Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

ரிசாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்



ஏ.எச்.எம்.பூமுதீன்

அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது.

யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்Nசைனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி முகா அம்மக்களை ஏமாற்றி விட்டது.

பொதுத்தேர்தல் Nவைளயின் போது நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கெல்லாம் சென்ற ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டி அம்மக்களின் வாக்குகளை சூரையாட பெரும் கைங்கரியங்களை எல்லாம் மேற்கொண்டார்.

அதிலும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வந்த ரவூப் ஹக்கீம,; தேசியப்பட்டியல் வாக்குறுதிக்கெல்லாம் அப்பால் சென்று அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளியில் வைத்து குர்ஆன் மீது சத்தியம் செய்தவராக அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நியமனத்தை உறுதிப்படுத்தினார்.

இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருந்த  அ.இ.ம.காவின் பக்கம் பெருவாரியாக சாய்ந்திருந்த அட்டாளைச்சேனை பிரதேசம் ஹக்கீமின் வாக்குறுதியை அடுத்து முகாவின் பக்கம் அலைமோதியது.

சுமார் 25 தேசியப்பட்டியல் வாக்குறுதிகளை 25 முஸ்லிம் கிராமங்களுக்கு வழங்கியிருந்ததாக தேர்தல் பிரச்சார மேடைகளின் போது எதிர்தரப்பினரால் விமர்சனம் செய்யப்பட்டது.

தேர்தல் வேளையின் போது முகாவின் பிரதான எதிரியாக காணப்பட்ட அ.இ.ம.கா, ஹக்கீமின் இந்த வாக்குறுதிகளை கடுமையான விமர்சனம் செய்தது. பொய் வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என மக்களை எச்சரித்தது.

எனினும் மக்கள் அ.இ.ம.காவின் விமர்சனத்தை ஏற்காது முகாவுக்கே வாக்களித்தது.
அட்டாளைச்சேனைக்கு பிரச்சாரத்திற்காக சென்ற ரிசாத் பதியுதீன் அங்கு இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தின் போது அட்டாளைச்சேனைக்கு ஒருபோதும் தேசியப்பட்டியல் நியமனம் கிடைக்காது. ஹக்கீம் உங்களை ஏமாற்றுகின்றார். நம்பாதீர்கள் என்று ரிசாத் முழங்கிய போது அவரை நோக்கி சரமாரியான கல்லெறித் தாக்குதலை நடத்தினர் முகா தரப்பினர்.

சுகாதார அமைச்சராக தற்போது நியமனம் பெற்றிருக்கும் நசீரின் நெருங்கிய ஆதரவாளர்களாலேயே ரிசாத் மீதான இந்த கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஐதேக சின்னத்தில் முகா சார்பில் போட்டியிட்ட 03 வேட்பாளர்களினதும் சொந்த ஊர்களிலும் ரிசாத் முகாவை கடுமையாக விமர்சித்து உரையாற்றிருந்த போதிலும் அங்கு அவருக்கு எந்தவிதமான கல்லெறித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் பொய் வாக்குறுதியை நம்பிய அட்டாளைச்சேனை மக்கள் கல்லெறித் தாக்குதல் நடத்தியதன் மூலம் முகாவின் தேசியப்பட்டியல் என்பது எமக்கு நிச்சயம் உறுதியானது என்ற அளவுக்கு உறுதியான நிலைப்பாட்டில் இருந்திருந்தார்கள் என்பதையே அது எடுத்துக்காட்டுகின்றது.

ஜூலை 27ம் திகதி ரிசாத் மீது கல்லெறிந்த அதே அட்டாளைச்சேனை மக்களுக்கு சரியாக 03 மாதங்களின் பின்னர் ஒக்டோபர் 27ம் திகதி  முகாவின் தேசியப்பட்டியல் வாக்குறுதி என்பது வெறும் பொய் ஏமாற்று வித்தை என்பதை இறைவன் எடுத்துக்காட்டியிருக்கின்றான்.

அட்டாளைச்சேனையில் கல்லெறிக்கு உள்ளாவதற்கு சற்று நிமிடங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு ரிசாத் பதியுதீன், பள்ளிவாசல் கட்ட நிர்மானப் பணிக்கென ரூபா 05 இலட்சத்தை வழங்கி வைத்துவிட்டே அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி கல்லெறியும் பட்டார்.

ரிசாத் மீதான கல்லெறி என்பது அப்போது முகா போராளிகளாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை மக்களை நோக்கி ஏனைய பிரதேச முகா போராளிகள் கடும் விமர்சனைத்தையும் முன்வைத்தனர்.

அட்டாளைச்Nசைனயில் கல்லெறிக்கு உள்ளான ரிசாத் பதியுதீன் அங்கிருந்து நேராக மருதமுனைக்கு சென்ற போது மிவும் மனம் உடைந்தவராக காணப்பட்டார்.

அட்டாளைச்சேனை மக்கள் என்கண்முன்னே ஏமாற்றப்படுகிறார்கள.; இதற்கு இடம் கொடுக்க முடியாது. நான் உண்மையைக் கூறிய போது, நான் பொய் சொல்வதாக கூறி என்மீது கற்களை வீசினர். 

நிச்சயமாக நான் சொன்னதுதான் உண்மை என்பதை அவர்கள் தேர்தலின் பிற்பாடு உணர்ந்து கொள்வார்கள் என மிக வேதனைப்பட்டவராக மருதமுனை மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அல்லாஹிவின் நாட்டம் - ஒட்டுமொத்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமுகத்தின் சாபம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்போது ரிசாத் பதியுதீனின் கூற்றை உண்மைப்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை மக்களும் இப்போது வேதனைப்பட்டவர்களாக ரிசாத் பதியுதீனை அனுதாப நோக்கில் பார்க்க எத்தனித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் செயற்படும் முகா தலைவரின் நெருக்கமான குழுவொன்று கிழக்கு சுகாதார அமைச்சென்பது அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்கப்பட்ட போணஸ் பதவி என்றும் ,இறுதி இரண்டரை வருடங்களுக்கு எம்பிப் பதவி நிச்சயம் வழங்கப்படும் என்றும் இப்போது அட்டாளைச்சேனை மக்களை மீண்டும் ஒரு தடவை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எனவே இறுதியாக அட்டாளைச்சேனை மக்கள் இன்னும் இன்னும் முகாவின் ஏமாற்று வித்தைகளுக்கு அடிபணியாது மாகாணங்களிலேயே குறைவான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளும் மற்றும் அதிகாரங்கள் குறைந்த இந்த கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவிக்கு சோரம் போகாதும் இனிவரும் காலங்களில் முகாவின் இந்த தில்லுமுல்லுகளை அறிந்து சமயோசிதமாக அரசியல் முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை அட்டாளைச்சேனையில் உள்ள புத்திஜீவிகள் மத்தியில் பேசப்படும் ஒரு விடயமாக இன்று எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்