த அரசாங்கமோ எந்த ஒரு சதத்தையும் வழங்க வில்லை என்பதை மிக தெழிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

அந்த நேரங்களில் என்னோடு தங்கி இருந்த எனது நண்பர் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு சகோதரர் அஷ்ஷைக் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸித் என்ற சகோதரர், நண்பர். இந்த செய்தியை கேள்வியுற்றவுடன் அந்த குடும்பத்துக்கு வழங்குமாறு எங்களுக்கு பத்து இலட்சம் ரூபா நிதியை வழங்கினார். 

அந்த நிதியை நாம் அந்த குடும்பத்துக்கு வழங்குவதற்காக ஒரு தகவலை அனுப்பினோம். அங்குள்ள பிரதேச சபை உருப்பினர் மற்றும் அங்குள்ள முக்கிய சகோதரர்கள் ஊடாக அந்த நிதியை வந்து ஒப்படைப்பதற்காக தகவலை அனுப்பினோம். என்னால் இப்படி ஒரு நிதி வழங்கப்பட்ட செய்தி வந்தவுடன், சவுதி அரேபியாவில் இருந்து நிதியை நாம் பெற்றுக் கொள்வதில்லை என்று அவருடை தாயார் பத்திரிகைகளிளே அரிக்கை விட்டிருந்தார், ஆகவே தான் அந்த நிதியை கொண்டு வந்து தருவதற்க்கு அனுமதி தருமாறும், அவர்கள் றிசானாவுக்காக ஒரு வீடு கட்டுவதாக கேள்விப்பட்டோம், அந்த வீடு கட்டுவதற்காக இந்த நிதியை பயன் படுத்துமாறு, மூதூர் பிரதேச சபை உருப்பினர் மூதூர் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடாக தகவல்களை அனுப்பி இருந்தோம்.

இருந்தாலும் றிசானாவின் தாயார் மனது மகளை கொலை செய்த சவூதி அரேபிய நாட்டுடைய அல்லது அங்குள்ள தவந்தர்களுடைய ஒரு சதம் கூட தேவை இல்லை, என்று திருப்பி அனுப்பி வைத்தார்.

மீண்டும் சில நாட்களுக்கு பின் திரும்பவும் அந்த செய்தியை அனுப்பினோம். ஆனால் அவர் இவ்வாறான ஒரு நிதியும் தேவை இல்லை என்று அந்த நிதியை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். 

அதன் பின் அந்த நிதியை வழங்கிய அஷ்ஷைக் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸி சவுதி அரேபிய ரியாத் நகரை சேர்ந்தவர். அவர்களோடு தொடர்பு கொண்டு இப்படி நிதியை வேண்டாம் என்று கூரினால் கவலை அடைவார், இருந்த போதும் மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டு இந்த சூழ் நிலையிலே வீடு ஒன்று வேறு ஒரு நிருவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது, ஆகவே அந்த நிதி அவர்களுக்கு தேவை இல்லை என்று கூறி நிதியை என்ன செய்வது என்று கேட்ட போது, நாங்கள் மட்டக்களப்பில் செய்து கொண்டு இருக்கும் வேறு தேவைகளுக்கும் வேறு பிரதேசங்கள், மாவட்டங்களில் எங்களது நிருவனம் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும், கிணறு தேவைகளுக்கும் அந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அந்த அடிப்படையிலே அந்த நிதியை நாங்கள் வேறு பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்தினோம்' என்பதை மிக தெழிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம். 

ஆகவே சவுதி அரசாங்கமோ அல்லது சவுதி தூதரகமோ, வேறு யாரும் எங்களுக்கு ஒரு சதத்தையும் தரவில்லை என்பதை மிக தெளிவாக சொல்லி வைப்பதோடு, இப்பொழுது சிலர் வேண்டும் என்று இப்படியான கதைகளை கட்டி விட்டு செய்கிறார்கள்' என்பதை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறோம். 

இப்படியான விடயங்கள் அப்பட்டமான பொய் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றேன்

நல்­லாட்­சியில் கறுப்பு டிபென்டரா?

நாம் வெள்­ளைவேன் கடத்தல் காரர்கள் என்றால் இவர்கள் கறுப்பு டிபென்டர் கடத்­தல்­கா­ரர்­களா என முன்னாள்ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்­பியுள்ளார்.
அகுணகொலபெலெஸ்ஸ மாஹானாக விகாரையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்­லாட்­சியில் கறுப்பு டிபென்டர் கடத்தல் ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் பாதாள கொள்­ளை­யர்­களின் ஆதிக்கம் தலை­தூக்­கி­யுள்­ளது. இது தான் நல்­லாட்சி என்று மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.
எமது ஆட்­சியை அரா­ஜக ஆட்­சி­யென விமர்­சித்­த­வர்கள், நாம் கடத்தல் காரர்கள் என குற்றம் சுமத்­தி­ய­வர்கள் இன்று நல்­லாட்­சியில் என்ன செய்­கின்­றனர்.
நாம் தமிழ் மக்­களை கொடுமை படுத்­தி­ய­தா­கவும், ஆட்­க­டத்தல் அடக்­கு­முறை செயற்­பா­டு­களை செய்­தமை மற்றும் வெள்ளை வேன் கடத்தல் என்­ப­வற்றை மேற்­கொண்­ட­தாக குறிப்­பிட்­டனர். ஆனால் இன்று கறுப்பு டிபென்டர்களில் கடத்தலை ஆரம்­பித்­துள்­ளனர் எனக் குறிப்பிட்டார்.

N M Production Award Ceremony

திருகோணமலையில் காணிகளை வன விலங்குத் திணைக்களம் கபளீகரம் – சட்டத்தரணி லாஹிர்


FB_IMG_1441378476068
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய மக்களின் குடியிருப்பு இல்லாத சில காணிகளை வன விலங்குத் திணைக்களம் கபளீகரம் செய்து தமது ஆதிக்கத்தை காட்டி வருவதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய் கிழமை(22)கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது.        கிழக்கு காணி அபிவிருத்தி,வீதி அபிவிருத்தி மகளிர் விவகார,நீர்வழங்கள் வடிகாலப்பு மனித வலு அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட 2016 ஆம் ஆண்டு ஒதுக்கீடுகளுக்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தின் காணி அதிகாரத்தினை மத்திய அரசு உத்தியோக பூர்வமாக தராத போதிலும் நாம் சும்மா இருந்து விட முடியாது.காணி விடயம் மாகாணத்தின் மிக முக்கியமான துரையாகும் கிழக்கு மாகாணத்தின் நாலா பக்கங்களிலும் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் சூரையாடப்படுவதாக தகவல் கிடைக்கின்றது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.கிழக்கின் காணி அமைச்சிற்கான முத்திரை திட்டத்தினை மீளாய்வு செய்து திருத்தியமைக்கப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் நில அளவை அமைப்புப் படத்தினை மீள் பரிசீலனை செய்து சிறந்த காணித் திட்டங்களை காணி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தோப்பூர் போன்ற பகுதிகளில் வீதிகளின் நிலை பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.மூதூர் துரைமுக வீதி,மற்றும் மூதூர் வேதத்தீவு பகுதிக்கான படகுச் சேவை சீர்படுத்தப்பட வேண்டும் அதேவேளை மத்ரஸா வீதி, மூதூர் நெய்தல் நகருக்கான வீதிகளையும் மீளமைத்து அபிவிருத்தி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
எப்.முபாரக்  

ஸ்ரீ லங்கா மீடியா பவுண்டேசனின் (SLMF) புதிய தலவராக சிரேஸ்ர ஊடகவியலாளர் நவ்சாத் முகைதீன்

ஸ்ரீ லங்கா மீடியா பவுண்டேசனின் (SLMF) புதிய தலவராக சிரேஸ்ர ஊடகவியலாளர் நவ்சாத் முகைதீன்
==============================================
ஸ்ரீ லங்கா மீடியா பவுண்டேசனின் புதிய தலவராக சிரேஸ்ர ஊடகவியலாளர் நவ்சாத் முகைதீன் கடந்த 17ம் திகதி உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுளதாக அமைப்பின் செயலாளர் முபாரக் அப்துல் மஜீத் எகோ இணையத்திற்கு தெரிவித்தார்.
அமைய்பின் முன்னாள் தலைவர் பேராளர் சட்டத்தரணி கவுசுல் அமீன்னின் மறைவிற்கு பின் அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளை முற்கொண்டு செல்வதற்க்காக அவசரமாக கடந்த 17 ம் திகதி மாளிகாவத்தை இஸ்லாமிய நிலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலேய இந்த முடிவை எடுத்ததாக
முபாரக் தெரிவித்தார்.
புதிய தலைவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த 19ம் திகதி ஜெர்மன் துதரத்தின் அனுசரணையுடன் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான
கருத்தரங்கு தலைவரின் எதிர்பாராத மறைவை ஒட்டி அடுத்தவருடம் ஜனவரிமாதம் நடைபெறும் எனவும்.
அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளை சிறந்த முறையில் எடுத்துச் செல்வததிற்கு என் முழு மூச்சையும் பாவிக்கப் போவதாக தெரிவித்த அவர் நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் எங்களுடன் ஒன்றுணைந்து செயல்பட கேட்டு கொண்டதுடன் புதிய அங்கத்தவர்கள் 07777570639 கையடக்க தொலைபேசியில் தொடர்புகொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

நாமெல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை நல்லாட்சி வெளிப்படுத்தி இருக்கின்றது.

நமது நாட்டில் வாழும் அனைத்துச்சமூகங்களும் தமது மதம், இனம், மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், “நாம் இலங்கையர்” என்ற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் நாமெல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கின்றது.
இது விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்த கவனக்குவிப்பை கொண்டிருக்கின்றது. இதனால்தான் இலங்கையர் என்ற அடையாளத்தை மேலும் உறுதிசெய்வதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக திட்டங்களை தயாரிக்க அமைச்சரவை உப குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சரத் அமுனுகம, ரவூப்ஹக்கீம், ராஜித சேனாரத்ன, டி.எம் சுவாமிநாதன், வஜிர அபேவர்தன, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌசி, பிரதி அமைச்சர் கருனாரத்ன பரணவிதான மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயாகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்திலும் அதனை அடுத்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி காலத்திலும் “ஒரே நாடு, ஒரே மக்கள்” என்ற கோஷ முன்னெடுப்பு மிகவும் பரபரப்பாக பரப்புரை செய்யப்பட்டு பேசுபொருளாகி இருந்தன.
அதுமட்டுமன்றி மஹிந்தவின் ஆட்சி காலத்தில் இதற்கு ஒருபடி மேல் சென்று சிறுபான்மையினர் என்று நமது நாட்டில் ஒருவருமில்லை. எல்லோரும் நம் நாட்டுமக்களே என்றும் முழங்கப்பட்டன. இவைகள் யாவும் நாம் எல்லோரும் இலங்கையர் என்ற விசுவாசத்தையும் உணர்வையும் கொண்டவர்களாக மாறி வாழவேண்டும் என்பதை வலியுறுத்தும் கோணத்தைக்கொண்ட இயங்கு தளத்துக்கான பொறிமுறையின் கோஷங்களாகவே வெளிப்பட்டன.
இவ்வாறான கோஷங்களின் முன்னெடுப்பின் பின்னால் நல்லெண்ணம் அன்று இருந்ததா? என்று நோக்கினால், இல்லை என்ற பதில் தவிர வேறில்லாத ஒரு வெற்றிடத்தைத்தான் நாம் பார்க்க முடிந்திருக்கின்றது. வெளிப்படையில் முனைப்பாக காட்டிய பக்கத்திற்கு முற்றிலும் நேரெதிரான சிந்தனையும் செயற்பாடுகளும்தான் அதற்குள் புதையுண்டு கிடந்தன.
சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க மேலாண்மையை நிலை நாட்டுவதற்கு இதனை ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்ளும் இயங்கியலை முன்னிறுத்திப் பேசப்பட்டவைகளாகவே இதனை பார்க்க முடிகின்றது. ஏனெனில் அவ்வரசாங்கங்களின் முன்னகர்ச்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது மாற்றான் தாய் பாங்கினை பிரயோகித்த பல கசப்பான சம்பவங்கள்தான் தொடர்ந்தேர்ச்சியாக நடந்தேறி இருக்கின்றன.
முன்னைய அரசாங்கங்களின் போலித்தனமான முன்வைப்பு போன்றல்லாது உண்மைக்கு உண்மையாக இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை நோக்கி நெறிப்படுத்த முனைந்தால் அது நமது நாட்டுக்கும் மக்களுக்கும் பேருதவிகளை புரியத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அந்தவகையில் இது ஆரோக்கியமான சமூகங்களின் நல்லிணக்கத்திற்கும் நாட்டின் அமைதிக்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக அமையவல்லதாகும். இதனை முன்னெடுத்து கட்டமைப்பதற்கு உருவாக்கப்படவேண்டிய பொறிமுறைகள் சரியாக திட்டமிடப்படுவதோடு, அது மிகவும் ஆழமாக மக்களிடையே பதியவைக்கப்படுவதிலும்தான் நாம் இலங்கையர் என்ற அடையாளம் வெற்றிபெறுவது இருப்பு கொண்டிருக்கின்றது.
நாம் இலங்கையர் என்ற அடையாளம் நல்ல எண்ணக்கருவை கொண்டது என்பதினால் முஸ்லிம் மக்கள் உடனடியாக இதன்பால் ஈர்க்கப்படுவதும் ஏற்று போற்றிக்கொள்வதும் நல்வினையாற்றாது. மாறாக இம்மாற்றம் நிகழ்வதற்கு எங்கிருந்து அல்லது எந்தத் தரப்பினர் விட்டுக்கொடுப்புக்களிலும் உளத்தூய்மையையும் வெளிப்படுத்த வேண்டுமோ அங்கிருந்து அவைகள் சரியாக முனைப்புப்பெறுவதை பொருத்துத்தான் இக்கோஷம் வெற்றி நகர்ச்சியை பெறும். இவ்வாறான சூழல் தோன்றினால்தான் நாமும் இதில் இணைந்து செயற்படமுடியும். அதுதான் ஆரோக்கியமான மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
பொதுவாக எந்த சமயமானாலும் வன்முறைகளை போதிப்பதில்லை. சமூக நல்லிணக்கத்தை மறுப்பதில்லை. மனித நேயத்தை புறக்கணிக்க சொல்வதில்லை. நீதி, நியாயங்களை அனுசரித்தும் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தியும், பரஸ்பர உறவை பேணவும் வழிகாட்டுகின்றது. ஆயின் அவரவர்களின் மதங்களின் வழியில் முழுமையாக வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் தோன்றாது என திட்டவட்டமாக நாம் நம்பலாம்.
மதங்களின் அறப்போதனைகளில் ஒன்றித்த போக்குகள் காணப்பட்டாலும் மத வழிப்பாட்டுமுறமைகளில், கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இதனால் மதங்களுக்கு இடையில் சமரசம் என்பது அறவே சாத்தியமற்ற ஒன்றாகும். இருந்தாலும் மதச்சகிப்பு தத்துவத்தை எந்த மதங்களும் மறுக்கவில்லை. அவரவர் சமயத்தை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பின்பற்றுவதை சகித்துக்கொள்ளும் மனோபாவம் நமது நாட்டு மக்களிடையே விதைக்கப்பட்டு பேணப்பட்டாலே நாம் இலங்கையர் என்ற அடையாளம் உணர்வுபூர்வமாகவே வந்துவிடும்.
இன, மத, மொழி வேறுபாடுகள் ஒருபோதும் ஒழிக்கப்பட முடியாத பண்புகளாகும். உலகத்தில் எங்குமே இது மறுக்கப்படாது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அம்சமாகவும் திகழ்கின்றது. இந்த யதார்த்த நிலையினை மறுதலிக்க படாத வகையில் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை நோக்கி பயணிக்க திட்டங்கள் வடிவமைக்கப்படல் வேண்டும். அப்போதுதான் இந்த நோக்கத்தை நாமடைந்து கொள்ளமுடியும்.
பன்மைத்துவ மத, கலாசார, நாகரிக வேறுபாடுகளைக்கொண்ட மக்கள் ஒன்றித்து வாழும் நாடுகள் பல உள்ளன. அப்படித்தான் நமது நாடும். இங்கு நல்லிணக்கம் குலையாத வாழ்வுமுறைமையை விதைப்பது கஷ்டமான காரியம் அல்ல. விட்டுக்கொடுக்க முடிந்தவைகளை விட்டுக்கொடுத்து வாழப்பழகும் போது நாம் இலங்கையர் என்ற அடையாளம் தானாகவே குடிகொண்டுவிடும்.
நமது நாட்டுமக்கள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். இதற்கேற்பதான் நமது குடிசன மதீப்பிட்டு முறைமையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவைகளை முற்றாக கட்டுடைப்பு செய்துவிட முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கென்றும் சில மத வழிபாடுகளும் ஆடைக்கலாசாரங்களும் சம்பிரதாய வழக்கங்களும் சடங்குகளும் உள்ளன. இந்த வேற்றுமைகளை அங்கீகரித்து ஒற்றுமைப்பட்டு வாழும் நிலைக்கும் நமது மக்கள் திரும்பும்போது நாம் இலங்கையர் என்ற அடையாளக் கூறு மிகவும் பலமாக நம்மத்தியில் காலூன்றிக்கொள்ள முடியும்.
முதலில் நமது நாட்டு அரசியல் அமைப்பு கொண்டிருக்கும் பௌத்த மதத்தை காப்பதும் போஷிப்பதும் அரசின் கடமை என்ற கோட்பாடு மாற்றி எழுதப்படல் வேண்டும். எல்லா மதங்களையும் சமனாக அரசு கையாளும் போக்கினை அறிமுகம் செய்துவைக்க முன்வரவேண்டும். மற்றும் நமது நாடு ஒரு சமூகத்திற்கு மட்டும் பூர்வீகமானது என்ற மனோப்பதிவை அகற்றுவதற்கும் தேவையான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும்.
இவ்வாறான மத சகிப்புத்தன்மை இந்நாடு எல்லோருக்கும் பூர்வீகமானது எங்கின்ற நோக்கினை சரியாக பதிப்பதற்கும் வளர்த்தெடுப்ப்தற்கும் சிறந்த இடமாக நமது பாடசாலைகளை கையாளும் வகையில் நமது திட்டங்கள் முன்னெடுப்பதன் ஊடாக நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை விரைவாகவும் சரியாகவும் அடைந்து கொள்ள முடியும்.
நமது இன்றைய கல்வித்திட்டமிடலில் சமாதானக் கல்வி என்ரொறு அம்சம் இருக்கிறது. இதனை சற்று விரிவுபடுத்தி, அதாவது நாம் அடைந்து கொள்ள விரும்பும் நாம் இலங்கையர் என்ற அடையாளத்திற்கு தேவையான திட்டங்களை முறையாக பயிற்றுவிக்கும் வகையில் பாடத்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டு அதனை ஒரு கட்டாய பாடமாக முன்மொழிதல் வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் எனும்போது கட்டுக்கோப்புடனும் கட்டமைப்போடும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் காலப்பகுதிகளை உள்ளடக்கிய பருவங்களை கொண்டதாகும். இங்கு கற்கப்படுபவைகள் ஆணித்தரமாக மனதில் பதிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தி காரியம் ஆற்றவும் உதவும். இங்கிருந்து நாம் இலங்கையர் என்ற அடையாள விதையை விதைப்பதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல அறுவடைகளை நாம் அடைந்து கொள்வதை உறுதி செய்துகொள்ளவும் முடியும்.
மனோபாவம் மாற்றத்தின் முதல்படி என்பர். தொழிமுறைமையை மையமாக கொண்ட கல்வியுடன் மத சகிப்புத்தன்மை, நாம் எல்லோரும் இலங்கையர் என்ற உணர்வு என்பனவற்றை படிப்படியாக விதைக்கும் வகையில் படிமுறையாக புகப்பட்டுவதன் ஊடாக மாற்றி அமைக்க முடியும். சில மத வைபவங்களை எல்லோருக்கும் பொதுவான ஒரு மதத்தின் விழாவினை கைக்கொள்வதன் மூலம் நல்லிணக்கம் உடன் மலர்ந்துவிடுமென்று எதிர்பார்க்க முடியாது.
அதேபோன்று ஒன்றித்த சூழலில் பல சமயத்தவர்கள் வாழ்வதன் ஊடாகவும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழும் மனோநிலை வளரக்கூடியதாக இருந்தாலும் அது பரீட்சாத்தமாக நமது நாட்டிலும் நமது மக்களிடமும் தோல்வி கண்டிருக்கின்றது. இதனால் புதிய பரீட்சாத்த முறமைகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒரு தருணத்தை நமக்கு ஞாபகப்படுத்தி வைக்கின்றது.
இதனால் மதங்களிடையே எவற்றில் விட்டுக்கொடுப்பு நிகழமுடியாது. ஏன் அவ்வாறு பேணவேண்டி இருக்கின்றது என்பதை ஒவ்வொரு சமயத்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் கற்ப்பிக்கப்படவேண்டும். எப்படி மத சகிப்புத்தன்மையை அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டும் வகையில் பாடம் புகட்டப்பட வேண்டும்.
இங்கு வாழும் அனைத்து சமூக மக்களுக்கும் இந்நாடு பூர்வீகமானது என்பதை வலியுறுத்தும் வகையில் நமது வரலாறு பாடஅலகு திருத்தப்படல் வேண்டும். அல்லது மத சகிப்புத்தன்மையை புகட்டும் புதிய பாடம் ஒன்றுக்குள் இதனையும் சரியாக உள்வாங்கி கற்பிக்கப்படுவதினால் மனோபாவம் மாறும் சந்தர்பத்தை எட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது.
மதம், இனம், மொழி, நிற வேறுபாடெல்லாம் இயற்கையானது. அவைகள் பேதங்களை உருவாக்கும் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும் போதுதான் வேண்டத்தகாத விளைவுகளையும் முரண்பாடுகளையும் பகமையையும் நிரந்தரப்படுத்தி விடுகின்றது. அவ்வாறில்லாது இந்த இயற்கையான இயல்பை நாம் ஏற்றுத்தான் நமக்குள் ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பது அறிவுபூர்வமாகவும் சினேகபூர்வமாகவும் உணர்த்தப்படும் போதுதான் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை எய்த முடியும்.
மாறாக தோல்வி கண்ட வழிமுறைகளில் இன்னும் தரித்து நின்று கொண்டு மாற்றத்தை அடைவதற்கு வழி தேடுவது ஒருபோதும் முன்னேற்றத்தை தராது.அதே போன்று மாற்றம் நிகழவேண்டிய இரு பக்கங்கள் இருக்கும் போது ஒரு பக்கம் மட்டும் மாறுவதினாலும் உரிய இலக்கை நோக்கி பயணிக்க முடியாத முடக்கத்தையே நாம் அடைய வேண்டி இருக்கும்.
மாணவப்பருவத்தில் புகட்ட எடுக்கப்படும் அதே முயற்சி அளவில் அரசாங்க மட்டத்தில் காணப்படவேண்டிய மாற்றங்களுக்கு இடையிலான பாகுபாட்டு குறியீட்டை அகற்றி மாணவர்களிடையே போதிக்க எடுக்கும் வடிவத்திற்கு ஏற்ப அரசாங்கமும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் சில தீர்வுகளை முன்மொழிந்து மத, இன, மொழி நல்லிணக்கத்தை சரியாக கடைப்பிடிக்கும் நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குதலும் வேண்டும்.
இவ்வாறான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சில அதிகாரிகள் முட்டுக்கட்டை வகிக்கலாம். அவ்வாறான சந்தர்பங்களில் அவர்களுக்கு தேவையான மனவெழுச்சி வழிகாட்டலுடன் கூடிய தண்டனை பயிற்சிகளை வழங்கி அவர்களின் மனோஇயல்பை மாற்றுவதற்கும் ஏதுவான திட்டங்கள் நம் மத்தியில் இருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்படாத வேறு வழிகளில் கூட நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை அடையக்கூடியதாக இருப்பின் அவ்வழிமுறையின் தேடல்களும் உள்வாங்கப்படல் வேண்டும். இக்கட்டுரை மதம், இன, மொழி வேறுபாடுகள் இருக்கத்தக்க நிலையில் வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை என்ற இலக்கினை மையப்படுத்தியதாகும். இந்த வழிமுறமையும் உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நெறியாகவும் உள்ளது.
இதனாலும் பன்மைத்துவ மத, இன, மொழி, கலாசாரங்களையுடைய மக்களை கொண்ட நமது நாடு என்பதையும் கவனத்தில் எடுத்து எனது சில பதிவுகளை இங்கு பதிவாக்கி வைக்கின்றேன். அதற்காக இதுவே முடிந்த முடிவு என்பது எனது முன்வைப்பு அல்ல. இருந்தாலும் எனது நோக்கை மீண்டும் ஒரு தடவை பின்வருமாறு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அவரவர் மதங்களின் வழியில் முழுமையாகவும் சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஈடுபடுவதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலைதான் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தி வலிமைபெறச் செய்ய ஏதுவானதாகும்.
எம்.எம்.எம் நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar