Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற தாமதம் - அமைச்சர் ரிசாதின் கையாலாகாதனமா?

பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவறவிட்டு விட்டு போன பஸ்ஸ{க்கு கைகாட்டும் நிலைக்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கே காரணம் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற தாமதம் சம்பந்தமாக கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற  ஆய்வு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,

1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் தமக்கு விடிவு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழ்நிலையிலேயே 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அவர்களின் வாழ்வுக்கான விடிவெள்ளியும் தென்பட்டது. அந்த வேளையில் வட மாகாண முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதியான அமைச்சர் ரிசாத் பதியுதீன் மிகப்பெரும் அதிகாரமிக்க அமைச்சராக இருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பெசிலும் இவரது சட்டைப்பைக்குள் எனுமளவு நெருக்கமாக இருந்தார். அத்துடன் வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் பெசில் ராஜபக்ஸ அப்பழுக்கற்ற அக்கறை கொண்டவராக இருந்ததாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அடிக்கடி பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அரசியல் அதிகாரமும் ஜனாதிபதியின் கடைக்கண்பார்வையும் இருந்தும் ஏன் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை என்பதற்கு இது வரை அமைச்சர் தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை. இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக அமைச்சர் தரப்பில் சொல்லப்படுவதை ஏற்க முடியாது. காரணம் கடந்த ஆட்சியில் தமிழ் கூட்டமைப்பு என்பது அரசின் எதிர் கட்சியாக மட்டுமல்லாது எதிரியாகக்கூட இருந்தது. அவ்வாறான நிலையில் தமிழ் கூட்டமைப்பின் பேச்சை கேட்டு வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் கடந்த அரசு ஒத்துழைக்கவில்லை என்றால் அது அந்த அரசின் தவறா அல்லது அரசுடன் ஒட்டி உறவாடியும் சாதிக்க முடியாமல் போன அமைச்சர் ரிசாதின் கையாலாகாதனமா? அல்லது இப்பிரச்சினையை பிச்சைக்காரன் புண்ணாக வைத்து அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதமா என கேட்க வேண்டியுள்ளது.

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உடனடியாக நடக்க வேண்டும் என்பதை உலமா கட்சி அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளது. மௌலவி சுபியான் தலைமையில் வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றும்படி கொழும்பில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமேயாகும். ஆனால் இன்று வட மாகாண முஸ்லிம்கள் அதிகார அரசியல் இலாபத்துக்காக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த அரசு இவற்றுக்கு உதவவில்லை என்றால் ஜனாதிபதி தேர்தலின் போது இறுதிக்கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவளித்த போது வட மாகாண முஸ்லிம்கள் சகல நஷ்ட ஈடுகளும் வழங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்துள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என ஏன் அமைச்சர் ரிசாதினாலும் அவரது கட்சியாலும் புதிய ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது  ஏன் என நாம் கேட்கிறோம். அதே போல் அவரின் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுதேர்தலில் போட்டியிட ஒப்பந்தம் செய்த போது ஏன் இது விடயத்தை ஒப்பந்தம் செய்யாமல் மறக்குமளவு வட மாகாண முஸ்லிம்கள் இவர்களுக்கு மறந்து விட்டதா? அல்லது அம்மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்களா?

ஆகவே, இனியும் வட மாகாண முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை தவிர்க்குமுகமாகவும் அவர்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும்  சகல முஸ்லிம் கட்சிகளைக்கொண்ட நடவடிக்கை சபை ஒன்றை பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து ஏற்படுத்த வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்