Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

கல்முனை மாநகர தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து உலமா கட்சித்தலைவர் போட்டியிடுவாரா?

கடந்த பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நாம் ஆதரவு வழங்கியமை கல்முனை மாநகர உள்ளுராட்சி தேர்தலில் உலமா கட்சித்தலைவர் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கே என பலரும் சொல்வது எமது அரசியல் கொள்கை பற்றித்தெரியாதோரின் பிழையான கருத்தாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் கல்முனைக்கான பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதற்காகவும் கல்முனையின்; நலனுக்காகவும் மாவட்டத்தில் செல்வாக்குள்ள முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து சமூகத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இன்றைய பிரதி அமைச்சர் ஹரீசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அவரிடம ஒரு சதம் கூட பணம் வாங்காது தூய்மையான முறையில் நாம் அவருக்கு ஆதரவளித்தோம். அவருடனான பேச்சு வார்த்தையின் போது கல்முனை மாநகர சபை தேர்தலில் விகிதாசார தேர்தலாயின் எமது கட்சியை சேர்ந்த மூவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தருவதாகவும், வட்டார தேர்தல் முறையாயின் ஒருவருக்கு இடம் தருவதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை பிரதி அமைச்சர் ஹரீஸ் செயற்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அந்த ஒருவர் உலமா கட்சித்தலைவராக இருப்பார் என்ற எண்ணம் எம்மிடம் இல்லை.

எம்மை பொறுத்த வரை பிரதி அமைச்சர் ஹரீஸ் பற்றிய நல்லெண்ணம் எம்மிடம் உள்ளது. அவர் நல்ல குடும்பத்தை சேர்ந்த கர்வமற்ற ஒருவர் என்பதால் அவருடன் நாம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஏனைய விடயங்களை அவர் நிறைவேறு;றுவார் என்று நம்புகிறோம். அவர் பிரதி அமைச்சராகி சில மாதங்களே என்பதால் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது பொறுமையாய் நாம் அவரது செயற்பாடுகளை கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

எம்மை பொறுத்த வரை கல்முனையை தலைமையாகவும், தலைமையகமாகவும் கொண்ட முஸ்லிம் கட்சியே எமது எதிர்கால இலக்காகுமே தவிர உள்ளுராட்சி தேர்தலில் உலமா கட்சித்தலைவர் போட்டியிட்டு ஒரு மாநகர சபை உறுப்பினராக வருவது அல்ல. அந்த எண்ணம் சிறிதளவேனும் எமக்கு கிடையாது. ஆனால் மு. காவின் தலைமையும், பிரதி அமைச்சர் ஹரீசும் அதனை விரும்பினால் அது பற்றி ஆலோசிப்போமே தவிர தலைவருக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம்; கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்ற பதவி என்பது ஓர் அமானிதமாகும். அந்த அமானிதத்துக்கு மோசடி செய்து விட்டு கொழும்பை மையப்படுத்திய தேசிய அரசியலில் அதிகம் ஈடு பட முடியாது போகும். அப்படியொரு துரோகத்தை கல்முனை மக்களுக்கு செய்ய உலமா கட்சித்தலைமை தயாரில்லை என்பதனாலேயே மாநகர சபை தேர்தலில் தலைவர் தவிர்ந்த வேறு யாரையும் நிறுத்துவது என்பதே இது வரை எமது முடிவாகும்.

அதே வேளை உள்ளுராட்சி தேர்தலில்  தேசிய ரீதியாக எந்தக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி நாம் இன்னமும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இந்தக்கட்சிக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்ற கடப்பாடு எமது கட்சிக்கு இல்லை. நாம் தனித்துவமான, சுய அரசியல் சிந்தனையுள்ள கட்சி என்பதால் எமது கட்சியினதும், சமூகத்தினதும் நலன்களை முன்வைத்து எமது முடிவுகளை எடுப்பதில் நாம் துணிச்சல்மிக்கவர்கள் என்பதை எமது ஆதரவாளர்கள் நன்கு அறிவார்கள் என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்