Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

சிறுபான்மை மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்யும் பேரினவாத சிந்தனை

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதும், தேர்தல் முறையை மாற்றுவதும்  சிறுபான்மை மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்யும் பேரினவாத சிந்தனையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பது சிறு பான்மை மக்களுக்கு அதிகம் நன்மையளிப்பதாகும். இதில் சில குறைபாடுகள் இருந்தாலும், நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்காது ஒரு சில மாற்றங்களை மட்டும் கொண்டு வரவேண்டும் என்பதே உலமா கட்சியின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலமே முஸலிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் ஐந்து வீத வெட்டுப்புள்ளியை பெற்றுத்தந்தார். அதே போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலமே 2010 ம் ஆண்டு உலமா கட்சியினால் மௌலவி ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தர முடிந்தது,

நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுமானால் அவரால் தற்றுணிவுடன் எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாறாக பாராளுமன்றத்தில் விவாதித்தே முடிவுகளை எடுக்க வேண்டி வரும். இது சிறுபான்மை மக்கள் உரிமைகள் விடயத்தில் பாரிய இழுபறியை தோற்றுவிக்கும் என்பது கடந்த கால அனுபவங்களின் வெளிப்பாடாகும்.

அதே போல் தேர்தல் முறையை மாற்ற இடமளிக்க முhட்டோம் என அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் ரிசாதின் கட்சியும் வீரத்துடன் பேசின. ஆனால் இதுவும் மாற்றப்படுவதற்கான அறிகுறி உறுதியாகியுள்ளதால் ஆட்சியை மாற்றுவதில் பங்காளியான சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியிருப்பதன் மூலம் பேரினத்தை திருப்திப்படுத்தும் வகையிலேயே இந்த அரசு செயற்படுவது கவலை தருகிறது.

தேர்தல் தொகுதி முறை என்பது மஹிந்த அரசில் மஹிந்த சிந்தனையின் படி கொண்டு வரப்பட்டதாகும். இதனை இந்த அரசு நடைமுறைப்படுத்துவதன் மூலம் மஹிந்த சிந்தனையை மைத்திரி ரணில் அரசு தலையில் தூக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவே தெரிகிறது. இது மஹிந்தவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் பாரிய ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சியாகும். உலமா கட்சியை பொhறுத்த வரை தேர்தல் சீர் திருத்தம் என்பது ஐம்பதுக்கு ஐம்பது என இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே போல் முன்னாள் மாகாண சபை அமைச்சர் அதாவுள்ளாவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இந்த தேர்தல் முறையை இந்த அரசு கொண்டு வருவது அதாவுள்ளாவையும் அரசியல் ரீதியில் உயர்த்த எடுக்கும் நடவடிக்கையாகும்.

ஆகவே இது விடயத்தில் அரசு அவசரப்படாமல் மீண்டும் இது பற்றி விவாதங்கள், கலந்துரையாடல்களை செய்து புதியதோர் முறை பற்றி ஆராய வேண்டும் என அரசை உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.





Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்