பொலன்னறுவையில் முஸ்லிம் மீடியா போரம் வெற்றிகரமாக நடாத்திய ஊடக பயிற்சிப் பாடநெறி.. !!பொலன்னறுவை பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் குறைந்த பட்டசம் இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்களை உறுவாக்குவதனை தனது தார்மீகப் பொறுப்பாகவும் நீண்ட நாள் திட்டமாகவும் கருத்தில்கொண்டு கடந்த 20.11.2015 வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை 21.11.2015 வரை பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரில் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் மற்றும் நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான என்.எம்.அமீனின் தலைமையில் வெற்றிகரமான முறையில் தனது ஊடக பயிற்சி பாடநெறியினை நிறைவேற்றியது.
பொலன்னறுவையில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் ஊடகவியலாளர்களே இருக்கின்றார்கள். இது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவுமுள்ளது. கடந்த நெருக்கடி காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வெறுப்பு நடவடிக்கைகளின் பொழுது அவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடுவதற்கும் வெளியுலகிற்கு சொல்வதற்கும் எவரும் இருக்கவில்லை. இந்த நிலைமையினை கருத்தில் கொண்டே சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பொலன்னறுவை மாவட்ட வாலிப முன்னணிகளின் சம்மேளத்துடன் இணைந்து இக்கருத்தரங்கினை இலவசமாக நடாத்தியதும் மட்டுமல்லாமல் பங்கு பற்றியவர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதல்களையும் வழங்கி கெளரவித்தது. அத்தோடு பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத்தின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மஜீதியா பெண்கள் அரபு கல்லூரியிலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற நவமணி பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றியும், சமகாலத்தின் ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வில் முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துல் மஜீத், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் பசீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி, பாடசலையின் அதிபர் என்.பி.எம்.இப்றாகிம், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதான ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் மற்றும் முக்கிய ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்