Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட முதல் நகர சபை

fwegtrh
எஸ் .எம் .மஸாஹிம் (இஸ்லாஹி)
அமெரிக்காவின்  வரலாற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை பெரும்பான்யாக  கொண்ட  முதல் நகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க மி(ச்)சிகன் (Michigan) மாநிலயத்தின் பிரபல டெட்ராய்ட் (Detroit) நகருக்கு அண்மையில் உள்ள ஹம்றம்மிக்   (Hamtramck) என்ற போலந்து கத்தோலிக்கர்களின் உறைவிடமாக முன்னர் இருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த  நகரின்  நகர சபைக்கு  பெரும்பான்மை முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் குடிப்பரம்பல் மாற்றத்தை எடுத்து காட்டுவதாக அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த இந்த செய்தி தொடர்பில் அமெரிக்க ,மேற்கு நாடுகளின் பிரதான ஊடகங்களிலும் தேர்தல் முடிவு வெளியான நவம்பர் 06 ஆம் திகதி தொடக்கம் இஸ்லாம் தொடர்பில் அச்சத்தை (Islamophobia) தூண்டும் விதமாக கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நகர சபை அடுத்த வருடம் ஜனவரி மாதம் தனது    கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமெரிக்க முன்னணி ஊடகங்களும்  இது தொடர்பில் விரோதத்தை தூண்டிவிடும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன
குறிப்பாக CNN தொலைக்காட்சி  ஹம்றம்மிக் (Hamtramck) தற்போதைய  மேயர்    கரன் மஜிவ்வஸ்கியை (Karen Majewski)  அழைத்து நீங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரத்தை நிர்வகித்தது வருகிறீர்கள் நீங்கள் பயப்படுகிறீர்களா?    (“You govern a majority-Muslim-American city. Are you afraid?” ) என அதன் முதல்வரிடம் கேள்வி கேட்டு  இஸ்லாமிய அச்சத்தை தூண்டிவிடும் தனது கடமையை CNN  செய்துள்ளது, ஆனால்  அதற்கு மேயரின் பதில் வேறுவிதமாக இருந்தது என்பது வேறுவிடயம்.
அதேபோன்று The Washington Post முதல்  முஸ்லிம்- அமெரிக்க பெரும்பான்மை நகரில்  வசிப்பவர்கள் அதன் எதிர்காலம் பற்றி பதற்றம் என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது ( In the first majority-Muslim U.S. city, residents tense about its future)
சுமார் 22 ஆயிரம் மக்களை  கொண்ட  Hamtramck நகரின் ஆறு உறுப்பினர்களை கொண்ட அதன்    நகர சபை தேர்தல் கடந்த நவம்பர் 05 ஆம் திகதி இடம்பெற்றது .  அதில்   நான்கு முஸ்லிம்கள்  நகர சபைக்கு தெரிவாகியுள்ளனர், அத்தேர்தலில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் முதல் கூடிய வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  ஒரு காலத்தில் குடியேறிகளான  90 வீதமான  போலந்து கத்தோலிக்கர்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த நகரில் தற்போது 60 வீதமான முஸ்லிம்கள் வாழ்வதாக உத்தியோகபூர்வமற்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் கணிப்பீடுகளை குறிப்பிட்டு  ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன  .
அதேவேளை   தற்போதைய  ஹம்றம்மிக்   (Hamtramck) நகர சபையின் மேயர்  கரன் மஜிவ்வஸ்கி , அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெரும்பான்மை நகர் ஹம்றம்மிக்   என்பதை மறுத்துள்ளதுடன், 23 -24 ஆயிரம் மக்களை  கொண்ட, ஹம்றம்மிக் நகர் 2.2 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது.   நகரில் 40 வீதமான முஸ்லிம்களே இருப்பதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளதுடன்.
”அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெரும்பான்மை நகர சபையாக ஹம்றம்மிக் நகர சபை வரலாறில் இடம் பிடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  மதத்தை அடிப்படையாகக் கொண்ட   கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அமெரிக்க மி(ச்)சிகன் மாநிலத்தின் மற்றுமொரு பெரிய நகராக உள்ள டியர்போர்ன் (Dearborn) இல் முஸ்லிம்களின் வேகமான குடிப்பரம்பல் பற்றியும் அதிகமாக பேசப்படுகிறது    அந்த நகரில் 50 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என தெரிவிக்கப்பட்டுக் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியை  மற்றும் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அரசியல், இராணுவ மற்றும் சமூக, பொருளாதார நலன்சார்ந்த  தேவை இஸ்ரேலுக்கும், மேற்கு நாடுகளின் தீவிர அரசியல் சக்திகளுக்கும் உண்டு.
அமெரிக்காவில்  ஹம்றம்மிக்  (Hamtramck) நகர பகுதி சிறிய ஒரு பகுதி என்றாலும், இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் மக்கள் தொகை வேகமாக நாட்டின் மக்கள் தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது இது இயல்பான மாற்றம் அல்ல என்பதை மையமாக   வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது போன்று ஆபத்து நிறைந்ததாகவும்  உள்ளது
சியோனிச , மற்றும் வெள்ளை இனவாதத்தின் அச்சம் !!
இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுதல், குடியேற்றக்காரர்களின் வரவு, முஸ்லிம்களின் பிறப்பு வீதம் என்பன காரணமாக முஸ்லிம் மக்கள் தொகை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதன் மக்கள்  பரம்பலில் வேகமான தாக்கத்தை ஏற்படுத்தி  வருவதாகவும்   இது  சியோனிசம் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தவ ஐரோப்பா மற்றும், அமெரிக்காவின்   அரசியல் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது எனவும்  இதன் காரணமாக அந்த நாடுகளின் வெளிநாட்டு கொள்கை வகுப்பில் பாரிய  மாறுதலை ஏற்படுத்தும் எனவும், இது இஸ்ரேலின் எதிர்கால இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும்   என சியோனிச, சியோனிச சார்பு சக்திகளின்  அச்சம் ஒரு பக்கம்   மறுபக்கம்      யுத்தம் இன்றி வெள்ளை இனத்தவரின் கையில் இருந்து ஐரோப்பா சிறிது சிறிதாக பறிபோகிறது என்ற வெள்ளை இனவாதத்தின் அச்சம் என்பன ஐரோப்பாவின் மக்களை இஸ்லாம்  மற்றும்  முஸ்லிம்கள் தொடர்பில்  அச்சுறுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது.
தற்போது Hamtramck நகர தேர்தல் முடிவு, முஸ்லிம் அகதிகளின் ஐரோப்பா நோக்கிய படையெடுப்பு, பரீஸ் நகர் மீதான தாக்குதல்கள் என்பன ஐரோப்பிய அமெரிக்க, நாடுகளின் குடிவரவு கொள்கையில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த அவைகளை தூண்டும் காரணிகளாக மாற்றப்பட்டுள்ளது   உதாரணமாக சுவிடன் சிரிய அகதிகளுக்கு இனி நிரந்தர வதிவிட அனுமதி வழங்காது என நேற்று அறிவித்துள்ளதை  குறிப்பிடலாம்.
அதேவேளை இராணுவ ரீதியான தக்குதல்களை போன்று அரசியல் ரீதியான வெற்றியும் இஸ்லாத்துக்கும்  முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு  வருகின்றதை காணமுடிகிறது.
பரீஸில் நடத்தப்பட்ட இராணுவ ரீதியான தாக்குதல் தொடர்பில் பல சூழ்ச்சிக் கோட்பாடுகள் (conspiracy theory) சொல்லப்படுகிறது அதை விட்டுவிடுவோம் அதேபோன்று  இந்த  தேர்தல் முடிவு தொடர்பில் ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு கூறுவதாயின் இந்த தேர்தல் வெற்றி சியோனிச சக்திகளால் திட்டமிடப்பட்டதுதான் என கூறலாம் ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது .
ஆகவே சூழ்ச்சிக் கோட்பாடுகளின் பின்னால் செல்லாமல் யதார்த்தங்களை அறிந்து கொண்டு  உண்மயான பிரச்சினைகளின் மையத்தை இனங்கண்டுகொண்டாள்  தீர்வுகளை யோசிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்