மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு அங்குலத்துக்கேனும் நகர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை

அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு அங்குலத்துக்கேனும் நகர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை என எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:
அணைக்கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்துசெல்லும் நீர் பாரிய அழிவை ஏற்படுத்திச் செல்வதுபோன்று அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
காணிச் சந்தைக்கு இலங்கையின் நிலத்தை முழுமையாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்கள் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கான சட்டங்கள் நீக்கப்பட்டு மற்றும் அவர்களுக்கான வரிகளை நீக்கி நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கு வதற்கான யோசனைத் திட்டங்களே வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப் பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்