Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது உண்மையா

முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது உண்மையாயின் அவர்களின் முழு உடமைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றியதுதான் பாதுகாப்பா என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேட்டுள்ளார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் மேலும் தெரிவித்ததவது,
வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது இனச்சுத்திகரிப்பே தவிர வேறில்லை. ஓர் இனத்தை முழுவதுமாக வெளியேற்றியது மட்டுமன்றி அவர்களின் உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் இதுவொரு மோசமான இனச்சுத்திகரிப்பாகும். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்காத அனைத்து தமிழ் மக்களும் வெட்கித்தலை குணிந்தே ஆக வேண்டும்.
முஸ்லிம்களை வெளியேற்றியமை அவர்களுக்கு பாதுகாப்பாயின் புலி பயங்கரவாதிகளை அரசாங்கம் விடுதலை செய்யாமல் தற்போதும் சிறையில் வைத்திருப்பது அவர்களின் உயிர்களை பாதுகாக்கவே என அரசு சொல்லுமாயின் அதனை அரிய நேந்திரன் ஏற்பாரா என்று கேட்கிறோம்.
அத்துடன் பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் புலிகளிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்கவே முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களுக்கெதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அரிய நேந்திரன் கூறுவதன் மூலம் அவருக்கு இந்த நாட்டின் யுத்தகால வரலாறு தெரியாது என்பது புலனாகின்றது. 1990ல் பிரேமதாசவின் அரசும் புலிகளும் தேனிலவு உறவாடிக்கொண்டிருக்கும் போதுதான் கல்முனை காத்தான்குடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை புலிகள் சிறைப்பிடித்து சித்திரவதை செய்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியவில்லை.  இதற்கு எதிராக பிரேமதாச அரசு எத்தகை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே கால பகுதியிலேயே வடக்கில் பல முஸ்லிம்கள் சிறைபிடிக்கப்பட்டதுடன் சிலர் புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளின் போது மௌனமாக இருந்த பிரேமதாச அரசு முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கியது என்பது அர்த்தமற்ற கூற்றாகும்.
உண்மையில் புலிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் 1985 முதலே ஆரம்பமாகி விட்டன. இதன் காரணமாக அக்கரைப்பற்று சம்பவம், காரைதீவு சம்பவம், உண்ணிச்சை கிராம முஸ்லிம்களை பாதுகாப்பு தருகிறோம் வெளியேறவேண்டாம் பாதுகாப்பு தருகிறோம் என கூறி மொத்தமாக அவர்களை எரித்தது, வியாபாரத்துக்காக சென்ற முஸ்லிம்களிடம் அவர்களிடமிருந்த ஐயாயிரம் ரூபாவுக்காக அவர்களை கொலை செய்தமை போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வேளைகளில் பிரேமதாச அரசு இருக்கவுமில்லை முஸ்லிம் ஊர்காவற்படையினர் நியமிக்கப்பட்டிருக்கவுமில்லை என்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேந்திரனுக்கு தெரியாமல் போய் விட்டதா அல்லது அவர் உண்மையை மறைக்கிறாரா?
ஆக வட மாகாண முஸ்லிம்கள் அனைத்து உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்டமை பாரிய இனச்சுத்திகரிப்பாகும். இதனை வட மாகாண தமிழ் மக்கள் உணர்ந்து அம்மக்களிடம் கொள்ளையடித்த அனைத்தையும் மீள வழங்கி அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியேற்ற நடவடிக்கை எடுப்பதே தமிழ் மக்களின் தனிப்பண்பை எடுத்துக்காட்டுவதாக அமையும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்