Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம்

அஸ்ரப் ஏ சமத்

கல்முனை சாஹிராக் கல்லுாாியின்  15 வருடகாலமாக  அதிபராக கடமையாற்றிய மறைந்த  எஸ்.எச்.எம் ஜெமீல் அவா்கள் கல்முனை சாஹிராவில்  உருவாக்கிய  கல்விச் சமுகம் இன்று இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் நாலா பாகங்களிலும் பரந்து வாழ்ந்துவருகின்றனா். இக்க கல்லுாாியின் பழைய மாணவா்கள் இந்த நாட்டிலும்  சிறந்த  கல்வியலாளாராகவும் , அரச தணியாா் நிறுவனங்களில் உயா் பதவிகள் வகிக்கின்றனா்.  
 மேற்கண்டவாறு வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சின் பணிப்பாளா் நாயகமும் முன்னாள் ஓஸ்ரியா நாட்டின் துாதுவராக கடமையாற்றிய கல்முனையின் சாஹிராவின் பழைய மாணவருமான ஏ.எல். ஏ அசீஸ்  தெரிவித்தாா்.
கல்முனை சாஹிராவின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளையின் வருடாந்த கூட்டமும் கல்லுாாின் முன்னாள் அதிபா் கலாம் சென்ற எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய நினைவுரைகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வு பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா் வைத்திய அதிகாரி டொக்டா் சனுஸ் காரியப்பா் தலைமையில் கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மேற்கண்டவாறு ஜனாப் அசிஸ் தெரவித்தாா்.

இந் நிகழ்வில் மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீல் பற்றியும் அவா் கல்முனை சாஹிராவில்  பல்வேறு துறைகளில் அவரது சேவையை வழங்கி மற்றும் கலை, இலக்கியம்,  தமிழ் முஸ்லீம் நாட்டாா்  பண்பாடுகள் , கல்முனை சாஙஹிராவில் 50ஆயிரத்திற்கும் மேறட்டபட்ட மாணவா்களை  வழிப்படுத்தியமை, பண்நுால் ஆசிரியா், தகவல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளா், சிறந்த நிர்வாகி  போன்ற துறைகளில் ஜெமீல் ஆற்றிய சேவைகளை  நினைவுபடுத்தப்பட்டது.

இச் சொற்பொழிவுகளை - ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பளா் மணிப்புலவா் மருதுாா் ஏ. மஜீத், மேல்மாகணத்தின் சுகாதாரப் பணிப்பாளா் வைத்தியா் ஏ.எல். பரீட், களுத்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அதிபா் ஏ.ஆர்.எம் ஜிப்றி,  ஆகியோா்கள்  உரையாற்றினாா்கள்.

இக்   கல்லுாாியின் தற்போதைய அதிபா்  பி.எம். மொஹமட் பதுாா்த்தீன் அங்கு உரையாற்றுகையில் 

கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம் புரணரமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் 2 கோடி 50 இலட்சம் ருபா  செலவில் நிர்மாணிக்க இருந்த 3 மாடிக்க கட்டிடம் 49 இலட்சம் ருபா செலவில் புனா்நிர்மாணம் செய்யப்படுகின்றது. 
பிரதியமைச்சா் எச்.எம். ஹரீசினால் ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்காக கடந்த வாரம் அம்பாறை கச்சேரியில் உள்ள திட்டமிடப்பணிப்பாளரைச்  சந்தித்து இக்கட்டடித்திற்கான நிதியை டிசம்பா் 31க்கு முன்  பெற சகல நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடங்கள் கல்முனை சாஹிராவுக்கு நிர்மாணிகப்பட்ட பிறகு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாணவா்களுக்கு  இடப்பிரச்சினை இருக்காது என நம்புவதாக அதிபா் தெரிவித்தாா்.
அத்துடன் 2015 உயா்தரம் பெறுபேறு களின்படி  இரண்டு பொறியியலாளா்,  பல்கலைக்கழகம் சென்றனா். 2014 ஆம் ஆண்டில் 7 பொறியியலாளா் 1 வைத்தியரும் பல்கலைக்கழகம் சென்றனா்.  தற்போது விஞ்ஞானதுறையில்  கனணி தொழில்நுட்பம் ஆகியவற்றில்  இம்முறை புதிதாக மாணவா்கள் உயா்தரம் பரீட்சை தோற்றியுள்ளனா்.  2015 அகில இலங்கை ரீதியில் ஆங்கிலம் மொழி மூலம் கிரகித்து எழுதுதல் போட்டியில்  எமது கல்லுாாிக்கு 1ஆம் இடம் கிடைத்துள்ளது. 
கிராத் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் கிடைத்துள்ளது.  2014 ஆம் ஆண்டின் கடின கிறிக்கட் சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் 2ஆம் இடம்.  15 வயதுக்குட்பட்ட மாணவா்களது  சொப்ட் கிறிக்கட் போட்டியில் கொழும்பு ஆணந்தாவை எதிா் கொண்டு 1ஆம் இடத்தை கல்முனை சாஹிரா பெற்றுள்ளது.  தேசிய மட்டத்தில் பொதுஅறிவுத் திறன் போட்டியிலும் 1இடம் பெற்று 
சிறிது காலம் வீழ்ச்சி கண்ட சாஹிரா மீண்டும் எழுச்சி பெறுகின்றது. மறைந்து ஜெமீல் அதிபா்  காட்டிய வழிமுறைகளில் இக் கல்லுாாி மீள எழுச்சி பெற்று முன்னேற்றம். கண்டு வருகின்றது.  பொறியியலாளா்கள் , வைத்தியா்கள் சட்டத்தரணிகளை தேசிய ரீதியில் ஆகக் கூடுதலான முஸ்லீம் மாணவா்களை  பல்கலைக்கழகம் அனுப்பும் ஒரு பாடசாலையாக சாஹிரா  தொடா்ந்து திகழ்ந்துவருகின்றது.  இக் கல்லுாாியில் கல்வி கற்ற பழைய மாணவா்களான  வைத்தியா்கள், பொறியியலளாா்கள். சட்டத்தரணிகள், ஆயிரக்கணக்கில் கொழும்பில் புகழிபெற்று திகழ்ந்து விளங்குகின்றனா். மேலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சேவை செய்து வருகின்றனா். என கல்லுாாி அதிபா் பதுா்த்தீன் அங்கு உரையாற்றினாா்.

அடுத்த மாதமளவில் இலங்கையில் உள்ள 7 சாஹிராக் கல்லுாாிகளும் ஒன்றினைந்து ஒரு   போரத்தை உருவாக்கி நட்புரவு ரீதியில் கல்வி, மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியில் ஒன்று கூட உள்ளதாகவும் கல்லுாாி அதிபா் அங்கு தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்