Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

அகில இல‌ங்கை ம‌க்க‌ள் காங்கிரஸ் செய‌லிழ‌ந்து விட்ட‌து.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது தனது அரசியல் பீடத்தையோ செயற்குழுவையோ உத்தியோகபூர்வமாக கூட்டி முடிவுகளை எடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான கூட்டங்கள் கூட்டப்பட்டாலும் அவை நிழல் கூட்டங்களாக மட்டுமே அமையுமே. தவிர அவை அந்தக் கட்சி யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற முடியா. கட்சிக்கு வெளியிலும் விசேடமாக, தேர்தல் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் கூட இவ்வாறான கூட்டங்களில் மேற்கொள்ளக் கூடிய பல விடயங்கள் வலுவற்றனவாகவே நோக்கப்படும்.
இவ்வாறான நிலைமைக்குக் காரணம் கட்சியின் செயலாளர் என்ற பதவிப் பிரச்சினையே. கட்சியின் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீ்த் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமையும் அவர் சார்பானோரும் அறிவித்தாலும் கட்சியின் யாப்பின்படி அவ்வாறு செயலாளரை நீக்க முடியாது என்று முன்வைக்கப்பட்டுள்ள வாதம் தேர்தல் ஆணையாளராலும் உறுதிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் செயலாளருக்கு எதிரான நீதமன்ற கட்டமைப்பின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட அது ஹமீதை பாதுகாக்கும் தன்மையைக் கொண்டதாகவும் அமையலாம்.
இவ்வாறானதொரு நிலையில் செயலாளரை நீக்கிய பின்னர் அவரைச் சட்ட ரீதியாக எப்படி நீக்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அதன்படி நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கூட அது வலுவற்றே போகும். சட்ட ரீதியற்ற முறையில் முறையில் ஒருவரை நீக்கி விட்டு பின்னர் அதனை சட்டமுறைமைக்கு உட்படுத்தும் முயற்சிகள் பெரும்பாலும் சட்டவாக்கத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியனவல்ல.. எனவே, இந்த விடயமும் வை.எல்.எஸ்.ஹமீதுக்கு சார்பானதாகவே அமையலாம்.
இவை எல்லாம் ஒரு புறமிருக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீதை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது ஓர் அவசர முடிவு என்றுதான் கூற வேண்டும். இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் அவர்கள் ஒரு சிலரின் கருத்துகளை மட்டும் கேட்டு விட்டு முடிவை எடுத்த விட்டரோ தெரியாது.
2004 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி என நினைக்கிறேன். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றவர்களில் வை.எல். எஸ். ஹமீத் அவர்களும் ஒருவராவார். ஹமீத் உட்பட விலகிய அனைவரும் ஒன்றுபட்டு தனியாக இயங்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போது அதற்கான ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்துவது என இவர்கள் தீர்மானித்தனர்.
இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமுள்ளது. 2005 ஆம் ஆண்டுகளில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்திலிருந்து இந்த மாற்று அணிக்கு ஒரு தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதாவது, அமைச்சுப் பதவிகள் தருகிறோம் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் என்பதே மஹிந்த தரப்பு தகவல். இது தொடர்பில் மாற்று அணியினர் பல விடயங்களை கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்திருந்தனர்.
கொழும்பு மாநகர சபையின் இன்றைய மேயரான அல்ஹாஜ் முஸ்ஸமிலின் கொள்ளுப்பிட்டி வீட்டில் இவர்கள் கூடி சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியமை எனக்குத் தெரியும். வை.எல்.எஸ். ஹமீத் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். (மற்றவர்களின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) அப்போது ஒரு விடயம் அங்கு பூதாகரமான பிரச்சினையாக இவர்களுக்குள் வெடித்தது.
அமைச்சராக யாரின் பெயரை குறிப்பிடுவது என்பது தொடர்பில் அவர்களால் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. இறுதியில், தற்போதைய பிரதியமைச்சர் அமீர் அலியை அமைச்சாராக்குவோம் என்று சிலர் கூறிய போது, வை.எல்.எஸ். ஹமீத் ஆத்திரமடைந்தவராக அங்கிருந்து வெளியேற முயற்சித்தார். இருப்பினும் அவர் தடுக்கப்பட்டு அவரது கருத்துகளையும் கூறும்படி கேட்கப்பட்டார்.
அமீர் அலி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை அமைச்சராக்க முடியாது. அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ரிஷாத் பதியுதீனையே அமைச்சராக்க வேண்டும். அவர் மூலமே கட்சியைக் கட்டியெழுப்ப முடியும் என ஒற்றைக் காலில் நின்றவர்தான் இன்று பதவி விலக்கப்பட்டுள்ள இந்த ஹமீத். அவ்வாறு நடக்காவிடின் தான் வெளியேறுவதாக ஆக்ரோஷப்பட்டார். அமீர் அலியும் கட்சிக்கு முக்கியதானவர். அவரும் நல்லவர்தான். ஆனால் வட பகுதியைச் சேர்ந்த ரிஷாத் பதியுதீனுக்கே அமைச்சு பொறுப்பு வழங்க வேண்டும். அவர் துடிப்பானவர், சமூக அக்கறை கொண்டவர் என்றெல்லாம் ஹமீத் அங்கு கூறினார். இருப்பினும் அங்கிருந்த பலரும் இதனை… (மீதி விரைவில்)
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்