Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

ரஷ்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது குண்டு பொழிவதை அனுமதிக்க முடியாது

ஐ எஸ் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சொல்லி ரஷ்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது குண்டு பொழிவதை அனுமதிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
அண்மைக்காலமாக ஐ எஸ் அமைப்பினர் இஸ்லாத்துக்கு முரணான சில விடயங்களை செய்வதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து வருகிறோம். இஸ்லாத்தை பொறுத்த வரை போராட்டத்தின் இலக்கு மட்டுமல்ல அதன் பாதையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஐ எஸ் தனது இலக்கை அடைய இஸ்லாம் ஏற்காத வழிகளை கைக்கொண்டு வருவதாக வெளிவரும் செய்திகள் பற்றி நாம் கவலையுடன் நோக்குகின்றோம். ஆந்த செய்திகள் உண்மையானவையா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்களினால் உருவாக்கப்பட்டவையா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனாலும் உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான தேவையினை முஸ்லிம் சமூகம் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அமைதியாக இருக்கும் குவைத், சஊதி அரேபியா போன்ற நாடுகளிலும் ஐ எஸ் தாக்குதல் நடத்தியமை கவலை தருவதாகும்.
இந்த நிலையில் சிரியாவின் ஷீயா ஆட்சியாளரின் வேண்டுதலுக்கிணங்க ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் ரஷ்யா வான்தாக்குதலை மேற்கொண்டுள்ளமையை நாம் ஏற்க முடியாது. ஏனெனில் வான்தாக்குதல் மூலம் அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதே யுத்த வரலாறு நமக்கு சொல்லும் உண்மையாகும்.  இது மேலும் பல இளைஞர்களை போராளிகளாகக்கூட மாற்றலாம். அத்துடன் ஐ எஸ் அமைப்பு என்பது அமெரிக்க இஸ்ரேல் பின்னணி கொண்டது என பல ஊடகங்கள் கூறி வந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேல் மௌனமாக இருப்பதன் மூலம் ஐ எஸ்ஸ{க்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
ரஷ்யா வான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ஐ எஸ்ஸ{க்கு ஆதரவாக அயலில் உள்ள சுன்னி முஸ்லிம் நாடுகள் கூட ஆதரவாக இல்லாமைக்கு ஐ எஸ்ஸின் பிழையான நவடிக்கைகளே காரணமாகும். இது நல்லதொரு போராட்டத்தை ஆரம்பித்த விடுதலை புலிகள் கடைசியில் சகோதர படுகொலை, சகோதர மொழி பேசும் முஸ்லிம்கள் மீதான படுகொலை, தமக்கு உதவிய இந்தியாவை பகைத்துக்கொண்டமை போன்றவை காரணமாக அழிந்து போனதை நினைவூட்டுகிறது. போராட்டம் என்பது வெறுமனே ஆயுத பலம் மட்டுமல்ல, மாறாக போராடும் நேரத்தில் போராட்டம், யுத்த நிறுத்த நேரத்தில் யுத்த நிறுத்தம், யாரும் எதிர் பார்க்காத வேளையிலும் சமாதான ஒப்பந்தம் என்ற உயரிய வழிகாட்டலை முஹம்மத் நபியவர்கள் வழிகாட்டல் மூலம் நாம் காண்கிறோம். அவற்றை பெரும்பாலான முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத போராளிகள் மறந்து விடுகின்றனர்.
ஆகவே ரஷ்யா உடனடியாக தனது வான் தாக்குதலை நிறுத்துவதுடன் உலகளாவிய முஸ்லிம்களின் தலைமைத்துவ நாடான சஊதி அரேபியாவின் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐ எஸ் முன்வரவேண்டும். அவர்கள் கைப்பற்றிய இடங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து, மனிதாபிமான மற்றும் இஸ்லாம் காட்டும் உண்மையான வழியை ஏற்று இஸ்லாம் காட்டும் ஜனநாயக வழிக்கு வந்து அமைதியை ஏற்படுத்த ஐ எஸ் உதவ வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்