Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

காதர் ஹாஜியார்


எம்.எம்.எம். ரம்ஸீன்-

கண்டி  மாவட்ட முஸ்லிம்களின் அரசியலில் மறக்க  முடியாத ஆளுமைகளில் காதர் ஹாஜியார் குறிப்பிடத்தக்கவராவார். வடகிழக்கிற்கு வெளியில் முஸ்லிம்களை அதிகளவில் கொண்ட கண்டி மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் செறிந்து வாழும்   பின்புலத்தில்  சாணக்கியமான அரசியல் முன்னெடுப்புக்கள் மூலம் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மனதில் நிலையான இடத்தை காதர் ஹாஜியார் பிடித்துக் கொண்டார்.

இதனால் தான் கண்டி மாவட்ட முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம்கள் மத்தியில் அவரின் இழப்பு சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தி விட்டது.

1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி உலப்பனையில் பிறந்த காதர் ஹாஜியார் வர்த்தகராகவே இப்பகுதி  முஸ்லிம்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தார்.

எனினும் பிற்காலத்தில் 1958 களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதேச மட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.
கம்பளையில் வசித்து வந்த முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் டபிள்யூ. பீ.பீ. திசாநாயக்கவுடன்  காதர் ஹாஜியாருக்கு ஏற்பட்ட நட்பு  அவரை தீவிர அரசியலில் ஈடுபடச் செய்தது. இதனால் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட காதர் ஹாஜியார் கண்டி மாவட்ட அரசியலில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

1988 ஆம் ஆண்டு மாகாண சபை முறை உருவாக்கப்பட்ட போது மத்திய மாகாண சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் களமிறங்கிய காதர் ஹாஜியார் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் தேசிய அரசியலுக்குள் புகுந்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொண்டார். இவர் மத்திய மாகாண சபையில் மாகாண அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் மாகாண சபை ஆட்சியில்  முதல் முஸ்லிம் அமைச்சர் என்ற அந்தஸ்தையும் பெற்றுக் கொண்டார்.

1988 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை மக்கள் ஆணை மூலம் காதர் ஹாஜியார் தக்க வைத்துக் கொண்டார். பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சகல மக்களதும் விருப்பு வாக்குகளுடனும் முன்னணியில் நிற்கும் அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.

பாராளுமன்ற அரசியலில்  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் , பிரதியமைச்சர் , அமைச்சர் முதலான பதவிகளை வகித்து தனது வகிபாகத்தை பிரதிபலித்தார்.

சுற்றாடல் துறை பிரதியமைச்சராகவும்  நகர அபிவிருத்தி அமைச்சராகவும் பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும்  பதவிகள் வகித்து தனது சேவைகளை  முன்னெடுத்த காதர் ஹாஜியார் கண்டி மாவட்ட மூவின மக்களதும் மனதில் இடம்பிடித்தவராவார்.

இதனால் இவரின் அபிவிருத்தியின் பயனை சகல மக்களும் அநுபவித்தனர்.
அரசியல் மூலம் கண்டி மாவட்ட மக்களுக்கு பிரதேச அபிருத்தியை முன்னெடுப்பதில் காதர் ஹாஜியார் தீவிரமாக இருந்து செயற்பட்டார்.
 அபிவிருத்திப்  பணிகள் தன் மூலம் குறிப்பாக பெரும்பான்மை மக்களுக்கும் எதுவித பாரபட்சங்களும் இன்றி சென்றடைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்ட காதர் ஹாஜியார் பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம் தமிழ் மக்களுக்கும்; இடையில் நல்லுறவை வளர்ப்பதற்கு கண்டி மாவட்டத்தில் ஊன்றுகோலாக இருந்தார்.

கம்பளை தொகுதியை பெரிதும் நேசித்த தனது கட்சியின் நன்மை கருதி நாவலப்பிட்டி , கலகெதர ஆகிய தொகுதிகளின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராகவும்  ஹாரிஸ்பத்துவ  தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும் இருந்து இறுதிவரை செயற்பட்டு வந்தார்.
அரசாங்கத்தின் அபிவிரு;திப் பணிகள் கம்பளை தொகுதியில் சகல பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் செலுத்திய காதர் ஹாஜியார் கம்பளை தொகுதியில் கலுகமுவ , கீரப்பனை , ஹிஜ்ராகம, பெபிளை , இல்லவதுரை , இலம்காம்வத்தை , ஆண்டியாகடவத்தை முதலான முஸ்லிம் கிராமங்களும் அதிகளவு அபிவிருத்திப் பணிகளைப் பெற்றுக் கொள்ள வழிசமைத்தார்.

கம்பளை பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாது. இஸ்லாமிய நிறுவனங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும்  அவர் செய்த உதவிகளை இன்றும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமன்றி கண்டி மாவட்டத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களாலும் சிலாகித்துக் கூறப்பட்டு வருவதைக்  காண முடிகின்றது.

முஸ்லிம்களின் அரசியல் தேசிய கட்சிகள் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை உள்வாங்கியிருந்த காதர் ஹாஜியார் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பாக சிந்திப்பதற்கான கவனயீர்ப்பை லாவகமாக செய்து வந்தார். முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரபின் உறவினரான காதர் ஹாஜியார் அரசியலில் கட்சி ரீதியில் வேறுப்பட்ட நிலைப்பாட்டுக்கு மத்தியில் சமூக அக்கறையை மையப்படுத்திய உறவைப் பேணி வந்தார்.

கட்சி அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட அவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு கண்டி மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளில்  பெரிதும் ஈடுபாடு காட்டினார்.

சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த காதர் ஹாஜியார் கடும் சுகயீனம் காரணமாக சனிக்கிழமை காலை கண்டியில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். ஆனால் அவர் கண்டி மாவட்டத்தில் மக்கள் மனதில் என்றும் மக்கள் சேவையால் நிலைத்து நிற்கின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அவரின் பிழைகளைப் பெறுத்துக் கொள்வானாக. ஆமீன். ஆமீன்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்