Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

கைதிகள் விவகாரம்: அழுத குழந்தைதான் பால் குடிக்கும்

கைதிகள் விவகாரம்: இருவாரங்களுக்குள் தீர்வு


ஆர்;ப்பாட்டக்காரர்களிடம் ஜனாதிபதி செயலகம் உறுதி
கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் கதறியழுது பேரணி
சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கண்டனப் பேரணியில் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணியின் இறுதியில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஏ.கே.கொடிக்கார, இரண்டு வாரங்களுக்குள் கைதிகள் விவகாரத்துக்கு ஜனாதிபதி தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
நேற்று முற்பகல் 10.30 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்பிரமுகர்கள், கைதிகளின் உறவுகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய வாசகங்களைக் கொண்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
‘இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்’ என்பதே பிரதான வாசகமாக இருந்தது.
பொன்சேக்காவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்வதில் அசமந்தப் போக்குக் காட்டுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பினர். சிறையில் உள்ளவர் களின் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் உறவுகள் கண்ணீருடன் இதில்கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றனர். எனினும், ஹில்டன் ஹோட்டலுக்கு அண்மித்த பகுதியில் வீதித்தடையை ஏற்படுத்தியிருந்த பொலிஸார் பேரணியில் சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தபோதும் பேரணியில் வந்தவர்களின் பிரதிதிநிதிகள் சிலரை மாத்திரம் ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதித் திருந்தனர்.
நீண்டகாலமாக சிறையில் உள்ளவர்களை எதுவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றையும் அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்தனர். ஜனாதிபதி சார்பில் அவருடைய இணைப்புச் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
கைதிகள் விடயத்தில் இரண்டு வாரங்க ளுக்குள் ஜனாதிபதி தீர்வொன்றைப் பெற்றுத்தருவார் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கியிருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் அரசியல் பிரமுகர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதய ராசா, நல்லையா குருபரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும் என சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.
இனங்களுக் கிடையில் குரோதத்தை வளர்த்து யுத்தத்தை ஏற்படுத்தியவர்கள் சிறைச்சாலையில் தற்பொழுது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 200 கைதிகள் அல்ல. அரசியல்வாதிகளே இனவாதத்தைத் தூண்டி யுத்தத்தை ஏற்படுத்தினர். இவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்போது தமிழ் இளைஞர்கள் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம். சகல கைதிகளையும் விடுவிக்கும்வரை நாம் தொடர்ந்தும் குரல்கொடுப்போம். கடந்த அரசாங்கம் தமது இனவாத அரசியலை கொண்டு செல்வதற்காக சிறைக்கைதிகளை சிறைகளிலேயே தடுத்துவைத்திருந்ததுடன், ஜெனீவாவைக் காட்டி அவர்களை விடுவிக்க மறுத்தது.
தற்போது ஆட்சியமைத்திருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது கைதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்தபோதும் தற்பொழுது அமைதி காக்கிறது. இராஜ தந்திர ரீதியாக ஜெனீவாவை வென்று விட்டோம் எனக் கூறிக்கொண்டு கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தமிழ் அரசியல் பிரமுகர்கள் கண்டனம்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம் புரையோடிப்போயுள்ள தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வொன்றைத் தரப்போகின்றது என வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார்.
பல வருடங்களாகத் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாவிட்டால் அதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.
இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவுக்கு ஒரு வாரத்துக்குள் பொதுமன்னிப்பு வழங்கி அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்க முடியுமாயின் ஏன் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது.
தமிழர்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சிபீடமேறியவர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக அடிக்கடி கூறிவருகின்றபோதும் கைதிகள் விடுதலை விடயத்தில் நல்லிணக்கத்துக்கான எதுவித சாதகமான நிலைப்பாட்டையும் காட்ட வில்லை. இவர்கள் எவ்வாறு நல்லிணக் கத்தை கட்டியெழுப்பப் போகின்றனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற உலகத்தில் ஏற்றுக்கொள்ளப் படாத பிழையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்வர்களே சிறைச்சாலை களில் நீண்டகாலமாக தடுத்து வைக் கப்படட்டுள்ளனர்.
விருப்பத்துக்கு மாறாக கைது செய்யப்பட்டு, பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப் படையிலேயே இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. நல்லிணக்கம் எனப் பேசிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அதனை செயலில் காண்பிக்கவில்லை யென்றும் அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்