மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவும் – ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு

Maithripala-Sirisena-13-July-15-Prz-media-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகளையும், யோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தந்த மாகாணங்களில் ஆளுனர்களின் தலைமையில் மீள்குடியேற்ற குழுக்களை கூட்டி, நிலவும் பிரச்சினைக்கு தீர்வுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதேவேளை. மாவட்ட செயலாளர்களின் அறிக்கைகளில் மாத்திரம் தங்கியிருக்காது மாவட்ட மட்டத்தில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்