இன, மத அடிப்படையிலான பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட வேண்டும்

12243249_10153657335966327_5298883259519014506_n
எதிர்வரும் காலத்தில் இலங்கையில் இன, மத அடிப்படையில் பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு சாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (23)  நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து இன மக்களிடையேயும் சகோதரத்துவத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக இன, மத அடிப்படையில் பிரித்து பாடசாலைகள் நிறுவப்படவோ, இயங்கவோ கூடாது.
எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும். அதன் மூலமாக மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் கொழும்பு சாஹிரா கல்லூரி ஆளுநர் சபை தலைவர் பௌசுல் ஹமீட், பலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதுவர் பௌசான் அன்வர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்