மைத்ரி ர‌ணிலுக்கு தேர்த‌லில் ஆத‌ர‌வ‌ளித்து முட்டாளாகிப்போன‌ ஜே வி பி புல‌ம்ப‌ல்

ரணில் – மைத்திரி கூட்டணி இந்த நாட்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்ய முற்படுவதாக தேசிய தொழிற் சங்க மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் வரிகளை குறைத்து பணி புரியும் மக்களை முழுமையாக ஏமாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண மக்களின் வாகனம் வாங்கும் கனவை இல்லாமல் செய்து அவற்றின் விலைகளை அதிகரித்துள்ளதாகவும் அரச சேவையாளர்களின் ஓய்வூதியத்தை இல்லாது செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தோட்டத் தொழிலாளர்கள் வரவு செலவுத் திட்டத்தில் மறக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்