Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

திட்டமிட்டபடி தேர்த்திருவிழா


அமைச்சர் மனோ, முஜிப் பங்கேற்ற இருதரப்பு கூட்டத்தில் முடிவு
மத்திய கொழும்பின் பாபர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம்மாதம் 22 முதல் 31 வரைக்குட்பட்ட தினத்தில் நடைபெறும்.
தற்சமயம் நவராத்திரி உற்சவங்கள் ஆரம்பித்து உள்ளதால் இந்த திருவிழா தேர் பவனியுடன் இம் மாத ஒக்டோபர் இறுதிக்குள் ஆகம முறைப்படி சாஸ்திரிகள் தீர்மானித்து கொடுக்கும் ஒரு சுபதினத்தில் நடைபெறும். இத்தீர்மானம் நேற்று தேசிய கலந்துரையாடல் அமைச்சு
கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி, மாகாண சபை உறுப்பினர்கள் சண்.
குகவரதன், கே.டி. குருசாமி, மாநகர சபை உறுப்பினர்கள் பிரியாணி குணரத்ன, இக்பால், எஸ். மகேஸ்வரன், தேசிய நல்லாட்சி இயக்க தலைவர் நாஜா முஹம்மத், வழக்கறிஞர் ருஷ்டி ஹபீப், பசூல் ஹாஜி, ஜ.ம.க தலைமையக பொறுப்பாளர் லயன் மனோகரன், உதவி நிதி செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோருடன் குறிப்பிட்ட பாபர் வீதி 36ம் இலக்க தோட்டத்தை சார்ந்த ஆலய மற்றும் பள்ளிவாசல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது, எனது அழைப்பை ஏற்று இந்த கலந்துரையாடலில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது குறிப்பிட்ட தோட்டத்தை சார்ந்த ஆலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை முன்னெடுப்பது என்றும், 10ம் திகதி நடத்தப்படவிருந்த கோவிலின் தேர்த்திருவிழா எவ்வித தடையும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானித்தனர்.
தற்போது நவராத்திரி உற்சவம் ஆரம்பித்து உள்ளதால், தேர்த்திருவிழாவை இம்மாதம் 22 முதல் 31 வரைக்கு உட்பட்ட ஒரு சுப தினத்தில் நடத்துவது என்றும் மேலும் முடிவு செய்யப்பட்டது.
எனது அழைப்பின் பேரில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மிகவும் பொறுப்புடன் இந்த தேசிய நல்லிணக்க செயற்பாட்டில் கலந்து கொண்டு பங்களித்துள்ளார். அவருடன் மாநகர சபை உறுப்பினர் இக்பால் மற்றும் எனது நண்பரும், வழக்கறிஞருமான ருஷ்டி ஹபீப், பசூல் ஹாஜி ஆகியோருடன் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்களும் பங்களித் துள்ளனர்.
 நேற்றைய பேச்சில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட முன்னாள் மேயர் ஓமர் காமில் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி, தேசிய மத நல்லிணக்கம் ஏற்பட உதவியுள்ளார். இவர்கள் அனைவரையும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையில் நான் பாராட்ட விரும்புகிறேன்.
அத்துடன் இந்த விவகாரம் எல்லை மீறி சென்று தேசிய ஐக்கியத்தை குழப்பி, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தீவிரவாதத்துக்கு இடமளித்து விடக்கூடாது என்ற நோக்கில் மிகுந்த சகிப்பு தன்மையுடன் செயற்பட்ட ஆலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நான் பாராட்ட விளைகின்றேன்.
இது நல்லிணக்கம், மத ஒற்றுமை, சகிப்புத்தன்மை, சமாதானம், தேசிய கலந்துரையாடல் ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். கொழும்பு மாவட்ட எம்.பி. என்ற முறையிலும், தேசிய சகவாழ்வுக்கு பொறுப்பான தேசிய கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையிலும் நான் இந்த வெற்றியைவிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அதேபோல், இது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மத குரோதம் மட்டும் பதற்ற நிலைமையை ஏற்படுத்த முனைந்த ஒருசில தீவிரவாத சக்திகளுக்கு கிடைத்துள்ள தோல்வி என்றும் கூறிட விரும்புகிறேன்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்