கதீப் முஅத்தின்களுக்கு அரச சம்பள திட்டம். அமைச்சர் ஹலீம்

(சத்தார் எம் ஜாவித்)


இலங்கையில் உள்ள கதீப் மற்றும் முஅத்தின்கள் தற்போது மிகவும் கஷ்டமான நிலைமைகளை எதிர் கொண்டுள்ளதை கவனத்திற் கொண்டும் அவர்களி;ன் சேவைகளையும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு நிரந்தர சம்பளத்திட்டத்தை ஏற்படுத்த தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதனை ஏனைய அரச ஊழியர்கள் போன்று பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இவர்களுக்கு நிரந்தர சம்பளத்திட்டத்தை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்க தான் கவனம் செலுத்துவதாகவும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கடந்த வியாழக் கிழமை (29) தனது அமைச்சில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா கதீப் முஅத்தின் நலன்புரி; அமைப்பில் பதிவு செய்யப்பட்டவர்களின் நலன்கள் கருதி அமானா தக்காபுல் திட்டத்தின் மூலம் மருத்துவ மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருவதன் ஒரு கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது வபாத்தான உலமா கட்சியின் உப தலைவர் மர்ஹ_ம் மௌலவி லியாகத் அலி அவர்களின் குடும்பத்தாருக்கு அமானா தக்காபுல் வங்கியினால் ஐந்து இலட்சத்தி எழுபதாயிரம் (5,70,000.00) ரூபா பண உதவி வழங்கி வைக்கும் நிகழ்விலேயே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், ஸ்ரீ லங்கா கதீப் முஅத்தின் நலன்புரி அமைப்பின் தேசியத் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பார், செயலாளர் நாகூர் ரஹீம் மௌலவி, அமைப்பின் ஆலோசகரும் உலமா கட்சித்தலைவருமான முபாறக் மௌலவி, காத்தான்குடி கதீப்மார் சம்மேளன செயலாளர் மௌலவி முஸ்தபா உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரிகளான முஹம்மது மலிக், பி.எம்.சி.எம்.றமீம் உள்ளிட்ட அதிகாரிகளும், விரிவுரையாளர் முஹம்மது நௌபர் அமானா தக்காபுல் நிறுவன அதிகாரிகளான முஹம்மது றாசீக், முஹம்மதுஷா இல்யாஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சங்க உறுப்பினர் மௌலவி அப்துல் ஹன்னான் அவர்களின் மணைவிக்கான மருத்துவச் செலவிற்கு ரூபா ஏழாயிரம் கதீப் சம்மேளனத்தின் பரிந்துரையின் பேரில் வங்கியினால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்