Skip to main content

කාබනික වගාවට ජපානයේ සහය.

  ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාත්මක ජාතික කාබනික කෘෂිකර්මාන්ත වැඩ පිළිවෙලට ජපානයේ කාබනික පොහොර නිෂ්පාදන ආයතන සහයෝගය ලබා දීමට කැමැත්ත පලකර තිබේ. ඔවුන් මෙසේ පවසා ඇත්තේ පළාත් සභා හා පළාත් පාලන රාජ්‍ය අමාත්‍ය රොෂාන් රණසිංහ මහතා ජපානයේ, ශිෂෝකා පළාතේ, ෆුජී නගරයේ කවකූමිතෝ පිහිටි නගර කාබනික නිෂ්පාදන කොම්පෝස්ට් ව්‍යාපෘතියක් අධ්‍යනය කිරීමෙන් පසු ආයතනයේ ප්‍රධානීන් සමඟ සිදුකල සාකච්ඡාවකින් අනතුරුවය. ශාක කොටස් හා ගොම එක්කරමින් මහා පරිමාණ ලෙස කාබනික පොහොර නිෂ්පාදනය සිදු කරන අතර එහි නයිට්‍රජන් ප්‍රතිශතය සියයට හතරක් (4%) බවත් එය වගාවන් සදහා ඉතා හොඳ තත්වයක් බවත් පවසා සිටී. මොවුන් මේ සඳහා ගව අපද්‍රව්‍ය මූලිකව යොදාගනී. එම ආයතනය ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික වගාවන් සඳහා දැනුම ලබා දීමටත්, තාක්ෂණය ලබා දීමටත්, කාබනික පොහොර නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය සහය ලබා දීමටත් එකඟතාවය පලකර තිබේ. එම කර්මාන්ත ශාලාවේ නිරීක්ෂණ චාරිකාවකටද රොෂාන් රණසිංහ අමාත්‍යවරයා ප්‍රමුඛ පිරිසක් එක්විය. මෙම අවස්ථාවට ජපානයේ සිටින එබාරා රැස්කි (Ebora Ruske, in charge of agriculture) , ෆාන් නගාකි (Fan Nagaki) නිෂ්පාදන කළමණාකරු, chnosankio uki cop කර්මාන්ත ප්‍රධ

அமைச்சர் ரிசாத் ஜேவிபியில் சேர்வதே வடக்கு முஸ்லிம் பிரச்சினைக்கு தீர்வு


-அஸ்ரப் ஏ சமத்-

பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு   மறுக்கப்படும் உரிமைகளும்  சவால்களும் என்ற தலைப்பில் நுால் ஒன்று (28) கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது,  

நுாலின் முதற் பிரதியை இவ் வைபத்திற்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜே.வி. பி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பிணா் அநுர குமார திசாநாயக்க முசலி முன்னாள் பிரதேச சபைத் தலைவா் எஹியாவிடம் கையளித்தாா்.  நுால் விமா்சனத்தை கட்டக் கலைஞா் எஹ்யா றிசாவும், பேராதெனியா பல்கலைக்ககழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியை சிவமோகன் சிவஜோதி உரைநிகழ்த்தினாா்.  சுங்க அதிகாரி லுக்மான் உரையாற்றினாா். 

இங்கு லுக்மாணினால் 8 உறுதி மொழி வாசிக்கப்பட்டு சபைக்கு வந்திருந்தோா்களினால் நிறைவேற்றப்பட்டது.

(1) 2012 ஒக்டோபா்  10ஆம் திகதி வர்த்தமாணி அறிவித்தலை ரத்துச் செய்யதல், 

(2) 2009ஆண்டு காடுகளாக சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  எல்லைகளை மீள அமைத்தல் 

(3) எம்மில் காணியுரிமைக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் வைத்துள்ளவா்களுக்கு  சேனைப் பயிா்ச் செய்கை மற்றும் வேளான்மைக் கான நிலங்களைத்  திருப்பித் தருதல். 

(4) இப்போது கடற்படையின் விவசாய செயற்திட்டத்தின் கீழ் பயிா் செய்யப்படும் எமது நிலங்களை உரிமையாளா்களிடம் கையளித்தல், 

(5) தற்போது  காடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஏனைய காணிகளில் நாம் பாரம்பரியமாகச்  செய்து வந்த சேனைப் பயிா்ச்செய்கை பண்னை வளா்ப்பு என்பவற்றுக்கு எமக்கு அனுமதி அளித்தல்.

(6) வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்தை முசலி தெற்கு மக்களாகிய எமது வரலாற்று முக்கியத்துவமிக்க கிராமங்களான முள்ளிக்குளம் தமிழ் மரிச்சுக்கட்டி  முஸ்லீம் என்பவற்றில் இருந்து அகற்றி வேறு இடத்துக்குச் கொண்டு செல்லுதல்  போன்ற பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது. 

இங்கு உரையாற்றிய அநுர குமார திசாநயாக்க 

இந்த அரசாங்கம் வடக்கில் இடம்பெயா்ந்த சகல மக்களையும் மீளக்குடியேற்ற ஒரு திடகாத்திரமானதொரு பொறிமுறையைச் செய்தல் வேண்டும். யுத்தம் முடிவடைந்தால் அங்கு ரானுவத்தினரோ, கடற்படையினரோ பாதுகாப்பு வலயம் என்ற போா்வையில் அப்பாவி மக்களின் நிஜ பூமிகளை பிடித்துக் கொண்டிருக்காமல் அவைகள்  மீளக் கையளிக்கப்படல் வேண்டும். இப் பூமிகளை அப் பிரதேச அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவாறு திட்டமிட்டு அதனை வெளிநாட்டவா்களுக்கு உல்லாச ஹோட்டல்கள் கட்டுவதற்கு பயண்படுத்துகின்றனா். யுத்தம் முடிவடைந்ததன் பின்னா் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே பாதுகாப்பு படையினா் ஊடாக காணிகளை அபகரித்தாா். 

பேராசிரியா் ஹஸ்புல்லாவின் நுாலின் சொல்லியிருக்கும் தகவல்களுக்கு ஏற்ப யுத்தமுடிவடைந்த நிலையில் அம்மக்கள் மீளக் குடியமாத்தப்படல் வேண்டும் என்ற  நிலைக்கு எமது கட்சி ஜே.வி.பி பூரண ஆதரவை வேண்டுகின்றது. என அநுர குமார திசாநாயக்க தெரிவித்தாா்

இதேவேளை அமைச்சர் ரிசாத் ஆளுங்கட்சியின் அமைச்சராக இருந்தும் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜே வி பியை துணைக்கழைத்திருப்பது என்பது அவரால் இந்த அரசாங்கத்துடன் இருந்தும் மக்களுக்கு பலனில்லை என்பதை காட்டுகிறது. ஆகவே அமைச்சு பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜே வி பியுடன் இணைந்தால் இப்பிரச்pனைகளை உடனடியாக தீர்க்க முடியும் என கலந்து கொண்ட பலர் பேசிக்கொண்டனர். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்