Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தமிழ் நாட்டு அறிஞர் பீ ஸெய்னுலாப்தீனின் இலங்கை வருகை தடுக்கப்பட்டமை மைத்திரி - ரணில் அரசில் பாரிய கறையாகவே வரலாறு பதிவு செய்யும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.  இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
பீ ஜே என்பவர் தமிழ் பேசும் முஸ்லிம் உலகில் மிகச்சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவர். மூட நம்பிக்கைகளை ஒழித்து ஓரிரைக்கொள்கையின் பால் மக்களை அழைப்பதில் பாரிய வெற்றி கண்டவர். அவரது கருத்துக்களில் 90 சத வீதமானவற்;றை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அப்படியான ஒருவர் இலங்கை வருவதென்பது இலங்கைக்கு பெருமையையே சேர்க்குமே தவிர கலவரத்தை உருவாக்கும் என்பது அதீத கற்பனையாகும்.  இந்த நிலையில் அவரது வருகையை ஓரிருவரின் கருத்துக்காக அரசாங்கம் தடை செய்தமை ஜனநாயக நல்லாட்சியாக தெரியவில்லை.
 இந்த நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனாவை பின்னாலிருந்து இயக்கி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி  மேற்கொண்ட சக்திகளே இந்த தடையின் பின்னால் இருந்துள்ளன. இவர்களே இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், தவ்ஹீத்வாதிகள் பற்றியும் தப்பாகவும் பிழையாகவும் பொது பல சேனாவிடம் கூறி அவர்களை முஸ்லிம்களுக்கெதிராக வழி நடாத்தினார்கள். அத்தகைகயவர்களின் கருத்தை மட்டும் அரசு செவிமடுத்து பீ ஜேயின் வருகையை தடுத்தமை கண்டிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு நடைபெற்றதன் மூலம் கடந்த கால அருசுகளுக்கும் தற்போதைய அரசுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது.  பீ ஜே வருவதில் பிரச்சினையில்லை என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் சொல்லியும்; கேளாமை இந்த நாட்டு முஸ்லிம்களை இன்னுமொரு இருண்ட யுகத்துள் செலுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அதே வேளை பீ ஜேயின் வருகையை தடை செய்தமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மட்டுமல்ல அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். இது எதிர் காலத்தில் மிக மோசமான உதாரணங்களை ஏற்படுத்தும்.  ஆகவே விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு மீள் பரிசீலணை செய்து இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பீ ஜே இலங்கை வந்து செல்ல அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இதற்காக தவ்ஹீத்வாதிகளினதும் வாக்குகளை பெற்று அதிகாரத்தை பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி சொல்லிக்கொள்வதுடன் இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிர் காலத்தில் முகம் கொடுப்பதாயின்  தவ்ஹீத்வாதிகள் ஒன்றுபட்டு அரசியல்ரீதியாக எம்மோடு இணைந்து செயற்பட முன்வருவதே ஒரே வழி என்பதையும் உலமா கட்சி வலியுறுத்துகிறது.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்