முஸ்லிம் விவாகப்பதிவாளர்களுக்கு மருத்துவ நிதி உதவிதிட்டம்


ஏற்பாடு: (அகில இலங்கை முஸ்லிம் விவாகப்பதிவாளர்கள் சங்கம்.)

அகில இலங்கையிலும் கௌரவமான சேவை செய்து வருகின்ற முஸ்லிம் விவாகப்பதிவாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் ஒன்றையும், மருத்துவ நிதி உதவித்திட்டத்தையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கான துரித ஏற்பாடுகள் செய்து வருவதாக சங்கத்தின் தலைவரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளாருமான அல்ஹாஜ் நாகூர் ரஹீம் ஜே பி குறிப்பிட்டார்.

மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் விவாகப்பதிவாள நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் அண்மையில் கொழும்பில் தலைவர் பணிமணையில் இடம் பெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. “நிக்காஹ் ஓர் அமானிதம்” நற்பிரஜைகளை உருவாக்கும் ஒரே வழி “நிக்காஹ்” ஒன்றே. எனும் தொணிப்பொருளில் மாவட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளர்கள், மஸ்ஜித் நிருவாக சபை உறுப்பினர்கள், மஸ்ஜித் இமாம்கள், மற்றும் பகுதி முஸ்லிம் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மாவட்டங்கள் தோறும் தெளிவூட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.
2. முஸ்லிம் விவாகப்பதிவாளர்கள் ஓய்வு பெறும் போது தற்காலிகமாகமாக உள்ள சமாதான நீதவான் பதவியும் செயலிழக்கப்படுவதால் இவர்களின் கௌரவமான சேவைக்காக அகில இலங்கை சமாதான நீதவான் பதவிகளை பெற்றுக்கொடுத்தல்.
3. தூர இடங்களில் சேவை செய்து வருகின்ற முஸ்லிம் விவாகப்பதிவாளர்களின் போக்கு வரத்து அசௌகரியத்துக்காக சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொடுத்தல்.
4. இவர்களுக்கான நலன்புரி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கல்வி பயிலும் இவர்களின் குழந்தைகளுக்கான உதவிகளை வழங்குதல்.


இதன் முதல் நிகழ்வை எதிர் வரும் டிசம்பர் மாத இறுதியில் காலி மாவட்டத்திலும், இரண்டாம் நிகழ்வை ஜனவரி 2016ல் திருகோணமலை மாவட்டத்திலும் நடாத்தவும் ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தன் பொதுச்செயலாளர் ஏ ஜே எம் ரியாழ் ஜே பி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்